Published:Updated:

கோவை சம்பவம்: ``மூடி மறைக்கிறார்கள்; என்.ஐ.ஏ விசாரிக்க அமித் ஷாவுக்கு கடிதம்" - அண்ணாமலை பிரஸ் மீட்

அண்ணாமலை

``பா.ஜ.க கொடுத்த அழுத்தத்தின் காரணமாக நேற்று காலை காவல்துறை முகமது தல்ஹா, முஹம்மது அசாருதீன், முகம்மது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் என ஐந்து பேரை கைது செய்திருப்பதாக தெரிவித்திருக்கிறது.” - அண்ணாமலை

கோவை சம்பவம்: ``மூடி மறைக்கிறார்கள்; என்.ஐ.ஏ விசாரிக்க அமித் ஷாவுக்கு கடிதம்" - அண்ணாமலை பிரஸ் மீட்

``பா.ஜ.க கொடுத்த அழுத்தத்தின் காரணமாக நேற்று காலை காவல்துறை முகமது தல்ஹா, முஹம்மது அசாருதீன், முகம்மது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் என ஐந்து பேரை கைது செய்திருப்பதாக தெரிவித்திருக்கிறது.” - அண்ணாமலை

Published:Updated:
அண்ணாமலை

கோவை உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் ஜமோசா முபின் என்பவர் உயிரிழந்தார். இது குறித்து காவல்துறை நடத்திய விசாரணையில் ஜமோசா வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரிக்க தேவையான பொருள்கள் கிடைத்தது எனத் தகவல் வெளியானது. மேலும் வெடிகுண்டு தயாரிக்க தேவையான பொருள்களும் இறந்தவர் வீட்டில் கண்டெடுக்கப்பட்டன. இந்த நிலையில், சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிய பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ``கோயம்புத்தூர் மாநகரம் தீவிரவாதிகளின் கூடாரமாக மாறி இருக்கிறது என்பது ஜூன் 2019-ல் தெரிய வந்தது. 1998-ல் நடந்த கோவை குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்டவர்கள் என ஐந்து பேரை என்.ஐ.ஏ 2019-ல் கைது செய்தது. அவர்களுக்கு தீவிரவாதிகளோடு தொடர்பு இருந்ததும் தெரிய வந்தது.

car blast
car blast

இந்த குற்றத்தில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என காவல்துறை சிலரை கைது செய்தது. அதில் ஜமேஷா முபின் என்பவரும் இருந்தார். கோவை கார் வெடி விபத்தில் கார் ஓட்டிக் கொண்டு வந்தவர் ஜமேஷா முபின் என காவல்துறை தெரிவித்திருக்கிறது. அதைத் தொடர்ந்து பா.ஜ.க தொடர்ந்து மாநில அரசுக்கு இது தீவிரவாத செயல் என வலியுறுத்தி வந்தது. அதன் பிறகும் காவல்துறை ஒப்புக்கொள்ளாத நிலையில் பத்திரிகையாளர்களின் கேள்விகளால் டி.ஜி.பி சைலேந்திரபாபு சில விஷயங்களை தெரியப்படுத்திருந்தார்.

அதை தொடர்ந்து வெடி விபத்தில் சம்மந்தப்பட்டவர்களின் வீட்டில் சோதனை நடத்தியபோது, காவல்துறை இதுவரை வெளியிடாத ஒரு தகவல், கிட்டத்தட்ட 55 கிலோ அமோனியம் நைட்ரைட், பொட்டாசியம், சோடியம் போன்ற நாட்டு வெடி தயாரிக்க பயன்படும் பொருட்கள் கைப்பற்றப்பட்டிருக்கிறது. அதை தொடர்ந்து, பா.ஜ.க இது தற்கொலை படை தாக்குதல் என தெரிவித்தது.

மேலும், இது தொடர்பாக விபத்தில் பலியான ஜமேஷா முபீன் 21-ம் தேதி தன்னுடைய வாட்ஸ்அப் ஸ்டேடஸில், `என்னுடைய இறப்புச் செய்தி உங்களுக்கு தெரியும்போது, நான் செய்த தவறை மன்னித்து விடுங்கள். என்னுடைய குற்றங்களை மன்னித்து விடுங்கள். என்னுடைய இறுதி சடங்கில் பங்கெடுங்கள். எனக்காக பிரார்த்தியுங்கள்’ எனப் பதிவிட்டிருக்கிறார். இது ஐ.எஸ்.ஐ.எஸ்.ஐ தற்கொலை படை தாக்குதல் நடத்துபவர்கள் பயன்படுத்தும் அதே வார்த்தைகள்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

அதன் பிறகு பா.ஜ.க கொடுத்த அழுத்தத்தின் காரணமாக நேற்று காலை காவல்துறை முகமது தல்ஹா, முஹம்மது அசாருதீன், முகம்மது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் என ஐந்து பேரை கைது செய்திருப்பதாக தெரிவித்திருக்கிறது. ஆனால், அவர்கள் எந்த பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்ற எந்த விவரமும் வெளியிடப்படவில்லை. அதுமட்டுமில்லாமல், கோவை காவல்துறை சட்டவிரோதமாக 8 பேரை காவலில் எடுத்திருக்கிறார்கள். இதை மறுக்கமுடியுமா? அவர்களையும் சட்டத்துக்கு முன்னால் ஏன் நிறுத்தவில்லை. அவர்கள் மீது ஏன் UAPA வழக்கு பதியவில்லை.

