Published:Updated:

வாசகர்களுக்கு வணக்கம்: திரௌபதி முர்மு: வாழ்த்துகளும்... எதிர்பார்ப்புகளும்!

திரௌபதி முர்மு

குடியரசுத் தலைவர் பதவி என்பது வெறும் ரப்பர் ஸ்டாம்ப் தான் என்று பொதுவாக விமர்சிக்கப்பட்டாலும், முப்படைகளின் தலைவர், குடியரசுத் தலைவர்தான்.

வாசகர்களுக்கு வணக்கம்: திரௌபதி முர்மு: வாழ்த்துகளும்... எதிர்பார்ப்புகளும்!

குடியரசுத் தலைவர் பதவி என்பது வெறும் ரப்பர் ஸ்டாம்ப் தான் என்று பொதுவாக விமர்சிக்கப்பட்டாலும், முப்படைகளின் தலைவர், குடியரசுத் தலைவர்தான்.

Published:Updated:
திரௌபதி முர்மு
குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றிபெற்று, இந்தியரிவின் 15-வது குடியரசுத் தலைவராக ஜூலை 25-ம் தேதி பதவியேற்கவிருக்கும் திரௌபதி முர்முவுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். இரண்டாவது பெண் குடியரசுத் தலைவர், பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த முதல் குடியரசுத் தலைவர் என்ற பெருமைகளை திரௌபதி முர்மு பெற்றிருக்கிறார்.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கல்வி, சமூகம், பொருளாதாரம் போன்றவற்றில் மிகவும் பின்தங்கிய நிலையில் பழங்குடி சமூகத்தினர் இருந்தபோதிலும், தேசத்தின் உச்ச பதவியை திரௌபதி முர்மு அடைந்திருப்பது, அதிகாரத்தை நோக்கிய பழங்குடி சமூகத்தினரின் பயணத்தில் ஒரு மைல் கல்!

திரெளபதி முர்மு, நரேந்திர மோடி
திரெளபதி முர்மு, நரேந்திர மோடி
கோப்புப் படம்

திரௌபதி முர்மு பா.ஜ.க-வைச் சேர்ந்தவர் என்பதும், பா.ஜ.க-வின் வேட்பாளராக குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டார் என்பதும் வெளிப்படையானவை. குடியரசுத் தலைவர் தேர்தலில் முர்முவை எதிர்த்து எதிர்க் கட்சிகளின் பொதுவேட்பாளராக நிறுத்தப்பட்ட யஷ்வந்த் சின்ஹா 36 சதவிகித வாக்குகளையே பெற்றிருக்கிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்காத ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம், ஜார்க்கண்ட் முக்தி மோச்சா உட்பட பல கட்சிகள் முர்முவுக்கு ஆதரவாக வாக்களித்ததுதான், அவரது மிகப்பெரிய வெற்றிக்கு முக்கியக் காரணம். பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் பலரின் ஆதரவு அவருக்குக் கிடைத்தது.

குடியரசுத் தலைவர் பதவி என்பது வெறும் ரப்பர் ஸ்டாம்ப் தான் என்று பொதுவாக விமர்சிக்கப்பட்டாலும், முப்படைகளின் தலைவர், குடியரசுத் தலைவர்தான். பல்வேறு அதிகாரங்கள் கொண்ட அந்தப் பதவியில் இருந்த அப்துல் கலாம், அனைவரும் எளிமையாகக் குடியரசுத் தலைவரை அணுகமுடியும் என்று காட்டினார். ராம்நாத் கோவிந்த் தன் பதவிக்காலத்தில், அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்புகளை உயர்த்திப் பிடித்ததற்காக அனைத்து கட்சியினரும் நன்மதிப்பைப் பெற்றார். அதேபோலவே, பழங்குடி சமூகத்தை கல்வி ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச்செல்ல முர்மு முக்கியப் பங்காற்ற வேண்டும் என்ற விருப்பத்தையும் பலர் தெரிவித்திருக்கிறார்கள்.

யஷ்வந்த் சின்ஹா
யஷ்வந்த் சின்ஹா
ட்விட்டர்

குடியரசுத் தலைவர் தேர்தலில் பொதுவேட்பாளரை நிறுத்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், சி.பி.எம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா உள்ளிட்ட அத்தனை எதிர்க் கட்சிகளின் தலைவர்களும், திரௌபதி முர்முவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்கள். அத்துடன், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலராக இருந்து மதச்சார்பற்ற, ஜனநாயக, குடியரசு என்கிற இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்புகளைப் பாதுகாக்க வேண்டும், அவற்றை வலுப்படுத்த வேண்டும் என்று திரௌபதி முர்முவுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

குடியரசுத் தலைவர் பதவிக்கான தனது தேர்வை அர்த்தம் நிறைந்த ஒன்றாக மாற்றும் வகையில் சாதி, மதம், இனம், கட்சி போன்ற எந்தப் பாகுபாடுமின்றி, அனைத்துப் பகுதி மக்களுக்கும் அரசியல் சட்டம் வழங்கியிருக்கும் அத்தனை உரிமைகளும் கிடைப்பதை திரௌபதி முர்மு உறுதிசெய்யட்டும்!