Published:Updated:

`கோட்டை வடிவில் மேடை... 25 பாஜக எம்.பி-க்கள் நிச்சயம்’ - பொள்ளாச்சிக் கூட்டத்தில் அண்ணாமலை

பாஜக பொள்ளாச்சி பொதுக்கூட்டம்

``ஓராண்டுக்கால திமுக ஆட்சி, எப்போது தேர்தல் வரும் என்று சலிப்படையவைத்திருக்கிறது. பிரதமர் மோடிக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் ஏணி வைத்தால்கூட எட்டாது." - அண்ணாமலை

`கோட்டை வடிவில் மேடை... 25 பாஜக எம்.பி-க்கள் நிச்சயம்’ - பொள்ளாச்சிக் கூட்டத்தில் அண்ணாமலை

``ஓராண்டுக்கால திமுக ஆட்சி, எப்போது தேர்தல் வரும் என்று சலிப்படையவைத்திருக்கிறது. பிரதமர் மோடிக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் ஏணி வைத்தால்கூட எட்டாது." - அண்ணாமலை

Published:Updated:
பாஜக பொள்ளாச்சி பொதுக்கூட்டம்

மத்திய அரசின் எட்டு ஆண்டுக்கால சாதனை விளக்க பாஜக பொதுக் கூட்டம் கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் நடைபெற்றது. இதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். பொதுக் கூட்ட மேடையை தமிழ்நாடு சட்டசபைத் தோற்றத்தில் அமைத்திருந்தனர். `பொள்ளாச்சியில் தாமரை ஆட்சி’ என்ற வாசகம் எழுதி பாஜக கொடியைப் பறக்கவிட்டிருந்தனர்.

பாஜக பொதுக் கூட்ட மேடை
பாஜக பொதுக் கூட்ட மேடை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“விரைவில் கோட்டையிலும் தாமரை மலரும் என்பதைச் சொல்லும்விதமாகத்தான் மேடையை சட்டசபை வடிவில் அமைத்தோம்” என்கின்றனர் பாஜக-வினர். கூட்டத்தில் ஏராளமான மக்கள் கலந்துகொள்ள, அண்ணாமலைக்கு தடபுடலாக வரவேற்பு கொடுத்தனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, “பொள்ளாச்சி மண்ணிலே பற்றவைத்திருக்கும் தீப்பொறியின் தாக்கம் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தெரியும். இது காட்டுத்தீயாக மாறி, அசுரர்களை அழித்து, நல்லவர்களுக்கு அக்னியாகவும் இருக்கும். இது சரித்திர மேடை. மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் கோட்டை. இந்த எட்டு ஆண்டுக்கால ஆட்சியில் இந்தியாவையே தலைநிமிர வைத்திருக்கிறோம்.

அண்ணாமலை
அண்ணாமலை

அமெரிக்கா, ஐரோப்பியா என்று உலக நாடுகள் மோடி ஜி முன்பு மண்டிபோட்டு உக்கார்ந்திருக்கின்றனர். மோடி ஜி அமெரிக்கா போய் இந்திய மக்களைக் கூட்டம் போட்டுச் சந்திக்கிறார். அமெரிக்க அதிபர், ‘நானும் வரலாமா’ என்று அனுமதி கேட்டு அதற்கு வருகை புரிந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எட்டு ஆண்டுக்கால பாஜக ஆட்சி பூரிப்படையவைத்திருக்கிறது. ஓராண்டுக்கால திமுக ஆட்சி, எப்போது தேர்தல் வரும் என்று சலிப்படையவைத்திருக்கிறது. ஒரு குண்டூசி எடுத்துவிட்டார்கள் என்றுகூட மோடி, அமைச்சர்கள் உள்ளிட்ட யார்மீதும் குற்றச்சாட்டு வைக்க முடியாது. பிரதமர் மோடிக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் ஏணி வைத்தால்கூட எட்டாது.

பாஜக பொதுக் கூட்டம்
பாஜக பொதுக் கூட்டம்

மண்தான் அந்த ஊரின் அடிப்படை. தற்போது பொள்ளாச்சியில் ஒரு நாளுக்கு 7,000 லோடு மண் கேரளாவுக்குக் கடத்தப்படுகிறது. கையையும் காலையும் கட்டினால் காவல்துறை எப்படி ஓட முடியும்... வாரம் வாரம் தமிழ்நாட்டில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை, கருமுட்டை விற்பனை, கொலை என்று தமிழ்நாடு பார்க்காத புது புதுக் குற்றங்கள் இந்த ஆட்சியில் நடந்துவருகின்றன.

எப்படிக் குற்றம் செய்வது என்பதில் திமுக-வினர் பிஹெச்.டி முடித்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்புக்குப் பிறகு நடந்த தேர்தல்களில் அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனியில் ஆட்சி மாற்றம் நடந்திருக்கிறது. அந்த நாட்டுத் தலைவர்கள் கொரோனாவைச் சரியாகக் கையாளவில்லை என்று மக்கள் எதிர்க்கின்றனர். ஆனால், இந்தியாவில் கொரோனவுக்குப் பிறகு நடந்த தேர்தல்களில் பாஜக-வின் வாக்குவங்கி அதிகரித்திருக்கிறது.

