Election bannerElection banner
Published:Updated:

அன்பில் மகேஷ்: சட்டசபை தேர்தல்... ஒரு பார்வை! #TNelections2021

அன்பில் மகேஷ்
அன்பில் மகேஷ்

இளம் வயதிலேயே அன்பில் பொய்யாமொழி இறந்து போக, அவரது மகனான அன்பில் மகேஷ், ஸ்டாலின் குடும்பத்தில் இன்னொரு பிள்ளையாகவே மாறிப்போனார். ஸ்டாலின் வீட்டிலேயே வளர்ந்ததில், உதயநிதி ஸ்டாலினுக்கு நெருக்கமான நண்பராக மாறியதில் வியப்பேதும் இல்லை.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் குடும்ப நண்பரின் வாரிசு, திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் நெருக்கமான நண்பர் என்பதால் அன்பில் மகேஷ் போட்டியிட்ட திருவெறும்பூர் தொகுதி, அரசியல் பார்வையாளர்களைத் தாண்டி உடன்பிறப்புகளாலும் உற்று நோக்கப்பட்ட தொகுதியாக இருந்தது. மூன்று தலைமுறைகளாக திமுகவின் விசுவாசியாக இருக்கும் அன்பில் தர்மலிங்கம் குடும்பத்தைச் சேர்ந்த அன்பில் மகேஷ், திருச்சி திமுகவில் அசைக்க முடியாத சக்தியாக வலம் வருகிறார். அன்பில் தர்மலிங்கம், கருணாநிதிக்கு ஆத்மார்த்தமான நண்பராக திகழ்ந்தார் என்றால், அவரின், மகன் அன்பில் பொய்யாமொழி, தற்போதைய திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு நெருங்கிய நண்பராக இருந்தார். அப்போதிருந்தே அன்பில் குடும்பத்தினர், ஸ்டாலின் குடும்பத்துக்கு மிக நெருக்கமானவர்களாக மாறிவிட்டனர். துரதிர்ஷ்டவசமாக இளம் வயதிலேயே அன்பில் பொய்யாமொழி இறந்து போக, அவரது மகனான அன்பில் மகேஷ், ஸ்டாலின் குடும்பத்தில் இன்னொரு பிள்ளையாகவே மாறிப்போனார். ஸ்டாலின் வீட்டிலேயே வளர்ந்ததில், உதயநிதி ஸ்டாலினுக்கு நெருக்கமான நண்பராக மாறியதில் வியப்பேதும் இல்லை. கட்சித் தலைமையுடனான அந்த நெருக்கம் அவரை, திமுகவின் மாநில இளைஞரணி துணை அமைப்பாளராகவும், திமுகவின் திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளராகவும் உயர்த்தியது. அதுமட்டுமல்லாது, கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தலில் இதே திருவெறும்பூர் தொகுதியில் திமுக வேட்பாளராகவும் களமிறங்கிய அன்பில் மகேஷ், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கலைச்செல்வனை 16,695 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தார்.

அன்பில் தர்மலிங்கம் - கருணாநிதி; அன்பில் பொய்யாமொழி - ஸ்டாலின்; உதயநிதி - அன்பில் மகேஷ்
அன்பில் தர்மலிங்கம் - கருணாநிதி; அன்பில் பொய்யாமொழி - ஸ்டாலின்; உதயநிதி - அன்பில் மகேஷ்

அன்பிலுக்கு 85,950 வாக்குகள் கிடைத்திருந்தன. திருவெறும்பூர் தொகுதியைப் பொறுத்தவரை அது திமுகவின் கோட்டை என்றே சொல்லலாம். இத்தொகுதியில் திமுக 6 முறையும், அதிமுக 3 முறையும் வென்றுள்ளன. காங்கிரஸ், மார்க்சிஸ்ட், தேமுதிக ஆகிய கட்சிகள் தலா ஒருமுறை வென்றுள்ளன. இந்தத் தேர்தலில் அன்பிலை எதிர்த்து அதிமுக வேட்பாளராக அக்கட்சியின் தெற்கு மாவட்டச் செயலாளர் ப.குமார், அமமுகவின் எஸ்.செந்தில்குமார், மக்கள் நீதி மய்யத்தின் முருகானந்தம், நாம் தமிழர் கட்சியின் வெ.சோழசூரன் உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்களாக களமிறங்கினர். இருப்பினும் அன்பில் மகேஷ் மற்றும் குமார் இருவருமே அரசியல் செல்வாக்கு, பண பலம் உள்ளிட்டவற்றில் சம பலத்துடன் இருப்பவர்கள் என்பதால், இருவருக்கும் இடையேதான் கடும் போட்டி காணப்பட்டது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு