Published:Updated:

`சி.எம் வர நேரம்... வண்டிய எடுங்க!', `மறியல் செய்வேன்!' - காவலர்கள்-பாஜக பிரமுகர் வாக்குவாதம்

காவலர்கள்-பாஜக பிரமுகர் வாக்குவாதம்

திருப்பூர் மாவட்ட பா.ஜ.க தலைவர் செந்தில்வேல் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

`சி.எம் வர நேரம்... வண்டிய எடுங்க!', `மறியல் செய்வேன்!' - காவலர்கள்-பாஜக பிரமுகர் வாக்குவாதம்

திருப்பூர் மாவட்ட பா.ஜ.க தலைவர் செந்தில்வேல் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Published:Updated:
காவலர்கள்-பாஜக பிரமுகர் வாக்குவாதம்

"நான் பிஜேபி-காரன்... தகராறு பண்ணுவேன், தி.மு.க அடாவடி பண்றீங்கன்னு தகராறு பண்ணுவேன்" என திருப்பூர் மாவட்ட பா.ஜ.க தலைவர் செந்தில்வேல் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மூன்று நாள்கள் பயணமாக கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு வருகை தந்திருக்கிறார். நேற்று முதல்வர் ஸ்டாலின் பொள்ளாச்சியில் கூட்டத்தை முடித்துவிட்டு திருப்பூர் சென்று கொண்டிருந்தார். பல்லடம் சாலை வழியாக திருப்பூர் சென்றதால் காவலர்கள் போக்குவரத்தை சீர்படுத்தி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

அப்போது அந்த வழியாக வந்த பா.ஜ.க மாவட்டத் தலைவர் செந்தில்வேல், சாலையோரம் தனது காரை நிறுத்திவிட்டு கடைக்குச் செல்ல முற்பட்டார். அவரைத் தடுத்து நிறுத்திய போலீஸார், போக்குவரத்துக்கு இடையூராக இருக்கும் என்பதால், வாகனத்தை எடுக்குமாறு கூறியிருக்கின்றனர். ஆனால், செந்தில்வேல் காரை அங்கிருந்து அப்புறப்படுத்தாமல் போலீஸாருடன் நீண்ட நேரம் வாக்குவாதம் செய்திருக்கிறார்.

செந்தில்வேல்
செந்தில்வேல்

அப்போது அவர், ``முதல்வர் வந்தால் யாரும் எங்கேயும் போகக் கூடாதா? நான் அரசியல் தலைவர். எனக்கு கேள்வி கேட்க உரிமை இருக்கு. வண்டி எடுக்கலனா என்ன பண்ணுவீங்க? கைது பண்ணுவீங்களா.... நான் பி.ஜே.பி-காரன் தகராறு பண்ணுவேன். தி.மு.க அடாவடி பண்றீங்கன்னு தகராறு பண்ணுவேன். நான் நினைச்சா இப்பவே பி.ஜே.பி-ல இருந்து ஆயிரம் பேரை அழைத்துவந்து சாலை மறியல் பண்ணுவேன்" எனப் பணியிலிருந்த காவலர்களிடம் காட்டமாகப் பேசுகிறார் .

அதற்கு காவலர்கள், ``இந்த இடத்தில் காரை நிறுத்தாதீர்கள் என்றுதான் சொல்கிறோம். முதல்வர் வந்துகொண்டிருப்பதால் தான் சொல்கிறோம்" என தங்களிடம் வாக்குவாதம் செய்த செந்தில்வேலிடம் கூறுகின்றனர்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.