Published:Updated:

``நீங்கள் என்ன ராமர் கோயில் பூசாரியா?"- அயோத்தி விவகாரத்தில் அமித் ஷாவைச் சாடிய மல்லிகார்ஜுன கார்கே

மல்லிகார்ஜுன கார்கே

``நாட்டைப் பாதுகாப்பாக வைத்திருப்பதும், சட்டம் - ஒழுங்கைப் பராமரிப்பதும், விவசாயிகளுக்குப் போதிய விலையை வழங்குவதும்தான் உங்களின் வேலை." - மல்லிகார்ஜுன கார்கே

``நீங்கள் என்ன ராமர் கோயில் பூசாரியா?"- அயோத்தி விவகாரத்தில் அமித் ஷாவைச் சாடிய மல்லிகார்ஜுன கார்கே

``நாட்டைப் பாதுகாப்பாக வைத்திருப்பதும், சட்டம் - ஒழுங்கைப் பராமரிப்பதும், விவசாயிகளுக்குப் போதிய விலையை வழங்குவதும்தான் உங்களின் வேலை." - மல்லிகார்ஜுன கார்கே

Published:Updated:
மல்லிகார்ஜுன கார்கே

2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போதும், கடந்த ஆண்டு நடைபெற்ற உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலின்போதும் பா.ஜ.க-வின் வெற்றியில் முக்கிய அங்கம் `அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும்' என்ற அறிவிப்புதான். இப்படியிருக்க 2024-ல் நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக மொத்தம் ஒன்பது மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில், பா.ஜ.க மீண்டும் `அயோத்தியில் ராமர் கோயில்' என்ற யுத்தியை தற்போது கையிலெடுத்திருக்கிறது.

மோடி - அமித் ஷா - அயோத்தி ராமர் கோயில்
மோடி - அமித் ஷா - அயோத்தி ராமர் கோயில்

அந்த வரிசையில் இந்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ``2024, ஜனவரி 1-ல் அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா" என அறிவித்திருக்கிறார். இதற்கு எதிர்வினையாற்றிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, `இதைச்சொல்ல நீங்கள் யார்...’ என அமித் ஷா மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று ஹரியானாவில் நடைபெற்ற பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்துகொண்டு பேசிய கார்கே, ``வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக அளித்த வாக்குறுதியை பா.ஜ.க அரசு நிறைவேற்றவில்லை. ஆனால், அவர்கள் இப்போது என்ன செய்கிறார்கள்... திரிபுராவில் தேர்தல் நடக்கவிருக்கிறது. அமித் ஷா அங்கு சென்று, ராமர் கோயில் கட்டப்பட்டு வருவதாகவும், அதன் திறப்பு விழா அடுத்தாண்டு ஜனவரி 1-ம் தேதி என்றும் கூறினார். எல்லோருக்கும் கடவுள் நம்பிக்கை இருக்கிறது. இருப்பினும் இதை ஏன் தேர்தல் நேரத்தில் அறிவிக்க வேண்டும்.

மல்லிகார்ஜுன கார்கே - அமித் ஷா
மல்லிகார்ஜுன கார்கே - அமித் ஷா

அதைச் சொல்ல நீங்கள் யார்... நீங்கள் என்ன ராமர் கோயிலின் பூசாரியா... மகான்கள், சாதுக்கள் இதைப்பற்றிப் பேசட்டும். நீங்கள் ஓர் அரசியல்வாதி. நாட்டைப் பாதுகாப்பாக வைத்திருப்பதும், சட்டம் - ஒழுங்கைப் பராமரிப்பதும், மக்களுக்கான உணவை உறுதிசெய்வதும், விவசாயிகளுக்குப் போதிய விலையை வழங்குவதும்தான் உங்களின் வேலை" எனக் காட்டமாக விமர்சித்தார்.