Published:Updated:

பாகிஸ்தானிலிருந்து பறந்து வந்த 'ட்ரோன்' - துப்பாக்கிச் சூடு நடத்திய விரட்டியடித்த இந்திய ராணுவம்!

ட்ரோன்

இந்திய ராணுவத்தினர் இந்திய வான் எல்லைக்குள் எந்தவித ட்ரோன்களும் நுழையாத வண்ணம் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

பாகிஸ்தானிலிருந்து பறந்து வந்த 'ட்ரோன்' - துப்பாக்கிச் சூடு நடத்திய விரட்டியடித்த இந்திய ராணுவம்!

இந்திய ராணுவத்தினர் இந்திய வான் எல்லைக்குள் எந்தவித ட்ரோன்களும் நுழையாத வண்ணம் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Published:Updated:
ட்ரோன்

உலகின் மிகவும் பதற்றமான எல்லைகளில் ஒன்றாக இந்தியா-பாகிஸ்தான் எல்லை அமைந்திருக்கிறது. இந்திய-பாகிஸ்தான் எல்லையில் பயங்கரவாதிகள் ஊடுருவலைத் தடுக்கும் வகையில் கண்காணிப்பு பணிகளை இந்திய ராணுவம் தீவிரப்படுத்தி உள்ளது. இந்த நிலையில், அண்மைக்காலமாக பாகிஸ்தானிலிருந்து ட்ரோன்கள் மூலம் எல்லைகளில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகளுக்கு வெடிப்பொருள்கள் சப்ளை செய்யப்படுவது அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதன் காரணமாக இந்திய ராணுவத்தினர் இந்திய வான் எல்லைக்குள் எந்தவித ட்ரோன்களும் நுழையாத வண்ணம் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்தியா பாகிஸ்தான் எல்லை
இந்தியா பாகிஸ்தான் எல்லை

அந்த வகையில், பாகிஸ்தானிலிருந்து காஷ்மீர் பகுதிக்கு ‘ட்ரோன்’ பறந்து வந்த சம்பவம் தற்போது பேசுபொருளாக மாறியிருக்கிறது. இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய ராமானுவ உயர் அதிகாரிகள், ``காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பலோனியையொட்டி கிருஷ்ணா காதி என்ற பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு நேரத்தில் ஒரு 'ட்ரோன்' பறந்துவந்தது. அதைக் கண்டுபிடித்த ராணுவத்தினர் அதை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அதையடுத்து அந்த 'ட்ரோன்' பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் திரும்பிச் சென்றுவிட்டது. இந்தச் சம்பவத்தையடுத்து, குறிப்பிட்ட பகுதியில் ராணுவத்தினரும், போலீஸாரும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்’’ என்றார்.

அந்த ட்ரோன் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!