Published:Updated:

``2016-ல் பார்த்ததைவிட 10 மடங்கு அதிகமான பிரசாரங்கள், வியூகங்கள்... பாமக 2.0” - அன்புமணி ராமதாஸ்

அன்புமணி

``2016-ல் பார்த்த `மாற்றம் முன்னேற்றம்’ அன்புமணியைவிட 10 மடங்கு அதிகமான பிரசாரங்கள், வியூகங்களை பாமக 2.0 மூலம் பார்க்கவிருக்கிறீர்கள்'' என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

``2016-ல் பார்த்ததைவிட 10 மடங்கு அதிகமான பிரசாரங்கள், வியூகங்கள்... பாமக 2.0” - அன்புமணி ராமதாஸ்

``2016-ல் பார்த்த `மாற்றம் முன்னேற்றம்’ அன்புமணியைவிட 10 மடங்கு அதிகமான பிரசாரங்கள், வியூகங்களை பாமக 2.0 மூலம் பார்க்கவிருக்கிறீர்கள்'' என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Published:Updated:
அன்புமணி

கிருஷ்ணகிரியில், பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் கிருஷ்ணகிரி - சேலம் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்தப் பொதுக்குழுக் கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாமக கட்சியை வலுப்படுத்தும் பணியில் தீவிரமாக இறங்கியிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டுவருகிறது.

பா.ம.க நிறுவனர் ராமதாஸ்
பா.ம.க நிறுவனர் ராமதாஸ்

இந்த நிலையில், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கிருஷ்ணகிரியில் நேற்று, ''புதிதாகப் பொறுப்பேற்றுள்ள நிர்வாகிகள் அனைவரும், அனைத்து கிராமங்களுக்கும் சென்று ஒரு மாத காலத்துக்குள் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடியைப் பறக்கவிட வேண்டும். மக்களின் மனநிலைக்கு ஏற்ப கட்சியின் நிர்வாகத்தை இயக்கவேண்டிய சூழ்நிலை தற்போது உள்ளது.

2016-ல் பார்த்த 'மாற்றம், முன்னேற்றம், அன்புமணியை' விட 10 மடங்கு அதிகமான பிரசாரங்கள், வியூகங்களை பாமக 2.0 மூலம் பார்க்கவிருக்கிறீர்கள். கடந்த 55 ஆண்டு காலத்தில் இரண்டு திராவிடக் கட்சிகள் மட்டுமே மாறி மாறி தமிழ்நாட்டை ஆட்சி செய்துகொண்டிருக்கின்றன. மக்களிடையே மாற்றத்துக்கான ஏக்கம் இருக்கிறது. அதை பாமக-வால் மட்டுமே நிறைவேற்ற முடியும்'' என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism