Published:Updated:

``பணவீக்கம், வேலையின்மை; நிதியமைச்சர் புதிய தலைமை ஜோதிடரை நியமிக்கட்டும!" - ப.சிதம்பரம் சாடல்

ப.சிதம்பரம்

`நிதியமைச்சர் தன்னுடைய சொந்தத் திறமைகள் மற்றும் தன் பொருளாதார ஆலோசகர்களின் திறமைகள் மீதான நம்பிக்கையை விட்டுவிட்டு, பொருளாதாரத்தை மீட்டெடுக்க, கிரகங்களைத் துணைக்கு அழைக்கலாம்.' - ப.சிதம்பரம்

``பணவீக்கம், வேலையின்மை; நிதியமைச்சர் புதிய தலைமை ஜோதிடரை நியமிக்கட்டும!" - ப.சிதம்பரம் சாடல்

`நிதியமைச்சர் தன்னுடைய சொந்தத் திறமைகள் மற்றும் தன் பொருளாதார ஆலோசகர்களின் திறமைகள் மீதான நம்பிக்கையை விட்டுவிட்டு, பொருளாதாரத்தை மீட்டெடுக்க, கிரகங்களைத் துணைக்கு அழைக்கலாம்.' - ப.சிதம்பரம்

Published:Updated:
ப.சிதம்பரம்

சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா பிரபஞ்சம் தோன்றி 13.8 பில்லியன் ஆண்டுகள் ஆனதைக் கணக்கில்கொண்டு, அப்போது தோன்றிய நட்சத்திரங்கள் மற்றும் அங்கு மனிதர்கள் வாழத் தகுதிகொண்ட கிரகங்களைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டது. அதன்படி, கடந்த ஆண்டு விண்வெளியில் ரூ.79,000 கோடி செலவில் ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் (The James Webb Space Telescope) என்கிற சக்திவாய்ந்த தொலைநோக்கியை நிறுவியது. இந்த நிலையில், அந்தத் தொலைநோக்கியில் பதிவான 13 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய, பிரபஞ்சத்தின் பால்வெளித் திரள்களில் (Milky Way) சிதறிக்கிடந்த ஒளிகளை ஒன்றிணைத்து நாசா புதிய வண்ணப் புகைப்படங்களை வெளியிட்டது. இதை அறிவியல் உலகம் மகத்தான சாதனையாகக் கருதுகிறது.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

இந்த நிலையில், நாசா வெளியிட்ட புகைப்படங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 12-ம் தேதி ரீட்வீட் செய்திருந்தார். அதைத் தொடர்ந்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், ``பணவீக்கம் 7.01 சதவிகிதமாகவும், வேலையின்மை 7.8 சதவிகிதமாகவும் பதிவாகியிருக்கும் தினத்தில் நிதியமைச்சர் வியாழன், புளூட்டோ யுரேனஸின் படங்களை ட்வீட் செய்ததில் எங்களுக்கு ஆச்சர்யமில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நிதியமைச்சர் தன்னுடைய சொந்தத் திறமைகள் மற்றும் தன் பொருளாதார ஆலோசகர்களின் திறமைகள் மீதான நம்பிக்கையை விட்டுவிட்டு, பொருளாதாரத்தை மீட்டெடுக்கக் கிரகங்களை துணைக்கு அழைக்கலாம். அதற்கு முன்பு அவர் ஒரு புதிய தலைமை பொருளாதார ஜோதிடரை நியமிக்கட்டும்" எனப் பதிவிட்டுச் சாடியிருக்கிறார்.