Published:Updated:

Thug life `அப்பாவு’ - சட்டசபையில் சபாநாயகர் செய்த சுவாரஸ்ய சம்பவங்களின் முழு தொகுப்பு!

அப்பாவு

சட்டசபைக் கூட்டத்தில் அதிகமாக ஸ்கோர் செய்தது ஆளுங்கட்சியா... எதிர்க்கட்சிகளா... கூட்டணிக் கட்சிகளா என யோசித்தால், அவர்களையெல்லாம் ஓவர்டேக் செய்யும் அளவுக்கு அதிகமாக சட்டசபையில் தக் லைஃப் (Thug Life) செய்தது சபாநாயகர் அப்பாவுதான்.

Published:Updated:

Thug life `அப்பாவு’ - சட்டசபையில் சபாநாயகர் செய்த சுவாரஸ்ய சம்பவங்களின் முழு தொகுப்பு!

சட்டசபைக் கூட்டத்தில் அதிகமாக ஸ்கோர் செய்தது ஆளுங்கட்சியா... எதிர்க்கட்சிகளா... கூட்டணிக் கட்சிகளா என யோசித்தால், அவர்களையெல்லாம் ஓவர்டேக் செய்யும் அளவுக்கு அதிகமாக சட்டசபையில் தக் லைஃப் (Thug Life) செய்தது சபாநாயகர் அப்பாவுதான்.

அப்பாவு

இந்த ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்திருக்கிறது. கடந்த மார்ச் 21-ம்  தேதி தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 21-ம் தேதியுடன் நிறைவடைந்திருக்கிறது. இந்தக் கூட்டத்தில் அதிகமாக ஸ்கோர் செய்தது ஆளுங்கட்சியா... எதிர்க்கட்சிகளா... கூட்டணிக் கட்சிகளா என யோசித்தால், அவர்களையெல்லாம் ஓவர்டேக் செய்யும் அளவுக்கு அதிகமாக சட்டசபையில் தக் லைஃப் (Thug Life) செய்தது சபாநாயகர் அப்பாவுதான். அப்படி முழு கூட்டத்தொடரில் அப்பாவுவின் கவுன்டர் மொமென்ட்கள் தொகுப்பைக் காணலாம்.

சபாநாயகர் அப்பாவு
சபாநாயகர் அப்பாவு

> `அது சேம் சைடு கோலாகுது’

வேளாண் மானியக் கோரிக்கை விவாதத்தில் பேசிய பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், ”சட்டமன்ற மேம்பாட்டு நிதியில் பாதி ஜி.எஸ்.டி-க்குச் சென்று விடுகிறது” என்றார். உடனே, சபாநாயகர், ``அதுக்கு நீங்கதான பதில் சொல்லணும்” என்றதும் அவையே சிரிப்பலையில் ஆழ்ந்தது.

அதற்கு நயினார் நகேந்திரனோ, “மத்திய அரசிடமிருந்து மாநில அரசுக்குப் பங்கு வருகிறதே… அதை நாம் வேண்டாம் என்று சொல்லவில்லையே?” என்றார். அதற்கு சபாநாயகர், ”அந்தப் பங்கு சரியா வரல அப்படிங்கறது தான் பிரச்னையே. அதவிட்டுவிட்டு வேறு சப்ஜெக்ட் வாங்க. ஏன்னா, அது சேம் சைடு கோலாகுது” என கலாய்த்தார்.

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

> `என்னது, அமைச்சர் நத்தம் விசுவநாதனா?!’

சட்டப்பேரவைக் கேள்வி நேரத்தில் அ.தி.மு.க உறுப்பினரான நத்தம் விசுவநாதனைப் பேச அழைத்த சபாநாயகர், “மாண்புமிகு அமைச்சர் நத்தம் விசுவநாதன்” என்று குறிப்பிட்டார். பிறகுதான் மாற்றிக் கூறியிருப்பதை உணர்ந்து ``சாரி உறுப்பினரை அமைச்சர் எனக் கூறிவிட்டேன்’’ என்றார்.

> ’தம்ஸ் அப்’ அப்பாவு

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் விவாதத்தின்போது, பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், கோவை விமான நிலையம் தொடர்பாக கேள்வியெழுப்பியிருந்தார். அதற்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்தார். இது தொடர்பாகப் பேசிய அவர், ``பல இடங்களில் மாநில அரசிடமிருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டு மத்திய அரசால் தனியாருக்கு வழங்கப்படுகிறது. அதுவும் குறிப்பிட்ட ஒரு நிறுவனமான அதானிக்கு..." எனக் கூற, அவைத்தலைவர் அப்பாவு சிரித்தபடி தம்ஸ் அப் செய்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர், ``மத்திய அரசுக்கு வெளிப்படையாக நிலத்தைக் கொடுக்காமல் குத்தகைக்குக் கொடுக்க ஒப்பந்தம் போட வேண்டும் எனக் கேட்கிறோம். அதை நிறைவேற்ற இங்குள்ள உறுப்பினர்களும், அவர்கள் கட்சியின் (மத்திய) அமைச்சரிடம் பேசினால் நன்றாக இருக்கும்” என்றார். அதை மறுத்துப் பேசத் தொடங்கிய வானதி சீனிவாசனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.

வேல்முருகன்
வேல்முருகன்

> பலாப்பழம் கொடுங்க...

வேளாண் பட்ஜெட் பதிலுரையின்போது வேல்முருகனைக் குறிப்பிட்டுப் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ”உறுப்பினர் வேல்முருகன் எப்படியாச்சும் தன் தொகுதிக்கான திட்டங்களைக் கேட்டு வாங்கிவிடலாம் எனப் பார்க்கிறார். அது நிச்சயம் நிறைவேறும். கேட்டதெல்லாம் கிடைக்கும்" என்றார். உடனே சபாநாயகர் அப்பாவு, “அப்படியா, எல்லா உறுப்பினர்களுக்கும் ஒரு பண்ருட்டி பலாப்பழத்தைக் கொடுத்துடுங்க” என்றார்.

> கடைசி பெஞ்ச் உறுப்பினர்கள்! 

சுகாதாரத்துறை மானியக் கோரிக்கை விவாதத்தில்  பேசத் தொடங்கிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், ``எங்கள் கடைசி பெஞ்ச்சை எப்போதும் கலகலப்பாக வைத்திருக்கும் செல்லூர் ராஜூ அவர்களுக்கும், முன்வரிசையில் அமர்ந்து  எங்களுக்குப் பாதுகாவலராக இருக்கும் நத்தம் விசுவநாதன் அவர்களுக்கும் வணக்கம்” எனத் தொடங்கினார். உடனே சபாநாயகர் அப்பாவுவோ, ``ஓ... பாதுகாவலராக நத்தம் விசுவநாதனை வைத்திருக்கிறீர்களா..?” என்று கூறியதைக் கண்டு விஜயபாஸ்கரே குலுங்கிச் சிரித்தார்.

வேலுமணி
வேலுமணி

> `சட்டசபை பாஸ் கேட்கறீங்களா?’

எதிர்க்கட்சி கொறடா வேலுமணி எழுந்து, “அ.தி.மு.க ஆட்சியில் ஐபிஎல் விளையாட்டுக்களைப் பார்க்க சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் பாஸ் வழங்கப்பட்டது. தற்போது 300-400 பாஸ்கள் கொடுக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். ஆனால் கிடைக்கவில்லை" என்றதும் அவைத் தலைவர் அப்பாவுவோ, ’’பாஸ் வேணும்னு கேக்குறீங்க... சட்டசபைக்கான பாஸா’’ எனக் கலாய்த்தார். அதற்கு வேலுமணியோ, “இல்லீங்க ஐபிஎல் மேட்சுக்கான பாஸ் கேட்குறேன். அதுவும் விளையாட்டுதானே! அதனால் மானியக் கோரிக்கையில் தெரியப்படுத்துறேன். எனவே, விளையாட்டுத்துறை அமைச்சர் அதற்கான வாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும்” என முடித்தார். 

> `100 சப்ஜெட் எனக்குத் தெரியும்!’

மின்சாரத் துறைக்கான மானியக் கோரிக்கை விவாதத்தின்போது பேசிய அ.தி.மு.க உறுப்பினர் நத்தம் விஸ்வநாதன், தி.மு.க ஆட்சியில் ஏற்பட்ட மின்தடை குறித்துப் பேசினார். அதற்கு அப்பாவு, ”உங்களுடைய ஆட்சியில இதெல்லாம் பண்ணினோம்னு குறித்துப் பேசுங்க. தி.மு.க மேல குற்றச்சாட்டை வைக்க வேண்டாம்” எனச் சொன்னார். அதற்கு நத்தம் விஸ்வநாதன், “உண்மையைத்தான சொல்றேன். வேற என்ன பேசணும்னு நீங்க நினைக்கிறீங்க, இல்ல நான் என்ன பேசணும்னு நீங்க சொல்லுங்க” என்றார்.

