Published:Updated:

ஆற்காடு வீராசாமி குறித்த தவறான கருத்து... வருத்தம் தெரிவித்த அண்ணாமலை!

அண்ணாமலை

திமுக-வின் முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி இறந்துவிட்டார் என தவறுதலாக அண்ணாமலை தெரிவித்தது சர்ச்சையானதையடுத்து, தற்போது வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

ஆற்காடு வீராசாமி குறித்த தவறான கருத்து... வருத்தம் தெரிவித்த அண்ணாமலை!

திமுக-வின் முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி இறந்துவிட்டார் என தவறுதலாக அண்ணாமலை தெரிவித்தது சர்ச்சையானதையடுத்து, தற்போது வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
அண்ணாமலை

நாமக்கல் மாவட்டத்தில் புதன் கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு பேசினார். அப்போது, முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி இறந்துவிட்டதாகப் பேசியது சர்ச்சையானது.

இந்த சம்பவத்துக்கு ஆற்காடு வீராசாமியின் மகன் அதாவது, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி கண்டனம் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், ``அண்ணாமலை மேடையில் பேசுவது அபத்தம். அதைவிட அபத்தம் என்னவென்றால் அவருக்கு மேடையளிப்பதுதான்.

ஆற்காடு வீராசாமி குறித்த தவறான கருத்து... வருத்தம் தெரிவித்த அண்ணாமலை!

தனது கொள்ளுப் பேரனின் பிறந்தநாள்விழாவில் குடும்பத்துடன் கலந்துகொண்டு மகிழ்ந்த ஆற்காட்டார் (என் தந்தை) குறித்து, எப்போதும் எங்கள் தலைவர்களைப் பற்றி உளறும் பா. ஜ.க தலைவர் அண்ணாமலை இன்று தவறான கருத்தைக் கூறியதற்கு வேதனையுடன் வன்மையாகக் கண்டிக்கிறேன். அவர் நலமாக இருக்கிறார். நாகரிகமற்ற முறையில் உளறுவதை இனியாவது அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையேல் எதிர்வினை இது போன்று சாதாரணமாக இருக்காது என்று எச்சரிக்கிறேன்'' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேலும் அண்ணாமலையில் பேச்சு திமுக-வினரின் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், அண்ணாமலையே தனது ட்விட்டர் பதிவில், ``உங்களுடைய தந்தையார் அண்ணன் ஆற்காட்டார் அவர்கள் நீண்ட ஆயுளோடு உங்கள் அனைவருடைய அரவணைப்போடு நன்றாக வாழ்வதற்கு இறைவனை வேண்டுகிறேன். நாமக்கல் பொதுக்கூட்டத்தில் தவறுதலாக உங்களுடைய தந்தையார் இறைவனடி சேர்ந்திருக்கிறார் என்று சொன்ன கருத்துக்காக வருந்துகிறேன்'' எனப் பதிவிட்டிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism