Published:Updated:

``அமைச்சரே மிரட்டுகிறார்..!" - மதுரை ஆதீனத்துக்குப் பாதுகாப்பு கேட்டு அர்ஜுன் சம்பத் மனு

அர்ஜூன் சம்பத்

`மதுரை ஆதீனம் தற்போது அரசியல்வாதிகளாலும், நடிகர் விஜய்யின் ரசிகர்களாலும், இன்ன பிற சக்திகளாலும் தொடர்ந்து மிரட்டப்பட்டு வருகிறார்.' - அர்ஜுன் சம்பத்

``அமைச்சரே மிரட்டுகிறார்..!" - மதுரை ஆதீனத்துக்குப் பாதுகாப்பு கேட்டு அர்ஜுன் சம்பத் மனு

`மதுரை ஆதீனம் தற்போது அரசியல்வாதிகளாலும், நடிகர் விஜய்யின் ரசிகர்களாலும், இன்ன பிற சக்திகளாலும் தொடர்ந்து மிரட்டப்பட்டு வருகிறார்.' - அர்ஜுன் சம்பத்

Published:Updated:
அர்ஜூன் சம்பத்

தி.மு.க அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்துவரும் மதுரை ஆதீனம், அண்மையில் நடிகர் விஜய் படங்களைப் பார்க்கக் கூடாது என்று பேசியிருந்தார். அதனால் அவரை விமர்சித்து விஜய் ரசிகர்கள் மதுரையில் பல இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனர்.

இந்நிலையில் மதுரை ஆதீனத்துக்குப் பாதுகாப்பு தர வேண்டி மதுரை மாநகர காவல்துறை ஆணையாளரிடம் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன்சம்பத் இன்று மனு அளித்தார்.

மதுரை ஆதீனத்துக்கு எதிராக சுவரொட்டி
மதுரை ஆதீனத்துக்கு எதிராக சுவரொட்டி

பின்பு செய்தியாளர்களிடம் பேசியவர், ``மதுரை ஆதீனம் தற்போது அரசியல்வாதிகளாலும், நடிகர் விஜய்யின் ரசிகர்களாலும், இன்ன பிற சக்திகளாலும் தொடர்ந்து மிரட்டப்பட்டு வருகிறார்.

அரசியல்வாதிகளைப்போல் நடந்து கொள்கிறார் என்று அறநிலையத்துறை அமைச்சர், மதுரை ஆதீனத்தை அச்சுறுத்தி வருகிறார். இது அபாயகரமான போக்கு. மதுரை ஆதீனத்துக்கும் அரசியலுக்கும் தொடர்பு கிடையாது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சிதம்பர நடராஜ பெருமானை இழிவுபடுத்தி கருத்துகளை வெளியிட்டவர்கள் இன்னும் கைதுசெய்யப்படவில்லை. திரைப்படங்களில் இந்துக் கடவுள்களை இழிவுபடுத்துகிறார்கள். இந்து சமயத்துக்குப் பிரச்னை என்றால் மதுரை ஆதீனம் குரல் கொடுப்பார். அதற்காக அவர் அ.தி.மு.க, பா.ஜ.க ஆதரவாளர் கிடையாது.

புகார் மனு
புகார் மனு

இந்து சமய நம்பிக்கைகள் சீர்குலைக்கப்படுவதும், கோயில்கள் அறநிலையத்துறை பிடியில் இருப்பதும் 50 வருடங்களாக தொடர்ந்து வருகிறது. இதை எதிர்த்துதான் கருத்து தெரிவித்திருக்கிறார். அ.தி.மு.க ஆட்சிக்காலத்திலும் மதுரை ஆதீனத்தால் இந்தக் கருத்து கூறப்பட்டது.

மதுரை ஆதீனத்தின் கருத்து அரசியல்வாதிகளுக்கோ, நடிகர் விஜய்க்கோ எதிரானது கிடையாது. இதை விஜய் ரசிகர்கள், அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் புரிந்து கொள்ளவேண்டும். விஜய் ரசிகர்கள் ஆதீனத்தின்மீது தனிப்பட்ட கருத்துகளை வெளியிடுகின்றனர். தாய் தகப்பனை விட நடிகர் விஜய் பெரிய நபர் கிடையாது. தன் ரசிகர்களுக்கு விஜய் அறிவுரை சொல்ல வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மதுரை ஆதீனம் எப்போதும்போல திருஞானசம்பந்தர் வழியில் தன் பணிகளை செய்துவருகிறார். இந்து அமைப்புகள் அவருக்கு ஆதரவாக இருக்கின்றன. அவர் அனைத்து ஆன்மிக அமைப்புகளையும் ஒருங்கிணைத்து செயல்படுகிறார்.

அறநிலையத்துறை அமைச்சரே மிரட்டுவதால் மத்திய அரசு மதுரை ஆதீனத்துக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும். மதுரையில் சு.வெங்கடேசன் தொடங்கி வைத்த செஞ்சட்டை பேரணியில் அருவருக்கத்தக்க வகையில் கருத்துகள் வெளியானது கண்டனத்துக்குரியது. மிகப்பெரிய வருத்தத்தில் இருக்கிறோம். சம்பந்தப்பட்டவர்கள்மீது புகார் கொடுத்திருக்கிறோம். ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை.

அர்ஜுன் சம்பத்
அர்ஜுன் சம்பத்

மதுரை ஆதீனம் ஆர்.எஸ்.எஸ்-க்கு சாதகமாக இருக்கிறார் என்ற குற்றச்சாட்டு முழுவதும் பொய்யானது. சர்ச் சொத்து கிறிஸ்துவர்களிடமுடம், முஸ்லிம் சொத்து முஸ்லிம்களிடமும் இருக்கிறபோது, ஏன் ஆலய சொத்துகள் மட்டும் அரசாங்கத்திடம் இருக்க வேண்டும் என்ற உரிமைக் குரலை ஆதீனம் எழுப்பியிருக்கிறார்.

மதுரை ஆதீனத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸாரை பாதுகாப்பு பணியில் நிறுத்த வேண்டும். மாநில அரசு கொடுக்கவில்லை என்றால் மத்திய அரசை வலியுறுத்துவோம். மதுரை ஆதீனத்தை பற்றிப் பேசிய அமைச்சர் சேகர் பாபுவுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்ததற்கு நன்றியை தெரிவிக்கிறோம்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism