Published:Updated:

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வு!

அன்புமணி ராமதாஸ் ( Twitter/@drramadoss )

பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் அன்புமணி ராமதாஸ்.

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வு!

பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் அன்புமணி ராமதாஸ்.

Published:Updated:
அன்புமணி ராமதாஸ் ( Twitter/@drramadoss )

2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கும், 2026-ம் ஆண்டு வரவிருக்கிற தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலுக்கும் சேர்த்து பா.ம.க முழு வேகத்துடன் தயாராகிவருகிறது. அதற்கான பணிகளும் முழுமூச்சுடன் நடைபெற்றுவருகின்றன.

இந்த நிலையில், பா.ம.க சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம், சென்னை திருவேற்காட்டில் உள்ள திருமண மண்டபத்தில், இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு பாமக நிறுவனா் ராமதாஸ் தலைமை வகித்தார். மேலும் தலைவா் ஜி.கே.மணி கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினா்கள், சிறப்பு விருந்தினா்கள் என அனைவரும் பங்கேற்றனர்.

அன்புமணி - ஜி.கே.மணி
அன்புமணி - ஜி.கே.மணி

ஜி.கே.மணி தலைவராக இருந்துவரும் நிலையில், கட்சியின் புதிய தலைவராக, தற்போது இளைஞரணித் தலைவராக இருக்கும் அன்புமணி தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் அன்புமணி தற்போது பா.ம.க-வின் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஆரம்பகாலத்தில் ஆசிரியராகப் பணியாற்றிவந்த ஜி.கே.மணி ராமதாஸின் அரசியல் கொள்கையால் கவரப்பட்டு, வன்னியர் சங்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். பா.ம.க தலைவராக, ஜி.கே.மணி 25 ஆண்டுகளாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அன்புமணியை, ராமதாஸ் கட்டி தழுவி வாழ்த்துகள் கூறினார்.

இது தொடர்பான ட்விட்டர் பதிவில் ராமதாஸ், ``பா.ம.க-வின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு எனது வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism