Published:Updated:

``டெல்லி அரசியலுக்கு நோ... உதயநிதியை விட மாட்டோம்!" - அண்ணாமலை பளீச் பேட்டி

அண்ணாமலை

``2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட எனக்கு விருப்பமில்லை. தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்த தான் பாஜக-வுக்கு வந்தேன்." - அண்ணாமலை

Published:Updated:

``டெல்லி அரசியலுக்கு நோ... உதயநிதியை விட மாட்டோம்!" - அண்ணாமலை பளீச் பேட்டி

``2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட எனக்கு விருப்பமில்லை. தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்த தான் பாஜக-வுக்கு வந்தேன்." - அண்ணாமலை

அண்ணாமலை

பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``காவல்துறையினருக்குச் சரியான நேரத்தில் பதவி உயர்வு கிடைப்பதில்லை. கிரேடு 2 பதவியில் இருக்கும் காவல்துறை நண்பர்களுக்கு பதவி உயர்வு வராதது கண்டிக்கத்தக்கது.

அண்ணாமலை
அண்ணாமலை

திமுக அரசு வந்த பிறகு கமிஷனுக்காக வேலை செய்கின்றனர். மின்சாரத்துறை அமைச்சர் பேசுவது பாதிதான் உண்மை. பாதி உண்மை இல்லை.

சோலாருக்கு மானியம் கொடுப்போம் என திமுக அரசு தெரிவித்தது. ஆனால் எத்தனை வீடுகளுக்குக் கொடுத்துள்ளார்கள். அதில் எத்தனை பேருக்கு லஞ்சம் இல்லாமல் இணைப்பு கொடுத்துள்ளார்கள். 2021-22 ,22-23 ஆண்டை ஒப்பிட்டு பார்க்கும்போது தமிழ்நாட்டில், 22%  மது விற்பனை அதிகரித்துள்ளது.

டாஸ்மாக்
டாஸ்மாக்

2.53 லட்சம் லிட்டர் சாராயம் காவல்துறையால் பிடிக்கப்பட்டுள்ளது. 75% டாஸ்மாக்குகளை மூட வேண்டும். 25% டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட வேண்டும். தமிழ்நாடு முழுவதும் கல் விற்பனை செய்ய வேண்டும். கல்லில் வருமானத்திற்கும் வழி உள்ளது.

அடுத்த 5 ஆண்டுகளில் வருமானத்தை கல்லால் எப்படி ஈட்டிக் கொடுக்க முடியும் என்பது வெள்ளை அறிக்கையாக உள்ளது. விழுப்புரம் மாநாட்டில், மக்கள் மத்தியில் அந்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். விழுப்புரத்துக்கு பிறகு தமிழ்நாடு முழுவதும் மாநாடு நடைபெறும். 2,000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் இல்லை.

ரூ.2,000
ரூ.2,000

2,000 ரூபாய் நோட்டு வைத்துள்ளவர்கள் பதுக்கி வைத்தவர்கள். 2,000 ரூபாய் நோட்டால் கொள்ளையடித்தவர்களுக்குத்தான் பிரச்னை. டாஸ்மாக், கூட்டறவு சங்கம், மின் கட்டணம் செலுத்தும் இடங்களை மத்திய அரசு கண்காணிக்க வேண்டும் .

உதயநிதி ஸ்டாலின் மணி லாண்டர். இது குறித்து கேள்வி கேட்டால் பத்திரிகையாளர்களிடம் சிரித்து செல்கின்றனர். கவர்னரிடம் சென்றுள்ளோம். நாங்கள் விடுவதில்லை. உதயநிதி ஸ்டாலின் எத்தனை நாள் தப்பிப்பார். சின்ன குழந்தையைப் போல் கோச் செய்கிறார்கள். 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட எனக்கு விருப்பமில்லை. தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்த தான் பாஜக-வுக்கு வந்தேன்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

2024-ல் தொண்டனாக வேலை செய்வேன். டெல்லி செல்ல விருப்பமில்லை. தமிழ்நாட்டை விட்டு வெளியே செல்ல விருப்பமில்லை. இந்த மண்ணில் எனது அரசியல் இருக்க விரும்புகிறேன்” என்றார்.