Published:Updated:

டிஜிட்டல் தலையங்கம்: வரிக்கு மேல் வரி... இதற்குத்தான் ஆசைப்பட்டார்களா மக்கள்!

டிஜிட்டல் தலையங்கம் -

விலைவாசி உயர்வு ஏற்கெனவே உச்சத்தில் இருக்கிறது. குறிப்பாக உணவுப்பொருட்களின் விலைகள் உயர்ந்து, மக்கள் வாங்கமுடியாத நிலைக்குப் போயிருக்கின்றன.

டிஜிட்டல் தலையங்கம்: வரிக்கு மேல் வரி... இதற்குத்தான் ஆசைப்பட்டார்களா மக்கள்!

விலைவாசி உயர்வு ஏற்கெனவே உச்சத்தில் இருக்கிறது. குறிப்பாக உணவுப்பொருட்களின் விலைகள் உயர்ந்து, மக்கள் வாங்கமுடியாத நிலைக்குப் போயிருக்கின்றன.

Published:Updated:
டிஜிட்டல் தலையங்கம் -
சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax) முறை நடைமுறைக்கு வந்து இன்றோடு ஐந்து ஆண்டுகள் முடிவடைகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் ஜி.எஸ்.டி பற்றிய பல்வேறு குளறுபடிகளுக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமே இருந்ததில்லை. இனியாவது வரி விகிதங்கள் குறைந்து, மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள் எல்லோரும் எதிர்பார்த்திருந்த நிலையில், நேற்று சண்டிகரில் முடிவடைந்த 47-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில், பல பொருள்களுக்கான வரி விகிதம் அதிகமாக உயர்த்தப்பட்டு இருப்பதைக் கண்டு மக்கள் மனம் கொதித்துப் போயிருக்கிறார்கள்.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கரண்டி, கத்தி, கிரைண்டர், எல்.இ.டி பல்புகள், பேனா மை என பல பொருள்களுக்கு 18 சதவிகிதமாக ஜி.எஸ்.டி வரி உயர்த்தப்பட்டுள்ளது. பாக்கெட்டில் அடைந்து லேபிள் ஒட்டி விற்கப்படும் இறைச்சி, மீன், பனீர், தேன், உலர்ந்த காய்கறிகள், கோதுமை மற்றும் பிற தானியங்கள், தயிர் உள்ளிட்ட பால் பொருள்களுக்கு 5% ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டுள்ளது.

வங்கிக் காசோலைகளுக்கு அளிக்கப்பட்டிருந்த வரி விலக்கு ரத்து செய்யப்பட்டு, அவற்றுக்கும் 18% ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டுள்ளது. ரூ.1000 வரை வாடகையுள்ள ஹோட்டல் அறைகளுக்கு 12% ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டு இருக்கிறது.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

வரி என்பது அரசுக்கு அவசியம் தேவைதான். அது ஒரு அரசுக்கு இருக்கும் தன்னிகரில்லா அதிகாரமும்கூட. மக்களுக்கான நலத்திட்டங்களை குறைவில்லாமல் நடைமுறைப்படுத்த வேண்டும் எனில், வரிகள் அவசியம் விதிக்கப்பட வேண்டும். ஆனால், இந்த வரி விதிப்பு எப்படி இருக்க வேண்டும்?

பூவிலிருந்து தேனை நுகரும் வண்டு, வலி தெரியாமல் அதை எடுப்பது போல மக்களிடம் இருந்து வரியை வசூலிக்க வேண்டும் என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வரி விதிப்பதற்கு இலக்கணம் வகுத்திருக்கிறார் கெளடில்யர். இது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் அனைத்து மாநில நிதி அமைச்சர்களும் அடங்கிய ஜி.எஸ்.டி கவுன்சிலுக்குத் தெரியாதோ என்னவோ, எல்லாப் பொருள்களின் மீதும் சகட்டுமேனிக்கு வரியை உயர்த்தியுள்ளனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக ஜி.எஸ்.டி மூலம் கிடைக்கும் வரி வருமானமானது மாதந்தோறும் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. இப்போது கொஞ்சம் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் பொருளாதாரம், அதிலிருந்து வெளிவந்தபின், மாதந்தோறும் ரூ.1.50 லட்சம் கோடிக்குக் குறையாமல் ஜி.எஸ்.டி வரி கிடைக்கும் என்கிறார்கள் நிபுணர்கள். இவ்வளவு வரி ஏற்கெனவே கிடைக்கும் நிலையில், மேலும் மேலும் வரி விதிப்பது எந்த வகையில் நியாயம்?

விலைவாசி உயர்வு ஏற்கெனவே உச்சத்தில் இருக்கிறது. குறிப்பாக உணவுப்பொருட்களின் விலைகள் உயர்ந்து, மக்கள் வாங்கமுடியாத நிலைக்குப் போயிருக்கின்றன.
GST
GST

பணவீக்கம் அதிகமாக இருப்பதைக் குறைக்க ரிசர்வ் வங்கியானது வட்டி விகிதத்தை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், மக்கள் அன்றாட வாழ்க்கையில் அவசியமாக பயன்படுத்தும் பொருள்களுக்கான வரியை உயர்த்தினால், பொருள்கள் மற்றும் சேவைகளுக்கான விலை இன்னும் அதிகரிக்கத்தானே செய்யும்?

அரிசி, கோதுமை, பால் என தினம் தினம் பயன்படுத்தும் பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டால், ஒவ்வொரு குடும்பத்தின் மாதாந்திர பட்ஜெட்டும் தாறுமாறாக உயருமே! இதனால் மக்கள் பெருங்கஷ்டத்துக்கு உள்ளாவார்களே! இதை எல்லாம் மத்திய அரசு ஏன் யோசித்துப் பார்க்க மறுக்கிறது? மக்கள் மீது அக்கறையற்ற வரிவிதிப்புப் போக்கை ஜி.எஸ்.டி கவுன்சில் கைவிட வேண்டும்.