யாரை காப்பாற்றுவதற்காக போலீஸ் அனைத்தையும் மூடி மறைக்கிறது? ஏதேனும் தாக்குதல் ஏற்பட்டு உயிர்பலி ஏற்பட்டால் தான் முதல்வர் ஒப்புக்கொள்வாரா?. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் மூலம் கலவர பகுதியாக கொங்கு பகுதி மாற்றப்பட்டு வருகிறது. உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு இந்த சம்பவம் தொடர்பாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், நடந்த சம்பவத்தை தமிழக அரசு மூடி மறைப்பதாக குறிப்பிட்டுள்ளோம். என்.ஐ.ஏ விசாரணைக்கு உத்தரவிட கோரிக்கை வைத்துள்ளோம். 

தமிழக உள்துறையில் இருப்பவர்களில் 60 சதவிகித பேர் ஒரு மதத்தைச் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். அதனால் தான் அவர்கள் மீது அதிகபட்ச புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. லாவண்யா வழக்கு தொடங்கி தென் தமிழ்நாட்டில் மதமாற்றம் வரை ஒரு NGO, மிஷினரிகள் செய்ய வேண்டிய வேலையை உள்துறை செய்து கொண்டிருக்கிறது. காவல்துறை அதிகாரிகளின் செய்தியாளர்கள் சந்திப்பு குழந்தைத் தனமாக இருக்கிறது. இந்தியாவிலேயே மிக மோசமான உள்துறை தமிழ்நாட்டில் இருக்கக்கூடியது உள்துறைதான் என ஒப்புக்கொள்ள முதல்வருக்கு இன்னும் எவ்வளவு நாள் வேண்டும்?

சைலேந்திர பாபு
சைலேந்திர பாபு

நான்கு மாதங்களுக்கு முன்பு ஈரோட்டிலிருந்து ஐஎஸ்ஐஎஸ்ஐ-யுடன் தொடர்புடைய ஒரு தீவிரவாதி, இந்துக்களின் பண்டிகையில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதை அறிந்து காவல்துறை கைது செய்ததா இல்லையா? தமிழகத்தில் கோவை, சேலம், ஈரோடு ஆகிய பகுதிகள் ஐ.எஸ்.ஐ.எஸ்.ஐ கூடாரமாக மாறிவருகின்றன. 10 ஆண்டுகளுக்கு முன்னால் தீபாவளி என்றாலே குண்டு வெடிக்கும் என்று இருந்தது. தற்போது ஐஎஸ்ஐஎஸ்ஐ தமிழ்நாடை தலைமை இடமாக வைத்து ஊடுருவுகிறதா என்பதற்கு உள்துறை பதில் சொல்ல வேண்டும்.

இது தற்கொலை படை தாக்குதல் தான் என தமிழக உள்துறை ஒப்புக்கொண்டு கோயம்புத்தூரில் இன்னொரு என்ஐஏ கொண்டு வர வேண்டும். பா.ஜ.க-வின் தீவிர முயற்சியால் சமீபத்தில் தான் என்.ஐ.ஏ காவல் நிலையமாக அங்கீகரித்து இருக்கிறது. சாராயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் தமிழக அரசு, மூன்று நாளுக்கு 650 கோடிக்கு மேல் சாராய வியாபாரம் செய்திருக்கிறது. இதைப் பற்றிய செய்திகளை வெளியிட்ட இரண்டு பத்திரிக்கை நண்பர்களுக்கு மிரட்டல் விடுத்திருக்கிறார் தமிழ்நாட்டின் சாராய அமைச்சர்.

செந்தில் பாலாஜி - அண்ணாமலை
செந்தில் பாலாஜி - அண்ணாமலை

சாராயம் விற்று பொழப்பு நடத்தும் உங்களுக்கு இவ்வளவு நெஞ்சுரம் இருந்தால் மாத சம்பளம் வாங்கி நேர்மையாக உழைத்து உண்ணும் பத்திரிகையாளர்களுக்கு எவ்வளவு நெஞ்சுரம் இருக்கும். இந்த வருட தீபாவளியில் ஆலோசனை போட்டு சாராயம் விற்பனையை அதிகரிக்க செய்தார்கள். சென்ற வருடம் ரூ.435 கோடி வருவாய், 5402 கடைகள், 2808 டாஸ்மாக் பார். இந்த வருடம் கிட்டதட்ட 700 கோடி, 3 நாள், 5,380 கடைகள், 3648 டாஸ்மாக் பார் என விற்பனையை அதிகரித்திருக்கிறார்கள்” என்றார்.