Published:Updated:

`எங்க துக்கம் ஏன் யாருக்கும் புரியல?’ - அற்புதம்மாள் உருக்கம்!

கலிலுல்லா.ச

பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான கருத்தை பதிவிட்டுள்ளார்.

அற்புதம்மாள்
அற்புதம்மாள் ( Vikatan )
``வயித்தில குழந்தை இருக்குன்னு தெரிஞ்ச உடனே தாய்க்கு வர்ற பதட்டம் 10 மாசம் கழிச்சு பரவசமா மாறுது"
அற்புதம்மாள்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க வேண்டும் என்று தமிழகம் முழுவதிலுமிருந்து குரல்கள் எழுந்தன. இதையொட்டி பெரும் போராட்டங்கள் வெடித்தன. பலமுறை கோரிக்கை மனுவும் முதல்வரிடம் கொடுக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் கூட, ஆளுநர் ஒப்புதல் பெற்று 7 பேரை விடுவிக்கலாம் என்று கருத்து தெரிவித்தது.

பேரறிவாளன்
பேரறிவாளன்

உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, தமிழக அரசும், தமிழக சட்டப்பேரவையில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறைத் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரை விடுவிக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றியது.

இந்தத் தீர்மானம் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், ஒப்புதல் வழங்கப்படாமல் தீர்மானம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. `ஆளுநரின் கையொப்பத்தின் மூலம் தன் மகன் சிறையிலிருந்து வெளியே வருவான் ’ என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் அற்புதம்மாள்.

அற்புதம்மாள்
அற்புதம்மாள்

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர், ``வயித்தில குழந்தை இருக்குன்னு தெரிஞ்ச உடனே தாய்க்கு வர்ற பதட்டம் 10 மாசம் கழிச்சு பரவசமா மாறுது. விடுதலை கோப்பு ஆளுநருக்கு போய் இன்னையோட 10 மாசம் முடியுது. என் பதட்டம் தணியல. எங்க துக்கம் ஏன் யாருக்கும் புரியல? #29YearsTooMuchGovernor” எனப்பதிவிட்டுள்ளார்.