அதேபோல் கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து நத்தம் விஸ்வநாதன் பேசியதுக்கு எதிராக அப்பாவு, ``உங்க அம்மா (ஜெயலலிதா)தான் போராட்டங்காரர்களுக்கு எதிராக வழக்கு போட்டாங்க, அதை எல்லாத்தையும் ரத்துசெய்தது தி.மு.க அரசு. அது என்னோட ஊரு என் தொகுதி எனக்குத் தெரியும்” என்றார் காட்டமாக.

அப்பாவு
அப்பாவு

தொடர்ந்து நத்தம் விஸ்வநாதன் பேசும்போது , “வேறு சப்ஜெக்டுக்கு வாங்க” என அப்பாவு கூறினார். அதற்கு நத்தம் விஸ்வநாதனும், “நான் சப்ஜெக்டோடதான் பேசுறேன். உங்களுக்கு சப்ஜெக்ட் தெரியாதுன்னா என்ன பன்றது?” என்றார்.

 நத்தம் விஸ்வநாதன்
நத்தம் விஸ்வநாதன்

அதற்கு அப்பாவு, ’’100 சப்ஜெக்ட்... எந்தத் துறை எடுத்தாலும் அது குறித்து சப்ஜெக்ட்டிவா பேசுறதுக்கு நான் தயாரா இருக்கேன். கேள்வி கேளுங்க” என பதிலடி கொடுத்தார். அதற்கு நத்தம் விஸ்வநாதனும், “அப்போ மற்ற அமைச்சர்களுக்கு பதிலா நீங்களே எல்லாத்துக்கும் பதில் சொல்லலாமே...” என நக்கல் தொனியில் பேசினார்.

> `காங்கிரஸ்தான் பேசுறீங்களா...’

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு மானியக் கோரிக்கை விவாதத்தின்போது பேசிய காங்கிரஸ் உறுப்பினர் ரூபி மனோகரன், ``பனைமர வளர்ப்பை ஊக்குவித்து, கள் உற்பத்தி செய்வது தொடர்பாக தமிழக அரசு யோசிக்க வேண்டும்” என்றவர், கேரளாவில் அரசு சார்பாக கள் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டுவருவதைச் சுட்டிக்காட்டினார். உடனே, சபாநாயகர் அப்பாவு, “காங்கிரஸ்தான் பேசுறீங்களா... கேரளாவை வேற சொல்லுறீங்களே” என்றார் நக்கலாக. அதற்கு ரூபி மனோகரோ, “திருநெல்வேலி மாவட்டத்துல பனை மரம் எண்ணிக்கை அதிகம். அதனால சொன்னேன்” என்றார்.

அப்பாவு
அப்பாவு

அதற்கு அப்பாவு, “எங்க விக்கணும்னு கேட்கலை. மதுக் கொள்கையில உடன்படுறீங்களான்னு கேட்குறேன்” என்றார். அதற்கு பதிலளித்த ரூபி மனோகரன், “கொள்கையைத் தாண்டி டாஸ்மாக்கைவிட பனங்கள்ளு பெட்டரா இருக்கும்னு நினைக்கிறேன்” என்றார்.

> `போட்டோவுல ரொம்ப அழகா இருக்கீங்க!’

வனத்துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், முதுமலைக்குப் பிரதமர் வந்தது தொடங்கி தன் தொகுதி கோரிக்கைகள் அனைத்தும் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவைத்தலைவர் குறிக்கிட்டு, “நேருல பார்க்கறதவிட ஸ்கிரின்ல டாப்பா இருக்கீங்க” என கலகலத்தார். கேள்வி நேரத்தின்போதே, சட்டசபையில் இருந்த டி.வி-யில் தன் படத்தைப் பார்த்து குஷியாகியிருந்தார் திண்டுக்கல் சீனிவாசன். அவரிடம் சபாநாயகர் இவ்வாறு கூறியதும் வெட்கப்பட்டு சிரித்துக்கொண்டார்.

திண்டுக்கல் சீனிவாசன்
திண்டுக்கல் சீனிவாசன்

பரப்பலாறு அணை தூர்வாரப்பட வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். அப்போது எழுந்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “இன்னும்  இரண்டு மாதங்களில் அந்தப் பணிகள் தொடங்கிவிடும். நீங்க கேட்டு நாங்க செய்யாமா இருப்போமா?” என அவருக்கே உரித்தான பாணியில் பேசினார். இதைக் கேட்டு அவையில் சிரிப்பலை எழுந்தது.

அந்தக் கேப்பில், திண்டுக்கல் சீனிவாசன் தண்ணீர் குடித்தார். அதைப் பார்த்த அவைத்தலைவர், ``இன்னும் ஒரு நிமிசம்தான் பேசப் போறீங்க. எதுக்கு இப்போ தண்ணீர் குடிக்கிறீங்க. முடிச்சிட்டே குடிக்கலாமே..” என்றார். அதற்கு சீனிவாசனோ, “இன்னும் ஒரு நிமிசம்தானா, எனக்கு இன்னும் 30 நிமிசம் தேவைப்படுதே’ என்றவர், ``அவர் (துரைமுருகன்) கொஞ்ச நேரம் பேசுவாரு, அதுக்குள்ள ஒரு இன்டர்வெல் எடுத்துக்கலாம் என நினைத்தேன். ஆனால், அவரு சீக்கிரம் முடிச்சிட்டாரு” என்றார் நக்கலாக...

ஐபிஎல்
ஐபிஎல்

> சட்டசபையிலும் ஐபிஎல் ஃபீவர்!

மின்துறை மற்றும் மதுவிலக்கு மானியக் கோரிக்கை விவாதத்தின்போது உறுப்பினர்கள் தொடர்ந்து பேசி வந்தனர். தி.மு.க உறுப்பினர் புகழேந்தி பேசிக்கொண்டிருக்கும்போது இடையில் குறுக்கிட்டுப் பேசிய அப்பாவு, ”சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஐபிஎல் மேட்ச் பார்க்கணும்னு ஆர்வத்துல இருக்காங்க... சீக்கிரம் முடியுங்க...” எனக் கொளுத்தி போட்டார்.

> இன்னைக்குப் போக மாட்டாங்க...

மானியக் கோரிக்கை விவாதத்தில் விஜயபாஸ்கர் கேட்கும் கேள்விகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் வழங்கி வந்தார். அப்போது எழுந்த அவை முன்னவர் துரைமுருகன், "பொதுவாக, பதிலுரையில்தான் கேள்விகளுக்கான பதில் வழங்கப்படும். ஆனால், நீங்க இருக்கறதில்ல... அதனால இப்போவே சொல்றாரு” என்றார். அதற்கு அப்பாவு, ``இல்ல இன்னைக்குப் போக மாட்டாங்க. எதிர்க்கட்சித் தலைவர் உறுதி கொடுத்துட்டாரு” என்றது எதிர்க்கட்சியினரையும் சிரிக்க வைத்தது.

விஜயபாஸ்கர்
விஜயபாஸ்கர்

> என்னப்பா... எல்லாத்துக்கும் நிக்குறீங்களே?

ஆளுநருக்கு எதிராகக் கொண்டுவந்த தனித் தீர்மானம் எண்ணி கணக்கிடும் முறையில் வாக்கெடுப்பு எடுக்கப்பட்டது. முதலில் தீர்மானத்தை ஆதரிப்பவர்களை எழுந்து நிற்க சொன்னார் சபாநாயகர். அப்போது பா.ஜ.க எம்.எல்.ஏ காந்தி தவறுதலாக எழுந்து நின்று, பின்னர் சுதாகரித்து உட்கார்ந்துவிட்டார். பின்னர், `யாரு தீர்மானத்துக்கு எதிர்க்கிறீர்களோ அவர்கள் எழுந்து நிற்க வேண்டும்’ என்றார் அப்பாவு. அப்போது தீர்மானத்தை எதிர்த்த பா.ஜ.க உறுப்பினர்கள் எம்.ஆர்.காந்தி, சரஸ்வதி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து எழுந்து நின்றனர். உடனே அவைத்தலைவர் அப்பாவு, "என்னப்பா நீங்க எல்லாத்துக்கும் எழுந்து நிக்குறீங்களே...” எனக் கலாய்த்தது உறுப்பினர்கள், பா.ஜ.க-வினர் உட்பட அனைவரையும் சிரிக்கவைத்தது.

> இவங்ககிட்ட பேசி மூளை இவங்க பிரண்ட் ஆகிடுச்சே!!

ஆன்லைன் தடைச்சட்ட மசோதா தீர்மானத்தின்போது பேசிய நயினார் நாகேந்திரன், ”பேரவைத் தலைவர் அவர்களே நீங்கள் ஆளுநர் பற்றி பேச வேண்டாம் எனச் சொன்னீர்கள். ஆனால், அதை மீறி உறுப்பினர்கள் ’ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும்’ எனப் பேசியதைச் சுட்டிக்காட்டினார்.

