Published:Updated:

`முதல்வர் செவி சாய்க்கிறார்... செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுப்பார்!’ - அண்ணாமலை நம்பிக்கை

`முதல்வர் மின்வாரியத்தைக் கண்காணித்து, இந்த அமைச்சர்மீது நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம்!’ - அண்ணாமலை.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ``அதிமுக-வினரும் திமுக அரசை விமர்சிக்கத்தான் செய்கின்றனர். அதேபோலத்தான் பாஜக-வும் விமர்சிக்கிறது. எந்தக் குழப்பமும் இல்லாமல் மக்கள் பிரச்னைகளை எடுத்துரைக்கிறோம்.

ஸ்டாலின்
ஸ்டாலின்
`` பாஜக மீது கை வைத்தால்; வட்டியும் முதலுமாகத் தான் திருப்பிக் கொடுக்கப்படும்" - அண்ணாமலை

கோயில்கள் திறப்பு, ஆவின் 100 கோடி ரூபாய் டெண்டர் என்று சில இடங்களில் முதல்வர் செவி சாய்த்து அதைச் சரிசெய்து கொடுக்கிறார். ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக பாஜக செயலாற்றிவருகிறது. திமுக பேசுவது எல்லாமே எங்களை எதிர்த்துத்தான்.

பார்க்கும்போது பாஜக - திமுக அரசியல்தான் நடந்துகொண்டிருக்கிறது. காலத்துக்குத் தகுந்ததுபோல நாங்கள் மாற மாட்டோம். திமுக ஆட்சிக்கு வந்ததும், தமிழ்நாட்டு அரசின் கடன் பிரச்னையைச் சரிசெய்வோம் என்றனர். ஆனால், மின்வாரியத்தில் தனியாருடன் போடப்படும் ஒப்பந்தத்தில் மிகப்பெரிய ஊழல் நடக்கவிருக்கிறது. அதைத்தான் சொல்கிறோம்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

அதற்கு அமைச்சர் தன் வீட்டில் அமர்ந்து, அதாவது கண்ணாடி மாளிகையிலிருந்து கல் வீசப் பார்க்கிறார். முதலில் அவர் வீட்டைச் சுத்தப்படுத்தட்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவரின் வாயிலிருந்தே உண்மை வரும். இது கருத்து மோதல் இல்லை. நாம் கொடுத்த ஆதாரத்துக்கு பதிலே வரவில்லை. `20 ரூபாய்க்கு பவரே வாங்கவில்லை. ஆதாரத்தைக் காட்டுங்கள்’ என்று செந்தில் பாலாஜி கூறினார். நாங்கள் அதற்கான ஆதாரத்தை காண்பித்துவிட்டோம்.

அண்ணாமலை
அண்ணாமலை

இதைவிட என்ன ஆதாரம் தேவை? இப்படித் தொடர்ந்து ஆதாரங்களை வெளியிட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். முதல்வர் மின்வாரியத்தைக் கண்காணித்து, இந்த அமைச்சர்மீது நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு