Published:Updated:

பில்கிஸ் பானோ வழக்கு: ``அற்ப மனநிலை... இத்தகைய அரசியலில் வெட்கமில்லையா பிரதமரே!" - ராகுல் சாடல்

மோடி - ராகுல்

``இதுபோன்று குற்றவாளிகளுக்கு பா.ஜ.க ஆதரவளிப்பது, பெண்கள்மீதான அவர்களின் அற்ப மனநிலையையே காட்டுகிறது." - ராகுல் காந்தி

பில்கிஸ் பானோ வழக்கு: ``அற்ப மனநிலை... இத்தகைய அரசியலில் வெட்கமில்லையா பிரதமரே!" - ராகுல் சாடல்

``இதுபோன்று குற்றவாளிகளுக்கு பா.ஜ.க ஆதரவளிப்பது, பெண்கள்மீதான அவர்களின் அற்ப மனநிலையையே காட்டுகிறது." - ராகுல் காந்தி

Published:Updated:
மோடி - ராகுல்

2002-ல் குஜராத் மாநிலம் கோத்ராவில், பில்கிஸ் பானோ என்ற 5 மாத கர்ப்பிணியை 11 பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைசெய்து, அவரின் குடும்பத்தினர் 7 பேரைக் கொலைசெய்த சம்பவம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது. இந்த நிலையில், கடந்த திங்களன்று, இந்த வழக்கில் 15 ஆண்டுகளாகத் தண்டனை அனுபவித்து வந்த குற்றவாளிகள் 11 பேரையும், குஜராத் அரசு விடுவித்தது. குற்றவாளிகளின் இந்த விடுதலைக்கு எதிர்க்கட்சிகளிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.

பில்கிஸ் பானோ - Bilkis Bano
பில்கிஸ் பானோ - Bilkis Bano

இந்த விவாகரத்தில் பிரதமர் மோடியை ஏற்கெனவே, ``உங்களின் சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்தமேயில்லை என்பதை இந்த நாடே கவனிக்கிறது'' என்று ராகுல் காந்தி விமர்சித்திருந்தார். இந்த நிலையில் உன்னாவ், ஹத்ராஸ், கதுவா, போன்ற பகுதிகளில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் மற்றும் குற்றவாளிகளின் விடுதலையைக் குறிப்பிட்டு, பிரதமர் மோடியை ராகுல் காந்தி மீண்டும் விமர்சித்திருக்கிறார்.

ராகுல் காந்தி - மோடி
ராகுல் காந்தி - மோடி

ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ``உன்னாவ் - பா.ஜ.க எம்.எல்.ஏ-வைக் காப்பாற்ற வேலை, கதுவா - பாலியல் வன்கொடுமையாளர்களுக்கு ஆதரவாகப் பேரணி, ஹத்ராஸ் - பாலியல் வன்கொடுமையாளர்களுக்கு ஆதரவான அரசாங்கம், குஜராத் - பாலியல் வன்கொடுமையாளர்களின் விடுதலையும் கௌரவமும். இதுபோன்று குற்றவாளிகளுக்கு பா.ஜ.க ஆதரவளிப்பது, பெண்களின்மீதான அவர்களின் அற்ப மனநிலையையே காட்டுகிறது. இத்தகைய அரசியலில் வெட்கமில்லையா பிரதமரே?" என இந்தியில் ட்வீட் செய்து விமர்சித்திருந்தார்.