அதற்கு விளக்கமளித்த அப்பாவு, “நீங்க பாயின்ட்டுக்கு  வாங்க. ஆளுநரின் தனிப்பட்ட விஷயங்களை யாரும் பேசல.  இப்போ நீங்க சொல்லுங்க, ’41’ பேர் ஆன்லைன்  சூதாட்டத்தால் மரணமடஞ்சிருக்காங்க. அது தப்புனா.. தப்புனு சொல்லுங்க, இல்லைனா, 41 பேர் இறந்தது  பிரச்னையில்ல... எத்தனை பேரு வேணும்னாலும் சாகட்டும்…பிரச்னையில்லனும் சொல்லலாம்” என்றார். (அவையில் சிரிப்பொலி எழுந்தது).

அப்போது குறுக்கிட்டுப் பேசிய துரைமுருகன், ``முதல்வர் பெருந்தன்மையுடன் சட்டசபையை மதிக்காத ஆளுநரை விமர்சிக்க வேண்டாம் என்கிறார். ஆனால்,  ’சட்டத்தை மீறிய ஆளுநரைப் பற்றி பேச, கிரிட்டிசைஸ் செய்ய ஆல் வி கேவ் ரைட்ஸ்’ எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. ஆனாலும், தொண்டை வரையிலும் வரும் வார்த்தைகளை அடக்கிவிட்டு பேசுறோம். அதுவரைக்கும் விட்டுடுங்க’’ என்றார்.

ஆர்.என். ரவி - அப்பாவு
ஆர்.என். ரவி - அப்பாவு

அதையடுத்து அவைத்தலைவர் அப்பாவு, ``அவரு (நயினார் நகேந்திரன்) மனசுலையும் ஆதரிக்கணும்'னுதான் இருக்கு. ஆனா அவங்களுக்கும் அழுத்தம் இருக்கும்ல..." என்றார் கிண்டலாக... இவர்கள் பேசியதில் சற்று குழம்பிய நயினார்  நகேந்திரன்... ஆன்லைன் சூதாட்டம் என்பதற்கு பதிலாக ஆளுநர் சூதாட்டம்  எனக் கூறியது அவையில் சிரிப்பலையை உண்டாக்கியது. உடனே அதை   திருத்திக்கொண்டு சட்ட மசோதவுக்கு  ஆதரவு சொல்லி  அமர்ந்தார்.

> நீங்களும் அதே யூனிஃபாம்ல வந்திருப்பதாகத் தெரிகிறது

ராகுல் காந்தியின் தகுதிநீக்க நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தமிழக சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் கறுப்பு உடையில் வந்திருந்தனர். சட்டசபைக்கு வருகை தந்த பா.ஜ.க உறுப்பினர் வானதி சீனிவாசனும் கறுப்பு உடையில் வந்திருந்தார். அப்போது அவர் அருகில் நடந்துவந்த விஜயதரணி, ‘நீங்களும் கறுப்பு உடையா?’ எனக் கேட்க ”அய்யோ நான் அதுக்காக கறுப்பு உடையில் வரலைங்க எனச் சொல்லி சிரித்தார். 

வெளியில் இப்படி பேசிய வானதி, சட்டசபைக்குள் பேசத் தொடங்கியபோது, அவைத்தலைவர் அப்பாவு, ” காங்கிரஸ்தான் யூனிஃபாம்ல வந்திருக்காங்க... நீங்களும் அதே யூனிஃபாம்ல வந்திருப்பதாகத் தெரிகிறது என்றார் நக்கலாக... அதற்கு வானதி சீனிவாசன் எமெர்ஜென்சி காலத்தில் தமிழகத்தைச் சேர்ந்த தலைவர்கள் எப்படி பாதிக்கப்பட்டாங்க என்பதை நினைவூட்ட கறுப்பு உடையில் வந்ததாகக் கூறினார்

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

> எடப்பாடியைக் கோத்துவிட்ட அப்பாவு...

மானியக் கோரிக்கை விவாதத்தின்போது அ.தி.மு.க சார்பாக தங்கமணி மின்சாரம், நிதி குறித்து பேசியபோது அதற்கு தி.மு.க அமைச்சர்கள் சார்பாக பதில்கள் கொடுக்கப்பட்டன. அப்போது சபாநாயகர் குறுக்கிட்டு தங்கமணியை ‘சீக்கிரம் முடிங்க என்றார். அவர் ‘எங்க நா பேசவே இல்ல... அதுக்குள்ள முடிங்கனு சொல்றீங்க என்றார். உடனே அப்பாவு  “நா சொல்லல எதிர்க்கட்சித் தலைவர் 3 மணியாகிடுச்சுனு முடிக்கச் சொன்னார்’’ என எடப்பாடியை கோத்துவிட்டார்.