Published:Updated:

``எங்களுடைய கூட்டணியில் இருக்கக்கூடிய பெரிய கட்சி அதிமுக தான்” - அண்ணாமலை

அண்ணாமலை

``அ.தி.மு.க., ஒரு பெரிய கட்சி. ஈரோட்டுல நின்னு ஜெயிச்ச கட்சி. அவங்ககிட்ட வேட்பாளர்கள் இருக்காங்க." - அண்ணாமலை

``எங்களுடைய கூட்டணியில் இருக்கக்கூடிய பெரிய கட்சி அதிமுக தான்” - அண்ணாமலை

``அ.தி.மு.க., ஒரு பெரிய கட்சி. ஈரோட்டுல நின்னு ஜெயிச்ச கட்சி. அவங்ககிட்ட வேட்பாளர்கள் இருக்காங்க." - அண்ணாமலை

Published:Updated:
அண்ணாமலை

சென்னையிலிருந்து விமானம் மூலமாக திருச்சிக்கு வருகை தந்த தமிழ்நாடு பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை, விமான நிலைய வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க., தரப்பில் வேட்பாளர் நிறுத்தப்பட வாய்ப்பிருக்கிறதா..? பா.ஜ.க.,வின் நிலைப்பாடு என்ன..? என்று முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு அண்ணாமலை அளித்த பதில்கள்…

``இடைத்தேர்தல் எல்லாம் ஒரு கட்சியினுடைய பலப்பரீட்சையோ, கட்சியினுடைய வளர்ச்சி போன்றவற்றை எல்லாம் பார்ப்பதற்கான ஒரு அளவுகோல் இல்லை. கூட்டணிக்கு என்று ஒரு மரபு, தர்மம் இருக்கிறது. அதிலும் குறிப்பாக, கூட்டணி தர்மத்தின்படி நடக்கும்போது தான் கூட்டணியில் இருக்கக்கூடிய எல்லா கட்சிகளுக்கும் மரியாதை இருக்கும். தி.மு.க., காங்கிரஸ் ஆகியவற்றை எதிர்த்து நிற்கக்கூடிய கட்சி என்பது பலம்வாய்ந்த கட்சியாகவும், மக்கள் ஆதரவு பெற்றதாகவும், வேட்பாளர் மக்களுக்கு நன்கு அறிமுகமானவராகவும், ஈரோடு பகுதியில் இருக்கக்கூடிய வேட்பாளராக இருக்க வேண்டும். இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி பணத்தை தண்ணீர் மாதிரி செலவு செய்வார்கள். அப்படியிருக்க ஒரு அணியாக நாம் இருந்து, வேட்பாளர் வெற்றி பெறுவதற்கான முழு வாய்ப்பையும் கொடுக்க வேண்டும்.

அண்ணாமலை
அண்ணாமலை

எங்களுடைய கூட்டணியில் இருக்கக்கூடிய பெரிய கட்சி அ.தி.மு.க., தான். ஈரோட்டைப் பொறுத்தவரை அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களாக இருந்தவர்கள் எல்லாம் அந்தக் கட்சியில் இருக்கிறார்கள். இந்நிலையில் தேர்தலில் போட்டியிட விருப்பம் இருப்பவர்களிடம் அ.தி.மு.க.,வில் விருப்பமனுக்கள் பெற்று வருகிறார்கள்.  இதற்கிடையே நம்முடைய அலுவலகத்திற்கு ஓ.பி.எஸ் அவர்களும் வந்துவிட்டு போயிருக்கிறார்கள். எந்தவொரு கட்சியும் ‘நான் வளர்ந்துட்டனா… நான் பெரிய ஆளா…’ என்பதை விட, நிற்கக்கூடிய வேட்பாளர் முழு தகுதி வாய்ந்த வேட்பாளாராக இருக்க வேண்டும் என்பதையே பார்க்க வேண்டும். அந்த வேட்பாளர் பண பலம், படை பலம், அதிகார பலம் இதையெல்லாம் தாண்டி எதிர்க்கக்கூடிய வேட்பாளராக இருக்க வேண்டும். அவரை அணிவகுத்து தான் எல்லாரும் பின்னாடி நிற்க வேண்டும். இதுதான் என்னுடையதும், கட்சியினுடைய நிலைப்பாடும் ஆகும்” என்றார்.

தொடர்ந்து பேசியவர், ``காங்கிரஸில் ஈரோட்டில் இருக்கக்கூடிய மாவட்டத் தலைவரே எதிர்ப்பாக சில கருத்துகளைச் சொல்லியிருக்கிறார். இன்றைக்கு காங்கிரஸில் பெரியளவில் பிரச்னைகள் இருக்கிறது. ஈ.வி.கே.எஸ் அவர்களின் பேச்சை தொடர்ந்து தமிழக மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர் அரசியல் விஷயத்துக்காக பா.ஜ.க.,வை குற்றம் சுமத்தலாம், குறை சொல்லலாம். ஆனால், அவருடைய கட்சியில் இருக்கக்கூடிய மாவட்டத் தலைவரே முழுமையாக அவர் பின்னால் நிற்பாரா என்பது ஒரு சந்தேகமாகத் தான் இருக்கிறது. அப்படியிருக்கும் போது ஈ.வி.கே.எஸ் அண்ணனுக்கு மற்ற கட்சியைப் பற்றி பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது. அ.தி.மு.க., ஒரு பெரிய கட்சி. ஈரோட்டில் நின்று ஜெயித்த கட்சி. அவர்களிடம் வேட்பாளர்கள் இருக்கிறார்கள். அந்தக் கட்சி தீர்மானிக்கும்.

அண்ணாமலை
அண்ணாமலை

அறநிலையத் துறையைப் பொறுத்தவரை நேற்று முன்தினம் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் நான் பேசிய கருத்துகள் எல்லாம் ஆர்.டி.ஐயில் இருக்கக்கூடிய உண்மைகள். அமைச்சர் சேகர்பாபு அதை மறுத்து சொல்லட்டும். திருச்செந்தூர் கோயிலில் 5,309 மாடுகள் காணாமல் போகவில்லை என அவர் சொல்லட்டும். கிட்டத்தட்ட 1,302 கோடி ரூபாய்க்கு அறநிலையத்துறையில் இன்டர்னல் ஆடிட்டிங்கில் அப்ஜக்‌ஷன் இல்லையென அவர் சொல்லட்டும். கிட்டத்தட்ட 15 லட்சம் பில் அப்ஜெக்‌ஷனில் இல்லையென அவர் தெளிவுபடுத்தட்டும். கோயில் உண்டியலில் மக்கள் போடும் பணத்தை எடுத்து மிக்‌ஷர் வாங்கி சாப்பிடக்கூடாது” என்றார்.