Published:Updated:

``மூன்றரை லட்சம் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்"- அன்புமணி கோரிக்கை

அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள மூன்றரை லட்சம் பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

``மூன்றரை லட்சம் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்"- அன்புமணி கோரிக்கை

தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள மூன்றரை லட்சம் பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

Published:Updated:
அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள மூன்றரை லட்சம் பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், ``அரசு காலி பணியிடங்களை நிரப்புவதற்கு பதிலாக ஒழிக்க முயல்வதா... தமிழ்நாடு அரசுத் துறைகளில் ஐந்தாண்டுகளுக்கு மேல் நிரப்பப்படாமல் காலியாக உள்ள பணியிடங்களையும், பத்தாண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் தற்காலிகப் பணியிடங்களையும் ரத்துசெய்வது குறித்து ஆய்வு செய்வதற்காக குழு ஒன்றை அமைக்க அரசு ஆணையிட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் அரசுப் பணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்துவரும் நிலையில், இது பெரும் பாதகத்தையே ஏற்படுத்தும்.

தமிழ்நாடு அரசுத் துறைகளில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் நிரப்பப்படாமல் காலியாக இருக்கும் நிலையில், அந்தப் பணியிடங்கள் உருவாக்கப்பட்டதன் நோக்கம் தாமாகவே நிறைவேறுவதாக அரசு நினைப்பது முற்றிலுமாக மாயைதான். அந்தப் பணியிடங்களுக்கான பணிகளை பிற ஊழியர்கள்தான் பகிர்ந்துகொள்கின்றனர். அதனால் அரசுத் துறை அலுவலகங்களில் பணிகளின் வேகம் பாதிக்கப்படுகிறது. பல துறைகளில் மக்களுக்கு 10 நாள்களில் வழங்கப்படவேண்டிய சேவைகள் 15 நாள்களுக்கு மேலாகியும் கிடைப்பதில்லை. இந்த உண்மைகளையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, அரசு அலுவலகங்களில் பணிகள் தடைப்படாமல் நடக்கின்றன என்று கூறி, அந்தப் பணியிடங்களை ரத்துசெய்யத் துடிப்பது அநீதி ஆகும்.

முதல்வர் ஸ்டாலின் | திமுக
முதல்வர் ஸ்டாலின் | திமுக

தமிழ்நாடு அரசுத் துறைகளில் மூன்றரை லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், அவற்றை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேலாக பா.ம.க வலியுறுத்திவருகிறது. ஆனால், ஒவ்வோர் ஆண்டும் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதே தவிர குறையவில்லை. அதற்குக் காரணம், காலியிடங்களை அரசு நிரப்பாததுதான். காலியிடங்களை நிரப்பாமல் வைத்துவிட்டு, ஐந்தாண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் காலியிடங்களை ரத்துசெய்யத் துடிப்பது அப்பட்டமான ஆட்குறைப்பு நடவடிக்கைதான். இதன் முடிவில் பத்தாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் தற்காலிகப் பணியாளர்கள் வேலை இழக்க நேரிடும். அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கும். இது மிகப்பெரிய சமூக அநீதி.

அன்புமணி, ராமதாஸ்
அன்புமணி, ராமதாஸ்

2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தி.மு.க வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், அரசுத் துறைகளிலும், கல்வி நிறுவனங்களிலும் காலியாக உள்ள மூன்றரை லட்சம் காலியிடங்கள் நிரப்பப்படும். புதிதாக 2 லட்சம் பணியிடங்கள் உருவாக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், இன்றுவரை அரசுத்துறைகளில் ஒரு பணியிடம்கூட புதிதாக உருவாக்கப்படவில்லை. அதேபோல், கடந்த 15 மாதங்களில் நிரப்பப்பட்ட அரசுப் பணி காலியிடங்களைவிட, புதிதாக உருவாக்கப்பட்ட காலியிடங்களின் எண்ணிக்கை மிக அதிகம். இத்தகைய சூழலில் காலியாக உள்ள மூன்றரை லட்சம் பணியிடங்களை ஒழிக்க நினைப்பது நியாயமல்ல. இந்த முயற்சியை அரசு கைவிட வேண்டும். மாறாக, தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள மூன்றரை லட்சம் பணியிடங்களை உடனடியாக நிரப்ப தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்'' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.