Published:Updated:

திமுக அரசு மீது அண்ணாமலை வாசித்த புகார்... நீர்த்து போகுமா? தாக்கத்தை ஏற்படுத்துமா?

ஸ்டாலின் - அண்ணாமலை

``திமுக அரசின் மீது அண்ணாமலையின் தொடர் குற்றச்சாட்டில் உண்மை இருந்தால், அதனை வழக்காகப் பதிவு செய்ய அவர் ஆவணம் செய்யவேண்டும்.”

திமுக அரசு மீது அண்ணாமலை வாசித்த புகார்... நீர்த்து போகுமா? தாக்கத்தை ஏற்படுத்துமா?

``திமுக அரசின் மீது அண்ணாமலையின் தொடர் குற்றச்சாட்டில் உண்மை இருந்தால், அதனை வழக்காகப் பதிவு செய்ய அவர் ஆவணம் செய்யவேண்டும்.”

Published:Updated:
ஸ்டாலின் - அண்ணாமலை

சமீப காலமாக தி.மு.க அரசு மீது தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை. இந்நிலையில், பல்வேறு துறைகளில் ஊழல் நடந்துள்ளதாக அவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து உள்ளார்.

முன்னதாக, மின்சாரத்துறையில் பி.ஜி.ஆர் நிறுவனத்துக்கு டெண்டர் விடப்பட்டது குறித்த அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அண்ணாமலை கடந்த மார்ச் மாதம் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு, "சில பேர் சுய விளம்பரத்துக்குச் செய்யக்கூடிய காரியங்களுக்காக எங்களுடைய நேரத்தையோ, உங்களுடைய நேரத்தையோ வீணடிக்க வேண்டாம்.

அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி

ஒருவர் மீது உண்மையாகக் குற்றச்சாட்டு வைத்தால் உரிய ஆதாரத்துடன் சொல்ல வேண்டும். பி.ஜி.ஆர் நிறுவனத்தை பிளாக் லிஸ்ட்டில் வைக்கவில்லை. அந்த நிறுவனத்துக்குக் கடந்த ஆட்சியில் விடப்பட்ட டெண்டர் அது. எனவே, உரிய ஆவணங்கள் வெளியிட்டால்தான் அது சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு விளக்கமளிப்பேன்” என்றார் செந்தில் பாலாஜி. இந்த விவகாரம் குறித்து அண்ணாமலை வேறு எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்கவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்நிலையில், மேலும் 2 அமைச்சர்கள் மீது ஊழல் குறித்த பட்டியலை ஜூன் 5-ம் தேதி வெளியிடுவதாக அண்ணாமலை கடந்த மாதம் தெரிவித்திருந்தார். அதன்படி, சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, சுகாராத்துறை மற்றும் பதிவுத் துறை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்துப் பேசினார்.

அப்போது, "திமுக ஆட்சிக்கு முன்னதாக கர்ப்பிணிகளுக்கு வழங்கப்பட்ட கிட்டில் ஒரு தனியார் நிறுவனத்தின் ஹெல்த் மிக்ஸ் இருந்தது. இதற்கு பதிலாக ஆவின் மூலமாக ஹெல்த் மிக்ஸ் பவுடரை வழங்கலாம் என்று பொதுச் சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை மார்ச் மாதம் முடிவு செய்தது.

அண்ணாமலை - பாஜக
அண்ணாமலை - பாஜக

ஆனால், ஏப்ரல் மாதத்தில் இந்த முடிவு கைவிடப்பட்டதாகவும், தனியாரிடமிருந்து வாங்குவதால், ரூ.45 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார். அதேபோல, ரூ.42 இருக்கும் ஐயன் சிரப் மருந்தை ரூ.224-க்கு வாங்குகிறது. இந்த இரண்டு பொருட்களில் ஊழல் நடக்கிறது''என்றார். மேலும் ``நிலப்பதிவு செய்வதில், ஆன்லைன் மூலமாகப் பதிவு செய்யும் விதத்தில் முறைகேடு நடக்கிறது” என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அண்ணாமலையின் ஊழல் குற்றச்சாட்டு குறித்து அமைச்சர் மா.சுப்ரமணியன் மற்றும் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், " ஐசிஎம்ஆர் மற்றும் உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைகள் படி, கர்ப்பிணிகளுக்குப் பேறு காலத்தில் என்ன ஊட்டச்சத்து வழங்க வேண்டும் என்று உள்ளது. அதன்படி, PRO PL என்ற health mix டெண்டர் விடப்பட்டு, 2018ம் ஆண்டு முதல் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படுகிறது. இதன் சந்தை விலை ரூ.588. தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் அதை ரூ.460.50 க்கு வாங்கியது. அயன் சிரப் சந்தை விலை ரூ.112 ஆகும். அதை ரூ 74.60 க்கு அரசு வாங்கியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் 500 கிராம் எடை கொண்ட 17,65,560 பாட்டில்கள் வாங்கப்பட்டன. டெண்டர் முடிந்ததன் காரணமாக இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 10-ம் தேதி மீண்டும் டெண்டர் திறக்கப்பட்டது. இதற்கான நிபந்தனைகள் எதுவும் மாற்றப்படவில்லை. டெண்டர் திறக்கப்பட்ட பிறகு , மாநில திட்ட ஆணையம், இந்த சத்துமாவை ஆவினிடமிருந்து பெறலாமே என கருத்து தெரிவித்தது. இந்த கருத்து குறித்து விவாதித்து முடிவு செய்ய 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. கர்ப்பிணிப் பெண்களுக்குத் தேவையான 32 சத்துகள் கொண்ட மாவு தேவை என ஆவினிடம் தெரிவிக்கப்பட்டது.

மா. சுப்பிரமணியன்
மா. சுப்பிரமணியன்

அதன்படி, அந்த வகையான சத்து மாவு இருந்தால் அதை உரிய ஆய்வகத்தில் பரிசோதித்து அந்த அறிக்கையை தருமாறு ஆவினிடம் கூறப்பட்டது. ஆனால், இதுவரை ஆவின் எந்த பதிலும் அளிக்கவில்லை. ஆவினில் தற்போது இருப்பது milk whitener-தான் சத்து மாவு இல்லை. இந்த ஆண்டுக்கான டெண்டர் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

அதற்குள் குற்றச்சாட்டு வைப்பது, இன்னாருக்கு கொடுக்கப்படுமோ என்ற அச்சம் அல்லது இன்னாருக்குக் கொடுக்க வேண்டும் என எதிர்பார்ப்புதான். விலை குறைவாக உள்ளது என்பதற்காக ஆவினில் வாங்க முடியாது. ஆப்பிளையும் - எலுமிச்சையையும் ஒப்பிடுவது போல உள்ளது அண்ணாமலையின் குற்றச்சாட்டு" என்றனர்.

இந்த விவகாரத்தில், ஆவின் மீது மறைமுகமாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மருத்துவத் துறை மீதான குற்றச்சாட்டுக்கு அமைச்சர் முதல் அனைத்து துறை அதிகாரிகளும் ஒன்றாக விளக்கம் அளிக்கின்றனர். ஆனால், பதிவுத் துறை மீதான அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு, இதுவரை எந்த எதிர்ப்பும் வரவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

குற்றச்சாட்டு குறித்து அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறுகையில், "அரசு மீது அண்ணாமலை ஊழல் குற்றச்சாட்டை முன்வைக்கிறார். அண்ணாமலை தவறு செய்திருந்தால், அவர் மீது வழக்குப் போடவேண்டும். ஆனால், அவசர அவசரமாக மீடிவை வைத்து ஒரு ரிப்போர்ட் அளிக்கிறார் அமைச்சர். குற்றச்சாட்டு குறித்து வழக்குப் போட அவர்களுக்குத் தைரியம் இல்லை. ஏன் என்றால் அவர்கள் தவறு செய்துள்ளார்கள்" என்றார் ஆதரவு குரலுடன்..

பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை
பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை

தி.மு.க அரசின் மீது அண்ணாமலையின் தொடர் குற்றச்சாட்டில் உண்மை இருந்தால், அதனை வழக்காகப் பதிவு செய்ய அவர் ஆவணம் செய்யவேண்டும். அதைவிட்டுவிட்டு, வெறும் அறிக்கையாகவோ, பேட்டி கொடுத்தாலோ, மக்களிடம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதே கடந்த கால வரலாறு..!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism