Published:Updated:

``போனில் தகவல் சொல்ல மாட்டீர்களா?''- மக்கள்தொடர்பு முகாமில் ஆண்டிபட்டி எம்.எல்.ஏ காட்டம்

எம்.எல்.ஏ மகாராஜன்
எம்.எல்.ஏ மகாராஜன்

எம்.எல்.ஏ மகாராஜன் பேசியதைக் கண்ட அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் மக்களிடையே சலசலப்பு உருவானது.

இன்று, தேனி எம்.சுப்புலாபுரத்தில் நடைபெற்ற மக்கள்தொடர்பு முகாமில் கலந்துகொண்ட ஆண்டிபட்டி தி.மு.க எம்.எல்.ஏ மகாராஜன், தன்னிடம் ஏன் போனில் தகவல் தெரிவிக்கவில்லை என கோபமடைந்தார். உடன், அவரது தம்பியும் ஆண்டிபட்டி ஒன்றியச் சேர்மனுமான லோகிராஜன் இருந்ததால், ஆளும் கட்சியையும் வறுத்தெடுத்தார்.

மக்கள் தொடர்பு முகாமில் ஆண்டிபட்டி எம்.எல்.ஏ
மக்கள் தொடர்பு முகாமில் ஆண்டிபட்டி எம்.எல்.ஏ
`விலைபோகும் ஒன்றியக் கவுன்சிலர்கள்!' - பெரும்பான்மை கிடைத்தும் தேனி தி.மு.க திணறல்

தேனி மாவட்ட வருவாய்த்துறை சார்பாக நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம், வருவாய் அலுவலர் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில், ஆண்டிபட்டி எம்.எல்.ஏ மகாராஜன் மற்றும் ஆண்டிபட்டி ஒன்றியக்குழு தலைவர் லோகிராஜன் மற்றும் வருவாய் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

எம்.எல்.ஏ மகாராஜன்
எம்.எல்.ஏ மகாராஜன்

நிகழ்ச்சி தொடங்கியதும், ஆண்டிபட்டி வட்டாட்சியரைப் பார்த்து, “அரசு விழாவில் கலந்துகொள்ள எனக்கு ஏன் அழைப்பு விடுக்கவில்லை? நான் உங்களிடம் பணம் எதுவும் கேட்டேனா... என்னைப் புறக்கணிப்பது ஏன்?” என்று கோபப்பட்டார். “முறையாக அழைப்பு கொடுக்கப்பட்டது!” என்று வட்டாட்சியர் கூறியதும், ”ஏன் போனில் சொல்ல மாட்டீர்களா?” என்று கடிந்து கொண்டார். இதைக் கண்ட அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் மக்களிடையே சலசலப்பு உருவானது.

அதன்பின்னர், அங்கு கூடியிருந்த மக்கள் முன்பாகப் பேசியவர், “ஆண்டிபட்டி தொகுதியில், நிறைவேற்றப்படாத குடிநீர் திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டு, விழாவின் பாதியிலேயே வெளியேறினார். பின்னர் லோகிராஜன், மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மகாராஜனும் லோகிராஜனும் உடன்பிறந்த சகோதரர்கள் என்றபோதிலும், எதிர்க்கட்சி ஆளும்கட்சி பிரமுகர்களாக இருப்பதால், இருவரும் பேசிக்கொள்வதில்லை. அவ்வப்போது ஒருவரை ஒருவர் விமர்சித்துக்கொள்வது தொடர்கிறது.

எம்.எல்.ஏமகாராஜன்
எம்.எல்.ஏமகாராஜன்
5,000 பேர்… ரூ.100 கோடி… தேனி மக்களை ஏமாற்றிய போலி நிறுவனம்!

இதுதொடர்பாக ஆண்டிபட்டி வாட்டாட்சியரிடம் பேசியபோது, ``எம்.எல்.ஏ’வுக்கு முறைப்படி அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது. ஆனால், ஏன் என்னிடம் போனில் தெரிவிக்கவில்லை என கோபப்பட்டார். வேற எதுவும் இல்லை!” என்றார்.

'ஆண்டிபட்டி தொகுதி குடிநீர் பிரச்னைக்குத் தீர்வு காணும் வரை, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொள்ளும் அரசு விழாக்களில் இனி நான் கலந்துகொள்ள மாட்டேன்' என முன்னர் எம்.எல்.ஏ மகாராஜன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு