Published:Updated:

`அனிதாவுக்கு ஒரு நியாயம் லாவண்யாவுக்கு ஒரு நியாயமா?; நீதி கிடைக்கும் வரை போராடுவோம்!’ - அண்ணாமலை

பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை

``தொடர்ச்சியாக குழந்தைகளின் உடலை வைத்துக்கொண்டு திமுக செய்து வரும் அரசியலை தமிழகம் பார்த்துக்கொண்டு தான் வருகிறது. அனிதாவுக்கு ஒரு நியாயம், லாவண்யாவுக்கு ஒரு நியாமா?” என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

`அனிதாவுக்கு ஒரு நியாயம் லாவண்யாவுக்கு ஒரு நியாயமா?; நீதி கிடைக்கும் வரை போராடுவோம்!’ - அண்ணாமலை

``தொடர்ச்சியாக குழந்தைகளின் உடலை வைத்துக்கொண்டு திமுக செய்து வரும் அரசியலை தமிழகம் பார்த்துக்கொண்டு தான் வருகிறது. அனிதாவுக்கு ஒரு நியாயம், லாவண்யாவுக்கு ஒரு நியாமா?” என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

Published:Updated:
பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை

அரியலூர் பள்ளி மாணவியின் தற்கொலை குறித்து கடுமையான விவாதங்களும், போராட்டங்களும் ஆங்காங்கே தமிழகத்தில் நடந்து வருகிறது. சில தினங்களுக்கு முன்பு கூட, மாணவியின் தற்கொலை குறித்து விசாரிக்க பா.ஜ.க சார்பில் குழு ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் உள்பட பா.ஜ.க-வினர், மாணவி லாவண்யாவின் சொந்த ஊரான வடுகபாளையம் கிராமத்திற்கு நேரில் சென்று லாவண்யாவின் படத்திற்கு அஞ்சலி செலுத்தி, அவரின் பெற்றோரிடத்தில் ஆறுதல் கூறி பாஜக சார்பில் ரூபாய் 10 லட்சம் நிதி வழங்கியுள்ளனர்.

அண்ணாமலை
அண்ணாமலை

பின்னர் செய்தியாளர்களிடத்தில் பேசிய அண்ணாமலை, ``மாணவி அனிதாவுக்கு ஒரு நியாயம், லாவண்யாவிற்கு ஒரு நியாமா?, தொடர்ச்சியாக குழந்தைகளின் உடலை வைத்துக்கொண்டு தி.மு.க செய்து வரும் அரசியலை தமிழகம் பார்த்துக்கொண்டு தான் வருகிறது. ஆனால் இதுபோன்ற துரதிர்ஷ்டமான சம்பவங்களில் பா.ஜ.க ஒருபோதும் அரசியல் செய்யாது. இதுபற்றி விசாரிக்கவுள்ள பா.ஜ.க குழு நாளை அரியலூர் வருகிறது. மாணவி லாவண்யாவின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் வரை பா.ஜ.க போராடும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பள்ளி மாணவி தற்கொலை
பள்ளி மாணவி தற்கொலை

இது ஒரு மதத்திற்கு எதிரான போராட்டம் அல்ல. மாணவி லாவண்யாவின் மரணத்திற்கு உண்மையான நீதி கேட்கும் போராட்டம். மாணவி லாவண்யாவின் வாக்குமூலத்தை வைத்து பா.ஜ.க போராடி வருகிறது. இந்த சம்பவம் குறித்த தவறான அறிக்கையை முதல்வரிடத்தில் அளித்துள்ளனர். காவல்துறைக்கு களங்கம் விளைவிக்காமல், அவர்களைச் சுதந்திர செயல்பட விடுங்கள்" என செய்தியாளர்களிடம் அண்ணாமலை பேசினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism