Published:Updated:

சமூக விரோதச் செயல்கள்... கண்காணிக்கப்படும் திமுக-வினர்! - என்ன காரணம்?

அண்ணா அறிவாலயம்

ஆங்காங்கே நடக்கும் சில கட்டப்பஞ்சாயத்து, கமிஷன், வசூல் உள்ளிட்ட சமூக விரோதச் செயல்களில் தி.மு.க-வினர் அதிகம் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

சமூக விரோதச் செயல்கள்... கண்காணிக்கப்படும் திமுக-வினர்! - என்ன காரணம்?

ஆங்காங்கே நடக்கும் சில கட்டப்பஞ்சாயத்து, கமிஷன், வசூல் உள்ளிட்ட சமூக விரோதச் செயல்களில் தி.மு.க-வினர் அதிகம் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

Published:Updated:
அண்ணா அறிவாலயம்

`சட்டம் ஒழுங்கைப் பேணிக்காத்திட, சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அப்படிச் சொன்னதாலோ என்னவோ, சமூக விரோதச் செயல்களில் தி.மு.க-வினரும் சிக்கிவருகின்றனர். அதனால், குற்ற வழக்குகளில் சிக்கியிருக்கும் தி.மு.க-வினர் குறித்து உளவுத்துறை தகவல் சேகரித்துவருகிறது.

காவல்துறை மாநாடு
காவல்துறை மாநாடு

இதுகுறித்து உளவுத்துறை அதிகாரி ஒருவரிடம் பேசினோம். ``ஆட்சி அமைந்த 10 மாதங்கள்தான் ஆகிறது. அதற்குள் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டத் தலைவர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள். பொதுவாக குடும்பங்களுக்குள் நடக்கும் மோதல், அடிதடி, கொலை தவிர்த்து, திருட்டுகளும், பாலியல் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இவையெல்லாமே தனிப்பட்ட நபர்கள் சார்ந்த பிரச்னை என்பதால், அரசு இதில் நடவடிக்கைதான் எடுக்க முடியுமே தவிர, நடக்கும் முன்னதாகவே தடுத்து நிறுத்த முடியாது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆனால், இவை தவிர, கட்டப்பஞ்சாயத்து, மோசடிகள், நில அபகரிப்பு, அடாவடி வசூல், கமிஷன் என இதர சமூக விரோதச் செயல்களில் தி.மு.க-வினர் ஈடுபட்டுவருவதுதான் முதல்வரை கண் சிவக்க வைத்துவிட்டது. `ஒன்று போனால் ஒன்று வரும்’ என்பதுபோல, ஒரு சம்பவத்தில் ஈடுபட்ட தி.மு.க-வினர் மீது நடவடிக்கை எடுத்தால், இன்னொரு சம்பவத்தில் இன்னும் சிலர் சிக்குகிறார்கள். அதிலும், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் மொத்தமும் முடிந்து, எல்லோரும் பதவியில் அமர்ந்துவிட்டதால் அவர்களது ஆட்டங்களும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன.

தாக்குதல்
தாக்குதல்

அதனால், தமிழகம் முழுவதும் தி.மு.க நிர்வாகிகள் மீதும், அவர்களின் உறவினர்கள் மீதும் எத்தனை குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன? எந்த மாவட்டம், எந்த காவல் நிலையம்? வழக்குகளின் எண்கள், கைது நிலவரம் என ஒட்டுமொத்தத் தகவல்களையும் அனுப்பிவைக்குமாறு உளவுத்துறை தலைமையிலிருந்து அனைத்து மாவட்ட ஐ.எஸ்., எஸ்.பி.சி.ஐ.டி பிரிவினருக்கும், அனைத்துக் காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, தகவல்களைத் திரட்டும் பணிகள் ஜரூராக நடைபெற்று வருகிறது” என்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism