Published:Updated:

`ஸ்டாலின் குறித்து அவதூறு; ரூ.100 கோடி நஷ்டஈடு’ - ஆர்.எஸ். பாரதி... ட்விட்டரில் அண்ணாமலை பதில்

ஆர்.எஸ் பாரதி

``முதல்வர் ஸ்டாலினைப் பொதுவெளியில் அவதூறாகப் பேசிய அண்ணாமலை, 24 மணி நேரத்துக்குள் மன்னிப்பு கேட்காவிடில் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும்" என திமுக சார்பில் ஆர்.எஸ். பாரதி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

`ஸ்டாலின் குறித்து அவதூறு; ரூ.100 கோடி நஷ்டஈடு’ - ஆர்.எஸ். பாரதி... ட்விட்டரில் அண்ணாமலை பதில்

``முதல்வர் ஸ்டாலினைப் பொதுவெளியில் அவதூறாகப் பேசிய அண்ணாமலை, 24 மணி நேரத்துக்குள் மன்னிப்பு கேட்காவிடில் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும்" என திமுக சார்பில் ஆர்.எஸ். பாரதி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

Published:Updated:
ஆர்.எஸ் பாரதி

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பொருளாதார முதலீட்டை ஈர்க்கும் விதமாக அரசு அதிகாரிகளுடன் துபாய்க்கு சென்றுள்ளார். இந்த நிலையில், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விருதுநகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் துபாய்க்குச் சென்றதை அவதூறாகப் பேசியதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு திமுக சார்பில் அண்ணாமலைக்கு இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அந்த நோட்டீஸில், ``முதல்வர் ஸ்டாலின், அரசு அதிகாரிகளுடன் துபாய் எக்ஸ்போ-க்கு சென்றதைப் பொதுவெளியில் அவதூறாகப் பேசியதற்காக, 24 மணி நேரத்துக்குள் அண்ணாமலை பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் ரூ.100 கோடி நஷ்ட ஈடாக முதல்வர் நிவாரண நிதிக்கு 2 நாள்களுக்குள் அனுப்ப வேண்டும். இதை செய்யத் தவறினால், சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும்" என குறிப்பிடப்பட்டிருந்தது.

100 கோடி நஷ்டஈடு கேட்டு அண்ணாமலைக்கு திமுக நோட்டீஸ்
100 கோடி நஷ்டஈடு கேட்டு அண்ணாமலைக்கு திமுக நோட்டீஸ்

இதுகுறித்து சென்னை அறிவாலயத்தில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நோட்டீஸில் இருப்பதைக் குறிப்பிட்டுப் பேசிய ஆர்.எஸ். பாரதி, ``சொந்த பணத்தை முதலீடு செய்வதற்காக முதல்வர் துபாய் சென்றதாக அண்ணாமலை பச்சை பொய் கூறியிருக்கிறார். பிரதமர் மோடி 64 முறை உலக நாடுகளுக்குச் சென்றதும் முதலீடு செய்யத்தானா. நாங்கள் சட்ட நடவடிக்கைகளை எடுத்தால் அண்ணாமலை தாங்க மாட்டார்" என பேசியிருந்தார்.

இது தொடர்பாக அண்ணாமலை ட்விட்டரில், ``100 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு திமுக கட்சி, என் மீது, மானநஷ்ட வழக்கு நோட்டீஸ் அனுப்பி இருப்பதை அறிந்தேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தி.மு.க.வின் முதன்மை குடும்பம், சாதாரண சாமானியனான என்னையும், அவர்களைப் போன்ற துபாய் குடும்பத்துக்கு, சரிசமமாக நடத்துகிறது. நம் நாட்டின் நீதித்துறை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. திமுகவின் அச்சுறுத்தல்களை எல்லாம் நீதிமன்றத்தில் சந்திப்பேன். தமிழகத்துக்கான, என் போராட்டம் தொடரும்... துணிவுடன். மக்கள் துணையுடன்...” என பதிவிட்டிருக்கிறார்.