Published:Updated:

களத்தில் அன்புமணி... பாமக-வுக்குப் புத்துணர்வூட்ட வைத்திருக்கும் வியூகங்கள் என்னென்ன?!

அன்புமணி - பாமக

2026 தேர்தலை முன்வைத்து பாமக-வில் பல்வேறு வியூகங்கள் வகுக்கப்பட்டுவருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அது குறித்து பாமக-வின் முன்னணி நிர்வாகி ஒருவரிடம் பேசினோம்.

களத்தில் அன்புமணி... பாமக-வுக்குப் புத்துணர்வூட்ட வைத்திருக்கும் வியூகங்கள் என்னென்ன?!

2026 தேர்தலை முன்வைத்து பாமக-வில் பல்வேறு வியூகங்கள் வகுக்கப்பட்டுவருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அது குறித்து பாமக-வின் முன்னணி நிர்வாகி ஒருவரிடம் பேசினோம்.

Published:Updated:
அன்புமணி - பாமக

தருமபுரி காவிரி உபரிநீர்த் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி மூன்று நாள்கள் நடைப்பயணத்தை நிறைவு செய்திருக்கிறார் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ். கட்சியின் தலைவரானதற்குப் பிறகு ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிரான போராட்டம், போதைப்பொருள்கள் ஒழிப்பது தொடர்பாக ஆர்ப்பாட்டம், அதிரடியான அறிக்கைகள், தொடர்ச்சியான மக்கள் சந்திப்பு எனச் சுழன்றடித்துவருகிறார் அன்புமணி. 2026 சட்டமன்றத் தேர்தலை கணக்கில்கொண்டு, பல புதிய வியூகங்களை வகுத்து அவர் மக்களைச் சந்திக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

பா.ம.க தலைவராக அன்புமணி ராமதாஸ்
பா.ம.க தலைவராக அன்புமணி ராமதாஸ்

பாமக-வில் கட்சியின் இளைஞரணித் தலைவராக அன்புமணி ராமதாஸ் செயல்பட்டபோது, அவர் களத்தில் இறங்கி வேலை செய்வதில்லை என்கிற மிகப்பெரிய அதிருப்தி கட்சித் தொண்டர்களுக்கு இருந்தது. அதைத் தகர்க்கும்விதமாக, கடந்த ஏப்ரல் மாதம் மாநிலம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சுற்றுப்பயணம் சென்று நிர்வாகிகளைச் சந்தித்தார் அன்புமணி. மே 28-ம் தேதி சென்னை திருவேற்காட்டில் நடந்த பாமக சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து செங்கல்பட்டு, திருவள்ளூர், கரூர், திருப்பூர் எனப் பல மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பாமக கொடியை ஏற்றிவைத்து மக்களைச் சந்தித்தார். மறுபுறம், போதைப்பொருள்களை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் பாமக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்தில் அன்புமணி கலந்துகொண்டு உரையாற்றினார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதேபோல, ஆன்லைன் சூதாட்டத்தைத் தடைசெய்யவும் சென்னையில் போராட்டம் நடத்தப்பட்டது. அதோடு, உள்துறைச் செயலாளர் பணீந்திர ரெட்டியிடம் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடைசெய்ய நேரில் சென்று கோரிக்கை விடுத்தார் அன்புமணி. இந்த நிலையில் தற்போது, தருமபுரி - காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி மூன்று நாள் நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார் அன்புமணி.

கடந்த 19-ம் தேதி ஓகேனக்கல்லில் தொடங்கிய பயணம், பென்னாகரம், இண்டூர், நல்லம்பள்ளி, இலக்கியம்பட்டி, தருமபுரி, சோலைக்கொட்டாய், கடத்தூர், கம்பைநல்லூர், மொரப்பூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி வழியாக ஞாயிற்றுக்கிழமை மாலை பொம்மிடியில் நிறைவடைந்தது. இந்த நடைப்பயணத்தைப்போல, 2026 தேர்தலை முன்வைத்து பாமக-வில் பல்வேறு வியூகங்கள் வகுக்கப்பட்டுவருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அது குறித்து பாமக-வின் முன்னணி நிர்வாகி ஒருவரிடம் பேசினோம்.

களத்தில் அன்புமணி... பாமக-வுக்குப் புத்துணர்வூட்ட வைத்திருக்கும் வியூகங்கள் என்னென்ன?!

``தொடர்ச்சியாக மக்களைச் சந்தித்துக்கொண்டே இருப்பதுதான் எங்களின் வேலைத் திட்டம். ஒவ்வொரு பகுதியிலும் களவு ஆய்வு மேற்கொண்டு, அங்குள்ள பிரச்னைகளைக் கண்டறிந்து அதற்கான தீர்வுகளை நோக்கி நகர்வதுதான் எங்களின் செயல்திட்டம். உதாரணமாக, காவிரி உபரிநீருக்காக அண்ணன் நடைப்பயணம் செல்ல, `தீர்வு தந்த முதல்வருக்கு நன்றி... முதல்வருக்கு நன்றி’ என திமுக-வினர் போஸ்டர் ஒட்டுகிறார்கள். இதுமட்டுமல்ல, தமிழகம் முழுவதுமுள்ள நீராதாரங்கள் சார்ந்த பிரச்னைகளைக் கையிலெடுத்துப் போராட எங்களுக்குத் தலைமை உத்தரவிட்டுள்ளது. காரணம், காலநிலை மாற்றம் குறித்தும், நீர்நிலைகளைப் பத்திரப்படுத்துவது குறித்தும் இப்போது பேசாவிட்டால், அடுத்த தலைமுறைக்கு விவசாயத்தைக் கொண்டு செல்ல முடியாது.

அதேபோல, நிர்வாகிகள் மாற்றமும் தொடர்ந்து நிகழ்ந்துவருகிறது. முதற்கட்டமாக சென்னையில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், கட்சிக் கட்டமைப்பை வலுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், மக்கள் பிரச்னைகளைக் கையிலெடுத்துத் தீர்வுகாண்பதுதான் எங்களின் முதல் திட்டம். இது ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மாறுபடும். உதாரணமாக நெய்வேலியில், உள்ளூர் மக்களுக்கு வேலையில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து போராடிவருகிறோம்.

திருமா
திருமா

அதேபோல, சாதியரீதியான பிரிவினைகள் உள்ள இடங்களில், சமத்துவத்தைக் கொண்டுவருவதற்கான வேலைகளில், அந்தந்தச் சமூகங்களைச் சேர்ந்த தலைவர்களைச் சந்திக்க முடிவு செய்திருக்கிறோம். பாமக., தலித் மக்களோடு முரண்பட்டு நிற்பதாகச் சொல்லப்படும் விஷயங்களை உடைக்க வேண்டும் என்பதும் எங்களின் இலக்கு. விசிக மீதோ, தொல்.திருமாவளவன் மீதோ எங்களுக்கு எந்த முரண்பாடும் இல்லை. கருத்தியல் முரண்பாடு அனைத்துக் கட்சிகளுடனும் இருக்கின்றன. அதனால், தலைவர்களை ஒன்றிணைக்கும் வேலைகளைச் செய்துவருகிறோம். மக்களை ஒருங்கிணைத்து, தமிழகத்தை வளர்ச்சிப் பாதையை நோக்கிக் கொண்டு செல்வதே எங்களின் இலக்கு. அதேபோல, நாங்கள் முன்வைக்கும் பல விஷயங்களை ஆளும் அரசாங்கம் செய்தாலும், அரைகுறையாகத்தான் செய்கிறார்கள். அதனால், 2026 தேர்தலில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான வேலைகளையும் செய்துவருகிறோம்'' என்கிறார்கள்.