பாஜக பொதுக் கூட்ட மேடை
பாஜக பொதுக் கூட்ட மேடை

கொரோனாவை மத்திய அரசு சிறப்பாகக் கையாண்டதற்கு இது ஓர் உதாரணம். `பாஜக மதவெறிக் கட்சி. சிறுபான்மை மக்களைக் கண்டால் அவர்களுக்கு ஆகாது’ என்று காங்கிரஸ், திமுக உள்ளிட்டோர் வெறுப்பு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மணிப்பூரில் இரண்டாவது முறையாக பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்திருக்கிறது. அங்கு 52 சதவிகித மக்கள் கிறிஸ்தவர்கள். திமுக-வினருக்கு கூகுளில் படிக்கக் கூடவா தெரியாது... கூகுளைப் பார்த்தாலே இது தெரிந்திருக்கும். முதல்வராகப் பதவியேற்றதும் ஸ்டாலின், நீட் தேர்வை ரத்துசெய்வது தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதினார்.

பாஜக பொதுக் கூட்டம்
பாஜக பொதுக் கூட்டம்

ஒன்பது மாதங்கள் ஆகிவிட்டன. இப்போதுவரை அதற்கு எந்த முதல்வரும் பதில் கடிதம் போடவில்லை. தமிழ்நாட்டைத் தவிர அனைத்து மாநிலங்களும் நீட்டை ஆதரிக்கின்றன. திமுக மட்டும்தான் அதை எதிர்க்கிறது.

தமிழ்நாட்டிலுள்ள பாதி தனியார் மருத்துவக் கல்லூரிகள் திமுக-வின் ஒரு முக்கியமான தலைவரின் பெயரில் உள்ளன. 2006-11 திமுக ஆட்சியில், தமிழ்நாட்டில் ஒன்பது தனியார் மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டன. அவை அனைத்துமே திமுக-வினருக்கு சொந்தமானவைதான். இதன் காரணமாகத்தான் திமுக நீட் தேர்வை எதிர்க்கிறது.

நீட் தேர்வு
நீட் தேர்வு

தனியார் மருத்துவக் கல்லூரிகள் நடத்தும் நுழைவுத் தேர்வு எல்லாமே, அந்த நிர்வாகம் ஏற்கெனவே முன்திட்டமிட்டபடி நடக்கும். நீட் தேர்வு மிகவும் நியாயமாக நடக்கும். அதனால்தான் கோவை இருளர் பழங்குடி மாணவி, தேனியில் பூக்கடை வியாபாரம் செய்பவரின் மகள் மருத்துவப் படிப்புக்குச் செல்கின்றனர்.

முதல்வர் சமீபத்தில் தஞ்சாவூர் சென்றார். பதநீரைக் குடித்து, ‘சர்க்கரை போட்டிருக்கிறதா?’ என கேட்டிருக்கிறார். வயல்களுக்கு நடுவே சிவப்பு கம்பளம் போட்டு பார்வையிட்டிருக்கிறார். இது மட்டும் காமராஜருக்கு தெரிந்திருந்தால், உள்ளே படுத்திருப்பவர் எழுந்து வந்திருப்பார். மாட்டுக்குக் கொம்பிலிருந்து பால் வருகிறதா, மடியிலிருந்து பால் வருகிறதா என்றே தெரியாது. இவர் எப்படி விவசாயத்தைப் பாதுகாப்பார்?

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

மத்திய அரசின் திட்டங்களை காப்பி அடித்து அதைப் புதிய பெயர்களில் இங்கு வெளியிடுகின்றனர். இந்தியாவிலேயே அதிகம் பொய் சொல்வதாலும், ஊழல் செய்வதாலும்தான் `நம்பர் 1 முதல்வர்’ என்று அழைக்கப்படுகிறார்.

உத்தரப்பிரதேசத்தில் ஒரு பெண்ணின் மீது கைவைக்க முடியாது. அப்படி வைத்தால் மண்ணோட மண்ணாகப் பெயர்த்து விடுவார்கள். அப்படி இருக்கிறது சட்டம்-ஒழுங்கு. இங்கு அது சந்தி சிரித்துக்கொண்டிருக்கிறது. காவிரி தொடங்கி கச்சத்தீவு வரை பல்வேறு விவகாரங்களில் திமுக துரோகம் செய்திருக்கிறது.

பாஜக பொதுக் கூட்டம்
பாஜக பொதுக் கூட்டம்

திருச்சி மாநகராட்சியைவிட மூன்று மடங்கும் அதிகம் சொத்து வரியை பொள்ளாச்சி நகராட்சியில் வசூலிக்கின்றனர். 2024 நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்நாடு பாஜக-விலிருந்து 25 எம்.பிக்கள் டெல்லிக்குச் செல்வார்கள்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism