Published:Updated:

“நான் யாரு... எனக்கேதும் தெரியலியே...” - குபீர் கிளப்பும் அ.தி.மு.க நிர்வாகிகள் நியமனம்!

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

நான் தி.மு‌.க-வில் சேர்ந்த பிறகும் அ.தி.மு.க-விலிருந்து என்னை நீக்காததற்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை

“நான் யாரு... எனக்கேதும் தெரியலியே...” - குபீர் கிளப்பும் அ.தி.மு.க நிர்வாகிகள் நியமனம்!

நான் தி.மு‌.க-வில் சேர்ந்த பிறகும் அ.தி.மு.க-விலிருந்து என்னை நீக்காததற்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை

Published:Updated:
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க-வின் இரட்டைத் தலைமைகள் ஒருவரையொருவர் கட்சியைவிட்டு நீக்கி கபடி ஆடிவரும் சூழலில், கட்சியில் புதிதாக நிர்வாகிகளை நியமிப்பதிலும் எக்கச்சக்கக் குளறுபடிகள். குறிப்பாக விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க-வில், ‘இ.பி.எஸ் ஆதரவாளர் யார், ஓ.பி.எஸ் ஆதரவாளர் யார், இருவரையுமே ஆதரிப்பவர்கள் யார், கட்சியிலிருந்து வெளியேறியவர்கள் யார்’ என்பதைக் கண்டுபிடிப்பவர் உண்மையிலேயே ‘லெஜண்ட்’தான்... அத்தனை குழப்பங்கள் கும்மியடிக்கின்றன!

இதுகுறித்து நம்மிடம் பேசிய லோக்கல் அதி.மு.க-வினர், ‘‘சிவகாசி மாநகராட்சித் தேர்த லில், அ.தி.மு.க-வுக்கு 11 கவுன்சிலர்கள் கிடைத் தார்கள். ஆனால், வெற்றிபெற்றவர்களில் ஒன்பது பேர் தி.மு.க-வில் சேர்ந்துவிட்டார்கள். அவர்களோடு சேர்ந்து அ.தி.மு.க-வின் விருதுநகர் மேற்கு மாவட்ட இளைஞரணிச் செயலாளர் வி.எஸ்.பலராமன், பொன்.சக்திவேல், தமிழரசி ஜெயமுருகன், காளிராஜன், சீனிவாசன் எனக் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் தி.மு.க-வுக்குச் சென்றார்கள். விருதுநகர் மேற்கு மாவட் டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி‌.ராஜேந்திர பாலாஜிக்கு இது மிகப்பெரிய அடியாக இருந்தது. ஆனாலும் கட்சி மாறிய ஒன்பது கவுன்சிலர்கள், மாவட்ட நிர்வாகிகள் யாரும் இன்னும் கட்சியிலிருந்து நீக்கப்படவில்லை. எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தங்கள் பதவிக்காக நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறி, இறங்கிக் கொண்டிருப்பதால், அவர்களுக்கும் விருதுநகர் அரசியல் குழப்பம் பற்றிச் சிந்திக்க நேரமில்லை.

“நான் யாரு... எனக்கேதும் தெரியலியே...” - குபீர் கிளப்பும் அ.தி.மு.க நிர்வாகிகள் நியமனம்!

இதற்கிடையே, இ.பி.எஸ்-ஸையும் அவரது ஆதரவாளர்களையும் கட்சியைவிட்டு நீக்கிய ஓ.பி.எஸ்., விருதுநகர் மாவட்டத்தை மூன்றாகப் பிரித்து கிழக்கு மாவட்டத்துக்கு பாலகங்காதரன், மேற்கு மாவட்டத்துக்கு எஸ்.எஸ்.கதிரவன், மத்திய மாவட்டத்துக்கு தெய்வம் ஆகியோரைச் செயலாளர்களாக நியமித்தார். இவர்களில், கதிரவனும் தெய்வமும் ஏற்கெனவே இ.பி.எஸ் தலைமையிலான அணியில் மாவட்ட மாணவ ரணிச் செயலாளர், மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் பொறுப்புகளில் இருக்கிறார்கள். இப்படி ஒரே நபருக்கு இரு தரப்பினரும் பொறுப்பு கொடுத்திருக்கும் அவலமும் இந்த மாவட்டத்தில்தான் அரங்கேறியிருக்கிறது” என்றனர் வேதனையோடு.

அ.தி.மு.க-வில் மாவட்ட இளைஞரணிச் செய லாளராக இருந்து தி.மு.க-வுக்குச் சென்றுவிட்ட வி.எஸ்.பலராமனிடம் இது குறித்துப் பேசியபோது, “நான் தி.மு‌.க-வில் சேர்ந்த பிறகும் அ.தி.மு.க-விலிருந்து என்னை நீக்காததற்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை. நானாகப் போய் என்னைக் கட்சியைவிட்டு நீக்குங்கள் என்று சொல்ல முடியாது. ஒரு கட்சியிலிருந்து இன்னொரு கட்சிக்குப் போனவர்கள் யாரும் ராஜினாமா கடிதம் கொடுப்பதில்லை. அப்படி கொடுத்துவிட்டு வருவதற்கு இது ஒன்றும் கவர்மென்ட் உத்தியோகம் இல்லையே... முதலமைச்சர் முன்னிலையில் தி.மு.க-வில் சேர்ந்த நாங்கள் தி.மு.க-வுக்கு விசுவாசமாகச் செயல்படுகிறோம். அதனால் எங்க ளுக்கு எந்தக் குழப்பமும் இல்லை” என்று முடித்துக் கொண்டார்.

வி.எஸ்.பலராமன்
வி.எஸ்.பலராமன்

இதையடுத்து, கட்சிக் குள்ளேயே இரட்டைப் பதவி வகித்துவரும் நிர்வாகி கள் சிலரிடம் பேசினோம். பெயர் வேண்டாம் என்ற நிபந்தனையுடன் பேசிய அவர்கள், ‘‘இ.பி.எஸ் ஆதர வாளர்களான எங்களுக்கு ஓ.பி.எஸ் தரப்பிலிருந்து மாவட்டச் செயலாளர் பதவி கொடுக்கப்பட் டிருப்பது குறித்து, கட்சியின் மாவட்டத் தலைமையே எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் அமைதி காத்துவருகிறது. இந்த நிலையில், நாங்களாகவே முன்வந்து, ‘எங்களுக்கு மாவட்டச் செயலாளர் பதவி தேவையில்லை’ என்று எப்படிச் சொல்ல முடியும்?’’ என்றனர்.

கோவை செல்வராஜ்
கோவை செல்வராஜ்

விருதுநகர் மேற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜியிடம் இந்த விவகாரம் குறித்துக் கேட்டபோது, “ஓ.பி.எஸ் தரப்புல மாவட்டச் செயலாளர் நியமிச்சா நியமிச்சிட்டு போகட்டும். அவங்க பாட்டுக்கு செஞ்சுட்டுப் போறாங்க... அதுல என்ன இருக்கு...’’ என்றவரிடம் ‘‘கட்சியைவிட்டு விலகி தி.மு.க-வுக்குப் போனவர்களையும்கூட முறையாக நீக்கம் செய்யாதது ஏன்?’’ என்று கேட்டதற்கு, ‘‘இதெல்லாம் உட்கட்சிக்குள்ள நடக்குறதுங்க... வெளிப் படையா பேச முடியாது. பெருசுபடுத்தாதீங்க’’ என்று சொல்லிவிட்டார்.

கே.டி.ராஜேந்திர பாலாஜி
கே.டி.ராஜேந்திர பாலாஜி

ஓ.பி.எஸ் தரப்பு கருத்தை அறிவதற்காக செய்தித் தொடர்பாளர் கோவை செல்வராஜிடம் பேசினோம். “அ.தி.மு.க-வில் இ.பி.எஸ் தரப்பு என்று தனிப்பட்ட அணியே கிடையாது. ஒருங் கிணைப்பாளர் ஓ.பி.எஸ் என்ற ஒற்றைக் குடை யின் கீழ்தான் தொண்டர்கள் அனைவரும் இருக் கிறார்கள். கட்சிக்கு விரோதமாகச் செயல் பட்ட எடப்பாடி பழனிசாமி, இங்குள்ள மாவட்டச் செயலாளர்கள் உட்பட பலரை ஒருங்கிணைப் பாளர் ஓ.பி.எஸ்., கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறார். எனவேதான் விருதுநகர் மாவட்டத்துக்குப் புதிதாக அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இ.பி.எஸ் தலைமையின் கீழும் பொறுப்பிலிருக்கிறார்கள் என்பதே தவறானது. இ.பி.எஸ் கட்சியிலேயே இல்லையே?!” என்றார் சீரியஸாக.

ஸ்...ஸ்ஸப்பா இப்பவே கண்ணக்கட்டுதே!