Published:Updated:

பாஜக தனித்துப் போட்டி: `இது கடினமான முடிவல்ல..!' - அண்ணாமலை

மாநிலத் தலைவர் அண்ணாமலை-பாஜக

``பாஜக தரப்பிலிருந்து அதிக இடங்களில் நிற்க வேண்டுமென்பது நியாயமான கோரிக்கை. இரண்டு நாள்களாகப் பேசி முடித்த பின்பு, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக பாஜக முடிவெடுத்துள்ளது" என்று அண்ணாமலை பேட்டியளித்துள்ளார்.

பாஜக தனித்துப் போட்டி: `இது கடினமான முடிவல்ல..!' - அண்ணாமலை

``பாஜக தரப்பிலிருந்து அதிக இடங்களில் நிற்க வேண்டுமென்பது நியாயமான கோரிக்கை. இரண்டு நாள்களாகப் பேசி முடித்த பின்பு, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக பாஜக முடிவெடுத்துள்ளது" என்று அண்ணாமலை பேட்டியளித்துள்ளார்.

Published:Updated:
மாநிலத் தலைவர் அண்ணாமலை-பாஜக

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி பங்கீடு தொடர்பாக இரண்டு நாள்களாக அ.தி.மு.க - பா.ஜ.க இடையே பேச்சுவார்த்தை நீடித்துவந்தது. இந்த நிலையில், சற்று முன்பு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க தனித்துப் போட்டியிடப்போவதாக, மாநில பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கட்சி அலுவலகத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவித்தார்.

எடப்பாடி, ஓ.பி.எஸ் 
எடப்பாடி, ஓ.பி.எஸ் 

இது தொடர்பாகப் பேசிய அவர், ``பா.ஜ.க ஒரு வேகமாக வளர்ந்துவரக்கூடிய கட்சி. கட்சியினர் நிறைய இடங்களில் போட்டியிட வேண்டுமென்று விருப்பப்படுகிறார்கள். தொண்டர்களின் குரலுக்கு செவிசாய்க்க வேண்டுமென்பது மாநிலத் தலைமையின் முடிவு. அதற்கு அகில இந்தியத் தலைவர்களும் ஒப்புதல் அளித்தார்கள். அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க-விடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். பா.ஜ.க தரப்பிலிருந்து அதிக இடங்களில் நிற்க வேண்டுமென்பது நியாயமான கோரிக்கை. அதனால், இந்த இரண்டு நாள்களாகப் பேசி முடித்த பின்பு, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக பா.ஜ.க முடிவெடுத்திருக்கிறது. தனித்துப் போட்டியிடுவது என்பது கடினமான முடிவல்ல" என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மாநில தலைவர் அண்ணாமலை-பாஜக
மாநில தலைவர் அண்ணாமலை-பாஜக

தொடர்ந்து பேசிய அண்ணாமலை, ``தமிழகத்திலுள்ள அனைத்துத் தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தப்போகிறோம். அதேநேரத்தில் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர்களான பன்னீர்செல்வத்திடமும், எடப்பாடி பழனிசாமியிடமும் பேசினோம். அவர்களிடத்தில், நம்முடைய கூட்டணி என்பது தேசிய ஜனநாயகக் கூட்டணியாகத் தொடரும். அகில இந்திய அளவில் 2024 நாடாளுமன்றத் தேர்தல் வரை தொடர்ச்சியாக இருக்கும். முக்கியமான விஷயங்களில் நம்முடைய நிலைப்பாடு ஒன்றாக இருக்கும் என்றோம்" என்றார்.

மேலும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பா.ஜ.க-வின் வேட்பாளர் பட்டியல் சற்று நேரத்தில் வெளியிடப்படும் என்றும் அண்ணாமலை கூறினார். அவரைத் தொடர்ந்து, கூட்டணி முறிவு குறித்து கருத்து தெரிவித்த வானதி சீனிவாசன், ``நயினார் நாயகேந்திரனின் பேச்சுக்கும், கூட்டணிப் பிரிவுக்கும் சம்பந்தமில்லை. இது கட்சியின் முடிவு" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism