Published:Updated:

``தமிழக சட்டமன்றத்தை மகாபலிபுரத்துக்கு மாற்ற முயற்சி நடக்கிறது..!" - அண்ணாமலை

அண்ணாமலை

``தி.மு.க ஆட்சியின் ஓராண்டு சாதனை என்பது சட்டமன்றத்திற்குள் சாதனையாகவும், சட்டமன்றத்திற்கு வெளியே பொதுமக்களுக்கு சோதனையாகவும் இருக்கிறது." - அண்ணாமலை

``தமிழக சட்டமன்றத்தை மகாபலிபுரத்துக்கு மாற்ற முயற்சி நடக்கிறது..!" - அண்ணாமலை

``தி.மு.க ஆட்சியின் ஓராண்டு சாதனை என்பது சட்டமன்றத்திற்குள் சாதனையாகவும், சட்டமன்றத்திற்கு வெளியே பொதுமக்களுக்கு சோதனையாகவும் இருக்கிறது." - அண்ணாமலை

Published:Updated:
அண்ணாமலை

பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார்‌. இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ``கடந்த அ.தி.மு.க ஆட்சியில் வால்மார்ட் நிறுவனம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடிய கட்சிகள் அனைத்தும், தற்போது லூலு நிறுவன விஷயத்தில் அமைதியாக இருக்கின்றன. ஆனால், தமிழகத்தில் லூலு மால் அமைக்க ஒரு செங்கல்லைக் கூட வைக்க பா.ஜ.க அனுமதிக்காது. சாலையோர வியாபாரிகள் மற்றும் சிறு வியாபாரிகளை பாதிக்கும் வகையில் அமையும் லூலூ மார்க்கெட் நிறுவனத்தை வரவிடமாட்டோம். இந்த நிறுவனத்தால் நமது சாலையோரத்தில் மளிகைக்கடை வைத்துள்ள அண்ணாச்சி, பூக்கடை வைத்துள்ள அக்கா, சிறுவியாபாரம் செய்யும் அண்ணன் உள்ளிட்ட அனைவரும் பாதிக்கப்படுவர்.

அண்ணாமலை
அண்ணாமலை

தமிழக ஆளுநர் சாதாரண மனிதர் கிடையாது. அவர் உளவுத்துறையில் 35 ஆண்டுகள் பணியில் இருந்த அனுபவம் உள்ளவர். நாகாலந்தில் ஆளுநராக இருந்த அவர் கூறும் கருத்து எதுவும் தவறாக இருக்காது‌. குறிப்பாக கேரளாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயல்பாடுகளை பார்த்த யாரும் ஆளுநரின் கருத்தை மறுக்க மாட்டார்கள். தி.மு.க-வுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகள் தங்கள் இருப்பைக் காண்பிக்க வேண்டும் என்பதற்காக தினமும் ஆளுநரை வசை பாடுகின்றனர். இதன் மூலம் தி.மு.க தலைமைக்கு தங்களது விசுவாசத்தை காட்டிக்கொள்ள ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் முயற்சி செய்கின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அண்ணாமலை
அண்ணாமலை

தி.மு.க ஆட்சியின் ஓராண்டு சாதனை என்பது சட்டமன்றத்திற்குள் சாதனையாகவும், சட்டமன்றத்திற்கு வெளியே பொதுமக்களுக்கு சோதனையாகவும் இருக்கிறது. தி.மு.க அரசு முடிந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், பெரிய ஊழலுக்கு வழிவகுக்கும் வகையில் தமிழக சட்டமன்றத்தை மகாபலிபுரத்திற்கு மாற்றுவதற்கான வேலைகளை தி.மு.க அரசு ஆரம்பித்துள்ளது. இதற்காக ஆறாயிரம் ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு சட்டமன்ற பணிகள் துவங்க அரசாணை போட்டுள்ளனர். இதை பா.ஜ.க எதிர்க்கும் என்பதற்காக சில திருட்டு வேலைகளை செய்து வருகின்றனர். அங்கே தி.மு.க அலுவலகம் அமைப்பதற்காக இடம் வாங்கப்பட்டுள்ளது. இதற்காக தி.மு.க-வைச் சேர்ந்த 6 அமைச்சர்கள் பினாமி பெயரில் மகாபலிபுரம் பகுதியில் நூறு ஏக்கர் வரை நிலம் வாங்கியுள்ளனர். தி.மு.க-வின் கோபாலபுரம் குடும்பத்தில் உள்ள நான்கு பேர் பணம் சம்பாதிப்பதற்காக புதிய சட்டமன்றம் அமைக்க முயல்கின்றனர். அதை பா.ஜ.க ஒருபோதும் அனுமதிக்காது. எனவே புதிய சட்டமன்றம் குறித்த அறிவிப்பு எந்நேரமும் வரலாம்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism