Published:Updated:

``உக்ரைன்-ரஷ்யா போரிலிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்கள்..!” - ராணுவ ஜெனரல் எம்.எம்.நரவானே

ராணுவ ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே ( ட்விட்டர் )

`ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் ஏற்பட்டுள்ளதால், இந்தியா மறைமுகமாக பாதிக்கப்பட்டுள்ளது’ என ராணுவ ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே தெரிவித்திருக்கிறார்.

இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளில், சிறப்பான முறையில் சாதனை புரிந்தவர்களுக்கு மேக்ரிகோர் நினைவுப் பதக்கத்தை, ராணுவ ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே வழங்கினார்.

ராணுவ ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே
ராணுவ ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே
ட்விட்டர்

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராணுவ ஜெனரல் எம்.எம்.நரவானே, ``தற்போது நடைபெற்றுவரும் உக்ரைன்-ரஷ்யா போரிலிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய பல பாடங்கள் இருக்கின்றன. இரு நாடுகளுக்கும் இடையே போர் ஏற்பட்டுள்ளதால், இந்தியா மறைமுகமாக பாதிக்கப்பட்டுள்ளது. எப்போது, எங்கு வேண்டுமென்றாலும் போர் ஏற்படலாம். எதிர்காலங்களில் போர் ஏற்பட்டால், உள்நாட்டு ஆயுதங்களைக் கொண்டு போராட நாம் அனைவரும் தயாராக இருக்க வேண்டும். இது நம் அனைவருக்கும் மிகப்பெரிய பாடமாக இருக்கிறது'' என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism