Published:Updated:

``300, 400 தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவத் தயாராக இருக்கின்றனர்!” - ராணுவத் தளபதி நரவானே தகவல்

மனோஜ் முகுந்த் நரவானே
News
மனோஜ் முகுந்த் நரவானே

எல்லைப் பகுதியில் 300 முதல் 400 பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவத் தயாராக இருப்பதாக தேசிய ராணுவ தின விழா சிறப்புரையில் ராணுவத் தலைமைத் தளபதி மனோஜ் முகுந்த் நரவானே கூறியுள்ளார்.

டெல்லியின் கரியப்பா ராணுவ அணிவகுப்பு மைதானத்தில் 74-வது தேசிய ராணுவ தினவிழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இந்திய ராணுவத் தளபதி மனோஜ் முகுந்த் நரவானே தனது உரையில், இந்திய ராணுவ எல்லை பாதுகாப்புப் பற்றியும், உலக நாடுகளுக்கு மத்தியில் ஐ.நா-வின் உலக அமைதிக்கான பணியில் இந்தியாவின் பங்கு குறித்தும் பேசியுள்ளார்.

மனோஜ் முகுந்த் நரவானே
மனோஜ் முகுந்த் நரவானே

அதில் முக்கியமாக, `கடந்த ஆண்டில் சீன எல்லைப் பதற்றம் இந்திய ராணுவத்துக்கு பெரும் சவாலாகவே இருந்தது. ஆயினும், இந்த ஆண்டு ராணுவப் பாதுகாப்பு நிலைமையில் கடந்த ஆண்டைவிட நிலைமை சிறப்பாகவே உள்ளது. ஆனால் எல்லைப் பகுதியில் 300 முதல் 400 பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவத் தயாராக இருக்கின்றனர்' என்று கூறினார். மேலும் பாதுகாப்புப் பணியின்போது 144 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் கூறினார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தொடர்ந்து `உலக நாடுகளின் அமைதி’ குறித்து பேசிய அவர், `இந்தியா எப்போதும் ஐ.நா-வின் உலக அமைதிப் பணியில் தன்னுடைய பங்களிப்பை அளித்துக்கொண்டேயிருக்கும். இன்று கூட 5,000-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் அமைதியை நிலைநாட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்’ எனவும் கூறினார்.

இந்திய விமானப்படை
இந்திய விமானப்படை
indian express

இறுதியாக, தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண் கேடட்களின் வருகை குறித்துப் பேசுகையில், ``2023-ல் முதன்முறையாக பெண் கேடட்களை வரவேற்க அகாடமி தயாராக இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன” எனவும் கூறினார். மேலும் இந்திய விமானப்படையிலும் பெண் விமானிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டு, அதற்கான பயிற்சியும் நடைபெற்றுவருவதாகக் கூறினார்.