Published:Updated:

``கரூர் பாஜக-வினர்மீது, ஆளுங்கட்சி சார்பில் பொய் வழக்கு" - குற்றம்சாட்டிய அண்ணாமலை

கூட்டத்தில் பேசும் அண்ணாமலை

கரூர் மாவட்டத்தில் வீதியில் இறங்கி பா.ஜ.க-வினர் போராட்டம் நடத்தினாலே, அவர்கள் மீது ஆளுங்கட்சியினர் பொய்வழக்கு பதிய வைப்பதாக, பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டினார்.

``கரூர் பாஜக-வினர்மீது, ஆளுங்கட்சி சார்பில் பொய் வழக்கு" - குற்றம்சாட்டிய அண்ணாமலை

கரூர் மாவட்டத்தில் வீதியில் இறங்கி பா.ஜ.க-வினர் போராட்டம் நடத்தினாலே, அவர்கள் மீது ஆளுங்கட்சியினர் பொய்வழக்கு பதிய வைப்பதாக, பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டினார்.

Published:Updated:
கூட்டத்தில் பேசும் அண்ணாமலை

கரூர் வாங்கலிலுள்ள அருள்மிகு ஸ்ரீ புதுவாங்கலம்மன் திருக்கோயிலில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, தீர்த்த குடம் எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. கரூர் பிரேம் மகாலில் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். தொடர்ந்து, கரூர் மாநகரிலுள்ள தனியார் விடுதியில் மாவட்ட பா.ஜ.க வழக்கறிஞர் அணி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க மாநிலத் தலைவர் அண்ணாமலை வருகைதந்தார். அவருக்கு, மாவட்ட பா.ஜ.க தலைவர் செந்தில்நாதன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தீர்த்தக் குடம் எடுத்துச் செல்லும் நிகழ்வில் அண்ணாமலை
தீர்த்தக் குடம் எடுத்துச் செல்லும் நிகழ்வில் அண்ணாமலை

அந்தக் கூட்டம் தொடங்குவதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ``கரூர் மாவட்டத்தில் மட்டும் பா.ஜ.க-வினரின் எந்தவிதமான போராட்டத்துக்கும் காவல்துறை தரப்பில் அனுமதி வழங்கப்படுவதில்லை. கட்சி அலுவலகத்தை விட்டு வெளியே வந்து போராடினாலே கட்சியினரைக் கைதுசெய்யும் நடவடிக்கை தொடர்ந்துவருகிறது. தொடர்ந்து, கரூர் மாவட்ட பா.ஜ.க-வினர் மீது போலீஸார் தரப்பில் பல்வேறு பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுவருகின்றன. ஆனால், அதையும் தாண்டி கரூர் மாவட்ட பா.ஜ.க-வினர் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர்.

மாவட்டத் தலைவர் செந்தில்நாதன் ஆளுங்கட்சியினரின் அடக்குமுறைக்கு அஞ்சாமல் செயல்பட்டுவருகிறார். அதனால், கரூர் மாவட்டத்தில் நிலவிவரும் அசாதாரண சூழ்நிலையைப் பற்றியும், வருங்காலங்களில் அவற்றை எவ்வாறு கையாள்வது என்பது குறித்தும், வழக்கறிஞர் அணியுடன் ஆலோசனை நடத்துவதற்காக பிரத்யேகமாக இந்தக் கூட்டம் மாவட்ட பா.ஜ.க சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. வழக்கறிஞர் அணியுடனான இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்படவிருக்கின்றன. எப்படி காவல்துறையினரின் நடவடிக்கைகளைப் பார்க்கிறீங்க, எப்படி சில கைதுகளைப் பார்க்கிறீங்க, இரவு 2 மணிக்கு, 3 மணிக்கு ஃபேஸ்புக்குல, ட்விட்டர்ல யாரோ சிலபேர்கள் போடுற போஸ்டுகளுக்காக, காவல்துறை அங்கு சென்று கைதுசெய்துவருகின்றனர். அதுக்காகத்தான் இந்த கலந்துரையாடல். என்ன நடக்கிறது என்பதை நாம தெரிஞ்சுக்கணும் என்பதற்காகதான்.

கூட்டத்தில் பேசும் அண்ணாமலை
கூட்டத்தில் பேசும் அண்ணாமலை

அதனால், கரூர் வரும்போது, 500 பேர், 1000 பேர் என எந்த கூட்டத்தையும் வைக்காதீங்க, சுருக்கமாக ஒரு 20 பேர், 30 பேர்களைக் கூப்பிடுங்க, அவங்க மட்டும் இருக்கணும்னு செந்தில்நாதன்கிட்ட சொல்லியிருந்தேன். அதேபோல், மாநில பா.ஜ.க-விடமிருந்து உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமா, ஏதாச்சும் எதிர்பார்க்கிறீங்களானு விவாதிக்க இருக்கிறோம். ஏன்னா, பலபேரை எதிர்த்து கரூரில் கட்சியை வளர்க்க வேண்டியிருக்கிறது. எல்லாவிதமான பிரச்னைகளும் இங்கு தரப்படுகிறது. தமிழகம் முழுக்க பா.ஜ.க சார்பில் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தும்போது, கரூர் மாநகரம் மட்டும் வித்தியாசமா இருக்கும். காவல்துறை அனுமதி தருவதில்லை. இங்கிருக்கும் கவுன்சிலர் ஒருவர் மீது, இந்த இரண்டு மாதங்களில் மட்டும் நான்கு எஃப்.ஐ.ஆர்கள் பதிவுசெஞ்சுருக்காங்க. அதனால், உங்களிடம் கலந்தாலோசித்து, அதற்கு எதிராக நாம் எந்தவித யுக்திகளைக் கையில் எடுக்க வேண்டும் ஆலோசனை செய்யதான் இந்த கூட்டம். எனக்காக ஒன்றரை மணி நேரம் காத்திருந்த செய்தியாளர்களிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறேன். பல தொண்டர்களின் வீடுகளுக்குச் சென்று, அவர்களை சந்தித்ததால், லேட்டாகிவிட்டது. அடுத்தமுறை வரும்போது, பத்திரிகையாளர் சந்திப்பு நடத்துகிறேன்" என்றார்.