தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நேற்று கோவைக்கு வந்திருந்தார். முன்னதாக, செய்தியாளர்களைச் சந்தித்த அவர், `பீஸ்ட்’ படம், இந்தி, தமிழ், முதல்வர், திராவிடம் என்று பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேசியிருந்தார்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதையடுத்து, அவர் அவிநாசி சாலை கோல்டுவின்ஸ், துரைசாமி நகப்ர் பகுதியிலுள்ள ரேஷன் கடைக்குச் சென்றார்.
மத்திய அரசு வழங்கிவரும் இலவச அரிசி குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு செய்வதற்காக அண்ணாமலை அங்கு சென்றதாகக் கூறப்பட்டது. இதற்காக அந்த ரேஷன் கடை அருகே தடபுடல் ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது.

ரேஷன் கடைக்கு உள்ளே சென்ற அண்ணாமலை, முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்துக்கு அருகே பிரதமர் நரேந்திர மோடியின் படத்தை மாட்டினார். இது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
சமீபத்தில் தஞ்சாவூர் மாவட்டம், வேப்பத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில், பாஜக கவுன்சிலர் மோடியின் படத்தை மாட்டினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. இதேபோல கடந்த சில மாதங்களுக்கு முன்பு,

கோவை மாவட்டம், பூலுவப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் பாஜக ஆதரவாளர்கள் மோடியின் புகைப்படத்தை மாட்டினர். அப்போது அரசு ஊழியர்கள், பாஜக-வினர் மீது வழக்கு பதிந்து அவர்களை போலீஸார் கைதுசெய்தது குறிப்பிடத்தக்கது.