Published:Updated:

``தமிழினத் தாய்மார்களை இழிவுபடுத்திய ராசாவைக் கண்டித்து அறவழிப் போராட்டம்'' - அண்ணாமலை

அண்ணாமலை

``காவல்துறை திமுக-வின் ஏவல்துறையாகச் செயல்படுகிறது. சில திமுக வழக்கறிஞர்கள் நீதிபதிகளையே அச்சுறுத்திவருகிறார்கள்.'' - அண்ணாமலை

``தமிழினத் தாய்மார்களை இழிவுபடுத்திய ராசாவைக் கண்டித்து அறவழிப் போராட்டம்'' - அண்ணாமலை

``காவல்துறை திமுக-வின் ஏவல்துறையாகச் செயல்படுகிறது. சில திமுக வழக்கறிஞர்கள் நீதிபதிகளையே அச்சுறுத்திவருகிறார்கள்.'' - அண்ணாமலை

Published:Updated:
அண்ணாமலை

திமுக-வின் முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய எம்.பி-யுமான ஆ.ராசா அண்மையில் இந்து மதம் பற்றிப் பேசிய கருத்துகளுக்கு எதிர்ப்புகள் கிளம்பின. இந்த நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், ``திமுக ஆட்சியில் தமிழரின் மாண்பையும், மரபையும், தொன்மையையும், இறை நம்பிக்கையும் இழிவுபடுத்தும் செயல் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. தமிழ்த் தாய்மார்களை, தமிழினத்தை அவமதிக்கும் கருத்துக்கு கோவை மாவட்டத்தில் ஜனநாயகரீதியாக எதிர்ப்பு தெரிவித்த பாஜக தொண்டர்கள் தொடர்ந்து கைதுசெய்யப்படுவதைக் கண்டித்து வரும் 26-ம் தேதி அறவழியில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும்.

பாஜக
பாஜக

காவல்துறை திமுக-வின் ஏவல்துறையாகச் செயல்படுகிறது. தமிழ் இனத்தை, தமிழ்ப் பெண்களை இழிவுபடுத்தி, கேவலப்படுத்தும் ஆ.ராசா போன்ற ஆளுங்கட்சி நபர்களையெல்லாம் கண்டுகொள்ளாத காவல்துறை, ஜனநாயகரீதியாக அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பாஜக கட்சியின் தொண்டர்களையும், நிர்வாகிகளையும் பொய் வழக்கில் கைதுசெய்து அச்சுறுத்துகிறது. சில திமுக வழக்கறிஞர்கள் நீதிபதிகளையே அச்சுறுத்திவருகிறார்கள்.

திமுக-வின் அராஜகமும், ஆளுங்கட்சி என்பதால் நடத்தும் அத்துமீறலும் கண்டிக்கத்தக்கவை. மிக விரைவில் இந்த போலி வழக்கு கைது நடவடிக்கையும் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. திமுக பேசினால் கண்களை மூடிக்கொண்டு அந்த அவலத்தைக் கண்டுகொள்ளாத காவல்துறை... மறுப்பு தெரிவிக்கும் மக்களையெல்லாம் கைதுசெய்வது காவல்துறையின் ஓரவஞ்சனையான நடவடிக்கையை எடுத்துக்காட்டுகிறது.

ராசா
ராசா

திமுக-வின் பொய் வழக்கைக் கண்டும், கைது நடவடிக்கையைக் கண்டும் எந்த பாஜக தொண்டனும் அஞ்சப்போவதில்லை. தமிழினத் தாய்மார்களை தரம் தாழ்ந்து பேசிய ஆராசாவைக் கைது செய்யாமல், பாதிக்கப்பட்டவர்கள் மீது பொய் வழக்கு போட்டு கைதுசெய்வது எந்த விதத்தில் நியாயம்... காலம் உங்களைக் கண்டிப்பாக தண்டிக்கும் நாள் வெகு விரைவில் இல்லை.

`அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே’ என்று மேலும் புதிய வேகத்துடன், புதிய எழுச்சியுடன் கோவை மாவட்டத்தில் தாய்க்குலத்தைப் பழித்த, தமிழ்ச் சகோதரிகளை பிறப்பு சொல்லி இழிவு செய்த ஆ.ராசாவின் அவலத்துக்கு நீதி கேட்டு அறவழியில் போராட்டத்தை நடத்துவோம். மக்கள் ஆளுங்கட்சியின் அநீதிக்குத் தக்க பாடம் புகட்டுவார்கள்'' எனத் தெரிவித்திருக்கிறார்.