Published:Updated:

``ஹெச்.ராஜாவுக்கு ஆளுநர் பதவி கிடைத்தால் மகிழ்ச்சி..!" - செய்தியாளர்கள் சந்திப்பில் அண்ணாமலை

அண்ணாமலை

திமுக அரசு துணை வேந்தர் என்ற பதவியை வியாபாரமாகவும், அவர்களுக்கு பிடித்த நபர்களுக்கும் கொடுக்கும் பதவியாகவும் நினைத்துக் கொண்டிருக்கிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

``ஹெச்.ராஜாவுக்கு ஆளுநர் பதவி கிடைத்தால் மகிழ்ச்சி..!" - செய்தியாளர்கள் சந்திப்பில் அண்ணாமலை

திமுக அரசு துணை வேந்தர் என்ற பதவியை வியாபாரமாகவும், அவர்களுக்கு பிடித்த நபர்களுக்கும் கொடுக்கும் பதவியாகவும் நினைத்துக் கொண்டிருக்கிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Published:Updated:
அண்ணாமலை

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பல்கலைக்கழகத் துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதாவை இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க, அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளும் வெளிநடப்பு செய்தன.

இந்த நிலையில் இது தொடர்பாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``ஆளுநர் பதவி என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது. தி.மு.க அரசு துணை வேந்தர் என்ற பதவியை வியாபாரமாகவும், அவர்களுக்குப் பிடித்த நபர்களுக்கு கொடுக்கும் பதவியாகவும் நினைத்துக் கொண்டிருக்கிறது. ஆளுநரை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் தி.மு.க இவ்வாறு செயல்படுகிறது. தி.மு.க அரசு நன்றாக செயல்படக்கூடிய உயர் கல்வித்துறையில் தேவையில்லாமல் அரசியலைக் கலந்து மாணவர்களின் நலனைக் கெடுக்க வேண்டும் என நினைக்கிறது.

ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி

காங்கிரஸ் கட்சி எப்போது மாநிலத்தில் ஆளுகிற ஆட்சியை கலைக்க ஆரம்பித்ததோ, அப்போதிலிருந்து ஆளுநரின் முக்கியத்துவம் கூடியிருக்கிறது. தி.மு.க அரசியல் காழ்புணர்ச்சியுடன் மசோதாவை நிறைவேற்றியுள்ளது. ஹெச்.ராஜா கேரளா ஆளுநராக வர உள்ளாரா என்பது குறித்து எனக்குத் தெரியாது. நான் அந்த தேர்வுக் குழுவில் இல்லை. ஹெச்.ராஜா போன்ற தலைவர்கள் மக்களுக்காக உழைக்கக் கூடியர்கள். அப்படிப்பட்ட பெரிய தலைவர்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவருக்கு ஆளுநர் பதவி கிடைத்தால் சந்தோஷம். கட்சி சார்பின்றி யார் தமிழகத்திலிருந்து ஆளுநர் பதவிக்குச் சென்றாலும் அதை வரவேற்கிறோம்’’ என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism