Published:Updated:

`என்னிடம் ஏராளமான திட்டங்கள் உள்ளன!’ - `முப்படைகள்’ கூட்டத்தில் அன்புமணி

அன்புமணி
அன்புமணி

எதுவுமே தெரியாமல் ஸ்டாலின் பேசி வருகிறார். அதனால் அவர் தெரிந்துகொண்டு பேசவேண்டும். தற்போது கொண்டுவந்திருக்கும் குடியுரிமைச் சட்டம் யாருடைய குடியுரிமைகளையும் பறிப்பதற்கான சட்டம் கிடையாது.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை அடுத்த பனையபுரம் தொகுதி பா.ம.க சார்பில் அன்புமணியின் தம்பிகள், தங்கைகள் மற்றும் மக்கள் படைகள் போன்றவற்றின் முப்படைகள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி, ``இந்தத் தொகுதியில் கடந்த எம்.பி தேர்தலில் நமது கூட்டணி தோல்வியைத் தழுவியது எனக்கு மன வருத்தத்தைக் கொடுத்தது. ஆனால், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வெற்றியின் மூலம் இது பா.ம.கவின் கோட்டைதான் என்பதை நிருபித்துவிட்டீர்கள்.

`என்னிடம் ஏராளமான திட்டங்கள் உள்ளன!’ - `முப்படைகள்’ கூட்டத்தில் அன்புமணி

அதற்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். 2021 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் தேர்தலில் பா.ம.க ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் கல்வி, விவசாயம், வேலைவாய்ப்பு, சுகாதாரம் போன்றவை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான ஏராளமான திட்டங்கள் என்னிடத்தில் உள்ளன. ஆனால், உங்களால்தான் அவற்றை நிறைவேற்ற முடியும். அதைத் தெளிவுபடுத்துவதற்காகத்தான் இந்தக் கூட்டம். பா.ம.க ஆட்சிக்கு வந்தால் ஏற்கெனவே கூறியபடி, தொடக்கக் கல்வி கல்லூரிப் படிப்பு வரை அரசு, தனியார் பள்ளி என்ற பாரபட்சமின்றி மாணவர்கள் இலவசமாகப் படிக்கலாம்.

அதேபோல் இருதய அறுவை சிகிச்சை முதல் புற்றுநோய் சிகிச்சை உள்ளிட்ட அனைத்து வித நோய்களுக்கும் இலவச சிகிச்சையின் மூலம் குணபடுத்தப்படும். தமிழ்நாட்டிலுள்ள கரும்பு விவசாயிகளுக்கு ரூ.1,200 கோடி நிலுவை பணம் பாக்கியுள்ளது. அதையெல்லாம் மாற்றி அமைக்கின்ற திட்டங்கள் என்னிடம் உள்ளன. கடந்த 50 ஆண்டுக்காலமாக இரண்டு கட்சிகளும் மாறி, மாறி ஆட்சி செய்தாலும் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கவில்லை. ஆனால், நாம் ஆட்சிக்கு வந்தால் 5 ஆண்டுகளில் 50 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும்.

அன்புமணி, ஸ்டாலின்
அன்புமணி, ஸ்டாலின்

குடியுரிமை திருத்தச் சட்டத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு துரோகம் செய்து விட்டதாக தி.மு.க வினர் கூறி வருகின்றனர். தமிழகத்தில் 22 ஆண்டுகளும், மத்தியில் 18 ஆண்டுகளும் ஆட்சிசெய்த போது தி.மு.க இலங்கைத் தமிழர்களுக்காக எதையுமே செய்யவில்லை. 6 லட்சம் இலங்கைத் தமிழர்களுக்கு இதுவரை குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. இங்கு குடியுரிமையைப் பெற்றால் இலங்கை நாட்டின் குடியுரிமைச் சட்டம் 21-ன் படி அங்கு அவர்களது குடியுரிமை ரத்தாகும். எந்த நாட்டில் குடியுரிமை பெற வேண்டும் என்பதை இலங்கைத் தமிழர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால், இதைப்பற்றி எதுவுமே தெரியாமல் ஸ்டாலின் பேசி வருகிறார். அதனால் அவர் தெரிந்துகொண்டு பேசவேண்டும்.

தற்போது கொண்டுவந்திருக்கும் குடியுரிமைச் சட்டம் யாருடைய குடியுரிமைகளையும் பறிப்பதற்கான சட்டம் கிடையாது. இங்கு வசிப்பவர்களுக்குக் குடியுரிமை வழங்குவதற்காகத்தான் அந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

`விவாதங்களில் நம்பர் ஒன் ரவீந்திரநாத்; அன்புமணி..?!' -அதிர்ச்சி கொடுத்த நாடாளுமன்ற புள்ளிவிவரம்

இலங்கைத் தமிழர்களுக்குப் பச்சை துரோகத்தைச் செய்தது தி.மு.கதான். தமிழகத்தில் மாற்றம் வரவேண்டும் என்றால் இங்கு வந்திருக்கும் தங்கைகள், தம்பிகள், மக்களாகிய நீங்கள் உங்கள் ஊர் மக்களிடம் நான் கூறிய திட்டங்களை எடுத்துச் சொல்லி ’அன்புமணிக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்’ எனக் கேட்க வேண்டும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு