Published:Updated:

நீட்: ``ஆளுநர் விளக்கத்தை மக்களுக்கு வெள்ளை அறிக்கையாக வெளியிடுங்கள்!” - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

அண்ணாமலை - ஸ்டாலின்

``நீட் தேர்வுக்குப் பிறகு இருளர் சமூகத்திலிருந்தும் மாணவர்கள் மருத்துவ படிப்புக்குள் வந்திருக்கின்றனர். இப்படியிருக்கையில், தமிழக முதல்வர் எதனடிப்படியில் நீட். சமூகநீதிக்கு எதிரானது என்று சொல்கிறார்?” என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

நீட்: ``ஆளுநர் விளக்கத்தை மக்களுக்கு வெள்ளை அறிக்கையாக வெளியிடுங்கள்!” - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

``நீட் தேர்வுக்குப் பிறகு இருளர் சமூகத்திலிருந்தும் மாணவர்கள் மருத்துவ படிப்புக்குள் வந்திருக்கின்றனர். இப்படியிருக்கையில், தமிழக முதல்வர் எதனடிப்படியில் நீட். சமூகநீதிக்கு எதிரானது என்று சொல்கிறார்?” என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

Published:Updated:
அண்ணாமலை - ஸ்டாலின்

நீட் விலக்கு மசோதாவை, தமிழக ஆளுநர் நேற்று அரசுக்கே திருப்பியனுப்பியதிலிருந்தே தமிழக அரசியலில் பெரும் பரபரப்பான சூழல் நிலவிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழக அரசின் நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பியனுப்பியது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். இதில் பேசிய அண்ணாமலை, ``இந்த நீட் விவகாரத்தில் தமிழகத்தில் புரிதல் இல்லாத ஆளுங்கட்சி தொடர்ச்சியாகப் பொய்களைப் பரப்புகிறார்கள். தமிழக அரசு நீட் விலக்கு மசோதாவை ஆளுநருக்கு அனுப்பியிருந்தது. அதை ஆளுநர் தமிழக சட்டப்பேரவை சபாநாயகருக்கு திருப்பியனுப்பியிருக்கிறார். அதற்கான விளக்கமும் ஆளுநர் தரப்பிலிருந்து வெளியிடப்பட்டிருக்கிறது.

ஆளுநர் ரவி
ஆளுநர் ரவி

2010-ல் அப்போது மத்தியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த திமுக எம்.பி காந்திசெல்வன் நீட் தேர்வு மசோதாவைப் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார். அதன் பிறகான நீட் வழக்குகளில், நீட் தேர்வு மாணவர்களை பாதிக்கும் வகையில் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்புகளையும் வழங்கியுள்ளது. 2019-ல் தமிழகத்திலிருந்து 48.57% மாணவர்களும், 2020-ல் 57.4% மாணவர்களும் தேர்ச்சிபெற்றிருக்கின்றனர். நீட் தேர்வுக்குப் பிறகு இருளர் சமூகத்திலிருந்தும் மருத்துவப் படிப்புக்குள் வந்திருக்கின்றனர் இதை, பத்திரிகை வாயிலாக அனைவரும் அறிந்திருக்கிறார்கள். இப்படியிருக்கும்பட்சத்தில், தமிழக முதல்வர் ஏதன் அடிப்படியில் நீட், சமூகநீதிக்கு எதிரானது என்று சொல்கிறார்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஸ்டாலின்
ஸ்டாலின்

நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பின்பு இந்தியாவில் 84% மருத்துவ இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் அது இரு மடங்காக்கப்பட்டுள்ளது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் கூட்டணியில் 10 ஆண்டுகளாக இருந்த திமுக செய்த ஒரே சாதனை, தமிழகத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகளை இரட்டிப்பாக்கியுள்ளதுதான்.

இப்படியிருக்கையில் இவர்கள் எந்தப் போகாத ஊருக்கு வழி தேடிக்கொண்டிருக்கிறார்கள்... எனவே, ஆளுநர் அனுப்பியுள்ள விளக்கத்துக்கான அறிக்கையை மக்களுக்கு வெள்ளை அறிக்கையாகக் காண்பிக்க வேண்டும். தமிழகத்தில் மருத்துவத்துறை அமைச்சர் வெளியிட்ட நீட் தரவரிசைப் பட்டியல்தான் இந்த ஆண்டின் மிகப்பெரிய மோசடி. நாளை நடக்கவிருக்கும் அனைத்துக்கட்சிக் கூட்டத்திலும் பாஜக பங்கேற்காது" என்று அண்ணாமலை பேசியுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism