Published:Updated:

``அரசியல் இல்லாமல், விளையாட்டு மூலம் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும்" - சொல்கிறார் அண்ணாமலை

மோடி கபடி லீக் போட்டி நிகழ்ச்சி

"இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி நடக்கும்போது கபடிப் போட்டியும் அதில் இடம்பெறும். அப்போது இந்தியா தங்கப்பதக்கம் வெல்லும்" என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசினார்.

``அரசியல் இல்லாமல், விளையாட்டு மூலம் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும்" - சொல்கிறார் அண்ணாமலை

"இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி நடக்கும்போது கபடிப் போட்டியும் அதில் இடம்பெறும். அப்போது இந்தியா தங்கப்பதக்கம் வெல்லும்" என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசினார்.

Published:Updated:
மோடி கபடி லீக் போட்டி நிகழ்ச்சி

பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு தமிழக பா.ஜ.க-வின் விளையாட்டுத்திறன் மேம்பாட்டுப் பிரிவு சார்பில் தமிழ்நாடு முழுவதுமுள்ள 60 பா.ஜ.க மாவட்ட அமைப்புகளில் மோடி கபடி லீக் போட்டி நடத்தப்பட்டது.

அதில் வெற்றிபெற்ற அணிகளுக்கு இறுதிப்போட்டி மதுரையிலுள்ள மதுரைக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

மோடி கபடி லீக் இறுதிச்சுற்று
மோடி கபடி லீக் இறுதிச்சுற்று

மோடி கபடி லீக் இறுதிப் போட்டிக்கான தொடக்கவிழாவில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் அண்ணாமலை
நிகழ்ச்சியில் அண்ணாமலை

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ஒலிம்பிக் சங்க துணைத் தலைவரும், தமிழ்நாடு கபடிக் கழகத்தின் தலைவரும், மதுரை மாநகராட்சி அ.தி.மு.க தலைவருமான சோலை ராஜா, அண்ணாமலையைப் புகழ்ந்து பேசி வீரவாள் பரிசளித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, ``அரசியல் இல்லாமல் விளையாட்டு மூலம் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்பதற்காக இந்தக் கபடிப் போட்டி நடைபெற்றுவருகிறது.

இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி நடக்கும்போது கபடிப் போட்டியும் அதில் இடம்பெறும். அப்போது இந்தியா தங்கப் பதக்கம் வெல்லும். இந்தக் கபடிப் போட்டி பொதுமக்களுக்காக நடத்தப்படுகிறது.

அண்ணாமலை
அண்ணாமலை

மதுரை மண்ணில்தான் இறுதிப்போட்டி நடைபெற வேண்டும் என்பதற்காக இங்கு நடைபெறுகிறது. தமிழகத்தில் இது போன்று பிரமாண்டமாக கபடிப் போட்டியை யாரும் நடத்தவில்லை.

விளையாடுவதால் நல்ல மனிதர்களாக மாறுகின்றனர். இந்த இறுதிப்போட்டியில் வெற்றிபெறும் அணிகளுக்கு முதல் பரிசு ரூ.15 லட்சம், இரண்டாம் பரிசு ரூ.10 லட்சம், மூன்றாம் பரிசு ரூ.5 லட்சம் வழங்கவிருக்கிறோம்.

இதுவரை இந்தக் கபடி போட்டிகளில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 61,000 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர். வீட்டில், நாட்டில் எந்தப் பிரச்னையாக இருந்தாலும் விளையாட்டுப் போட்டியைப் பார்த்தால் மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.

கலந்துகொண்ட கபடி வீரர்கள்
கலந்துகொண்ட கபடி வீரர்கள்

கபடி விளையாட்டுக்கான சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் தமிழகத்துக்கு கொண்டுவருவது எங்களது பொறுப்பு. ஒலிம்பிக் சங்க துணைத் தலைவர் சோலை ராஜாவை டெல்லிக்கு அழைத்துச் சென்று இதைச் செய்வோம்" என்றார்.