Published:Updated:

அரியலூர் மாணவி தற்கொலை விவகாரம்: அதி தீவிரம் காட்டும் அண்ணாமலை! - என்ன காரணம்?

பள்ளி மாணவி தற்கொலை

அரியலூர் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் தமிழக பாஜக அதி தீவிரம் காட்டிவருகிறது.

அரியலூர் மாணவி தற்கொலை விவகாரம்: அதி தீவிரம் காட்டும் அண்ணாமலை! - என்ன காரணம்?

அரியலூர் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் தமிழக பாஜக அதி தீவிரம் காட்டிவருகிறது.

Published:Updated:
பள்ளி மாணவி தற்கொலை

மாணவி தற்கொலை விவகாரம்:

தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி பகுதி அருகே உள்ள மைக்கேல்பட்டியில் செயல்பட்டுவரும் பள்ளி விடுதியில் தங்கிப் படித்துவந்த 12-ம் வகுப்பு மாணவி ஒருவர் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார். முதலில் விடுதிக் காப்பாளர்கள் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டதால் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டது போன்று ஒரு வீடியோ இணையத்தில் வெளியானது.

தற்கொலை செய்து கொண்ட மாணவி படித்த பள்ளி
தற்கொலை செய்து கொண்ட மாணவி படித்த பள்ளி

இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து இந்த விவகாரத்தைத் தமிழக பாஜக கையிலெடுத்தது. இறந்த மாணவிக்கு நியாயம் கோரி தமிழகம் முழுவதிலும் போராட்டம் நடைபெற்றது. திமுக அரசு மாணவியின் தற்கொலைக்கான காரணம் தொடர்பான ஆதாரங்களை அழிக்கப்பார்க்கிறது என்றும், மாணவியின் தற்கொலை விவகாரத்தை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் எனவும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சி.பி.ஐ-க்கு மாற்றம்:

இந்தச் சூழலில், அந்தப் பள்ளி மாணவி, குடும்பச் சூழலால் பள்ளிக்கு தாமதமாகச் சென்றதாகவும், அங்குள்ள பணியாளர்கள் தனக்கு வேறு வேலைகள் கொடுப்பதாகவும், அதனால் தன்னால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. மேலும், விடுதி வார்டனும், மோட்டார் போடுவது, கேட் திறப்பது முதல் மூடுவது வரை எல்லா வேலைகளையும் தன்னை செய்யச் சொல்வதாகவும் கூறியிருந்தார். இதனால் சரியாகப் படிக்க முடியாது என்று நினைத்து விஷம் அருந்தியதாக அந்த மாணவி பேசிய வீடியோ வெளியானது.

மதுரை உயர் நீதிமன்ற கிளை
மதுரை உயர் நீதிமன்ற கிளை

இதற்கிடையே, `பள்ளியில் மதம் சார்பான பிரசாரங்கள் எதுவும் செய்யப்படவில்லை. மாணவியின் தற்கொலைக்குக் கட்டாய மதமாற்றத் துன்புறுத்தல் காரணம் இல்லை’ என்று மாவட்டக் கல்வி அலுவலர் விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்திருந்தார். வெளியான வீடியோவின் உண்மைத் தன்மை ஆராயப்பட்டுவருகிறது. மேலும், மாணவியின் தந்தை தன் மகளின் தற்கொலை வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். விசாரணையில் இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றி நீதிபதி உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விசாரணைக்குழு:

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த, டெல்லி பாஜக தலைமை விசாரணைக்குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்தக் குழுவில் விஜயசாந்தி, சந்தியா ராய், உள்ளிட்ட நானு பேர் இடம்பிடித்துள்ளனர். இந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் மாணவியின் இல்லத்துக்குச் சென்று, விசாரணை நடத்தி அந்த அறிக்கையை பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவிடம் சமர்ப்பிப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இவர்களும் தங்களின் விசாரணையை இன்று தொடங்கியுள்ளனர்.

தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விசாரணை
தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விசாரணை

இந்நிலையில், பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தானாக முன்வந்தது. இதற்காக இந்த ஆணையத்தின் தலைவர் பிரியங் கனுங்கோ தலைமையிலான குழு, தஞ்சாவூர் மாவட்ட அதிகாரிகளைச் சந்தித்து விசாரணை நடத்தியது. இதில், மாவட்ட காவல்துறை, அந்தப் பள்ளி மாணவர்கள்/பெற்றோர் முதல் பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் வரை பலரைச் சந்தித்து விசாரணை நடத்தினர்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ``மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை பாஜக போராடும். இது மதத்துக்கு எதிரான போராட்டம் இல்லை. மாணவியின் மரணத்துக்கு உண்மையான நீதி கேட்கும் போராட்டம். மாணவியின் வாக்குமூலத்தை வைத்தே பாஜக போராடிவருகிறது. மாணவியின் மரணத்தைப் பல கட்சிகள் அரசியலாகிவிட்டார்கள். மத அரசியலுக்கு பா.ஜ.க-வில் இடமில்லை. தமிழகத்தில் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டுவர வேண்டும். கட்டாயப்படுத்தி யாரையும் மதமாற்றம் செய்யக் கூடாது. எந்தவித அழுத்தமும் இல்லாமல் காவல்துறையினரைப் பணியாற்ற அரசு வழிவகை செய்ய வேண்டும்" என்று பேசியிருந்தார்.

பள்ளி மாணவி வீட்டில் பாஜக முக்கியத் தலைவர்கள்
பள்ளி மாணவி வீட்டில் பாஜக முக்கியத் தலைவர்கள்

காவல்துறை சார்பிலும் சரி, அரசு சார்பிலும் சரி அந்தப் பள்ளியில் கட்டாய மதமாற்றம் நடைபெறவில்லை என்று தொடர்ந்து கூறப்பட்டுவருகிறது. எனினும், தமிழக பாஜக இந்த விவகாரத்தைத் தொடர்ந்து பேசி போராட்டங்களை முன்னெடுத்துவருகிறது. மேலும், தமிழகத்தில் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துவருகிறது.

இரண்டாவதாக வெளியான வீடியோவில் அந்த மாணவி மதமாற்றம் குறித்து எதுவும் கூறவில்லை. மேலும், அந்த மாணவி மாஜிஸ்ட்ரேட்டிடம் கொடுத்திருந்த வாக்குமூலத்திலும் மதமாற்றம் குறித்து எதுவும் கூறவில்லை. இந்த நிலையில்தான் இந்த வழக்கு சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. விசாரணை முடிவில்தான் என்ன நடந்தது என்பது தெரியவரும்.

போராட்டத்தில் பாஜகவினர்
போராட்டத்தில் பாஜகவினர்

தமிழக பாஜக-வும், அண்ணாமலையும் இந்த விவகாரத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்க என்ன காரணம் என விவரம் அறிந்த சிலரிடம் விசாரித்தோம். ``பாஜக-வின் நான்குபேர் கொண்ட குழு கொடுக்கவிருக்கும் அறிக்கை, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கொடுக்கவிருக்கும் அறிக்கை என எல்லாவற்றையும் வைத்து இந்த விவகாரத்தைத் தேசிய அளவில் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளது டெல்லி. மேலும், அவர்கள் எதிர்பார்த்திருந்த சி.பி.ஐ விசாரணை தற்போது கிடைத்துள்ளது. தமிழக அரசு சார்பில் மதமாற்றம் எதுவும் நடைபெறவில்லை என்று கூறியுள்ளது. ஒருவேளை, அப்படி நடந்தது என்று தெரியவந்தால், அது ஆளும் திமுக-வுக்குப் பெரும் பின்னடைவாக அமையும் என்பதாலும், பா.ஜ.க இந்த விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்திவருகிறது" என்று கூறினர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism