Published:Updated:

``தற்போதைய சர்வாதிகார அரசுக்கு எதிராக மற்றொரு `Do or Die' இயக்கம் தேவை!'' - ராகுல் காந்தி

ராகுல் காந்தி

``இன்று, சர்வாதிகார அரசுக்கு எதிராகவும், நாட்டைப் பாதுகாக்கவும் மற்றொரு 'டூ ஆர் டை' ( do or die) இயக்கம் தேவைப்படுகிறது." - ராகுல் காந்தி

``தற்போதைய சர்வாதிகார அரசுக்கு எதிராக மற்றொரு `Do or Die' இயக்கம் தேவை!'' - ராகுல் காந்தி

``இன்று, சர்வாதிகார அரசுக்கு எதிராகவும், நாட்டைப் பாதுகாக்கவும் மற்றொரு 'டூ ஆர் டை' ( do or die) இயக்கம் தேவைப்படுகிறது." - ராகுல் காந்தி

Published:Updated:
ராகுல் காந்தி

வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்டதன் 80-வது ஆண்டு நிறைவையொட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தன்னுடைய முகநூல் பக்கத்தில், ``வெள்ளையனே வெளியேறு இயக்கம் வரலாற்றின் அத்தியாயம்... அதை யாரும் மறக்க முடியாது. ஆகஸ்ட் 8, 1942 அன்று பம்பாயிலிருந்து தொடங்கிய இந்த இயக்கம், ஆங்கிலேயர்களுக்கு தூக்கமில்லாத இரவுகளைக் கொடுத்தது. ஆகஸ்ட் மாலை, பம்பாயில் உள்ள கோவாலியா டேங்க் மைதானத்தில் மக்கள் கூடினார்கள். காந்திஜி 'டூ ஆர் டை (do or die)' என்ற முழக்கத்தை எழுப்பினார். இதன் மூலம் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் கடைசி அத்தியாயம் தொடங்கியது.

வெள்ளையனே வெளியேறு இயக்கம்
வெள்ளையனே வெளியேறு இயக்கம்

இதைத் தொடர்ந்து, நாட்டின் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்க்கையைப் பற்றி கவலைப்படாமல் இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக மாறினர்கள். இதில் சுமார் 940 பேர் தியாகிகளும், ஆயிரக்கணக்கானோரும் கைதுசெய்யப்பட்டனர். இன்று, சர்வாதிகார அரசுக்கு எதிராகவும், நாட்டைப் பாதுகாக்கவும் மற்றொரு 'டூ ஆர் டை' ( do or die) இயக்கம் தேவைப்படுகிறது. இப்போது அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

சர்வாதிகாரம், பணவீக்கம், வேலையின்மை இந்தியாவைவிட்டு வெளியேற வேண்டும். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் நினைவுநாளான இன்று, நாட்டின் விடுதலைக்காக உயிர் தியாகம் செய்த சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன்'' என பதிவிட்டிருக்கிறார்.