Published:Updated:

கே.பி.அன்பழகன்: லஞ்ச ஒழிப்புத்துறையினரின் ரெய்டில் 6-வது முன்னாள் அமைச்சர்! -57 இடங்களில் சோதனை

முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன்

முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தனது வருமானத்தைவிட கூடுதலாக ரூபாய் 11.32 கோடி சொத்து சேர்த்துள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புதுறை சோதனை நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது சொத்துக்குவிப்பு வழக்கு பதியப்பட்டு, அன்பழகன் தொடர்புடைய 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். கே.பி.அன்பழகன் கடந்த அதிமுக ஆட்சியில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சராகச் செயல்பட்டவர்.

கே.பி.அன்பழகன்: லஞ்ச ஒழிப்புத்துறையினரின் ரெய்டில் 6-வது முன்னாள் அமைச்சர்! -57 இடங்களில் சோதனை
PremKumar SK

முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தனது வருமானத்தைவிட கூடுதலாக ரூபாய் 11.32 கோடி சொத்து சேர்த்துள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அன்பழகனின் மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன், மருமகள் வைஷ்ணவி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறையினரின் சோதனைக்கு உள்ளாகும் 6-வது அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன். ஏற்கெனவே முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், வீரமணி ஆகியோர் வீடுகளில், அவர்களுக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism