Published:Updated:

``அனுமன் பாடல் பாடுபவர்களை கைது செய்வது பால் தாக்கரே ஆத்மாவை காயப்படுத்தும்” - மத்திய இணை அமைச்சர்

அஸ்வினி குமார்

அனுமன் பாடல்களை பாடுபவர்களை கைது செய்வது பால் தாக்கரே ஆத்மாவை காயப்படுத்தும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் தெரிவித்துள்ளார்.

``அனுமன் பாடல் பாடுபவர்களை கைது செய்வது பால் தாக்கரே ஆத்மாவை காயப்படுத்தும்” - மத்திய இணை அமைச்சர்

அனுமன் பாடல்களை பாடுபவர்களை கைது செய்வது பால் தாக்கரே ஆத்மாவை காயப்படுத்தும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் தெரிவித்துள்ளார்.

Published:Updated:
அஸ்வினி குமார்

மகாராஷ்டிராவில் தற்போது மசூதிகளில் இருக்கும் ஒலி பெருக்கி மற்றும் அனுமன் சாலிசா எனப்படும் பாராயணம் பாடுதல் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அனுமன் பாடல்களை மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே இல்லம் முன்பு பாடப்போகிறேன் என்று கிளம்பிய சுயேச்சை எம்.பி.நவ்நீத் ராணா, அவரின் கணவர் ரவி ராணா ஆகியோர் மும்பையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வரும் 3-ம் தேதி மகாராஷ்டிரா முழுவதும் இருக்கும் கோயில்களில் மகா ஆர்த்தியுடன் அனுமன் பாடல்கள் பாடப்படும் என்று மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார். அதோடு பதட்டம் மிகுந்த அவுரங்காபாத்தில் நாளை ராஜ் தாக்கரே பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார். இதனால் அவுரங்காபாத்தில் வரும் 9-ம் தேதி வரை கடும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

பால்தாக்கரே
பால்தாக்கரே

பாஜக இப்பிரச்னையை பெரிதாக்கி சிவசேனாவை இந்து விரோத கட்சியாக சித்தரிக்க முயல்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான இணை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே, ``அனுமன் பாடல்களை பாடுபவர்களை கைது செய்வதால் மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரேயின் ஆத்மா காயப்படும். ராம் பெயரில் அனுமன் பாடல்கள், சாலிசா பாடுபவர்களை கைது செய்வதை இங்குதான் பார்க்கிறேன்.

ஒலி பெருக்கி விவகாரத்தில் மகாராஷ்டிரா அரசு விதிமுறைகளை பின்பற்றவேண்டும். ஒலி மாசால் மக்கள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். ஒலி பெருக்கிகளுக்கு விதிமுறைகள் இருக்கிறது. அவற்றை இரவு மற்றும் அதிகாலையில் பயன்படுத்தக்கூடாது. இதனை மாநில அரசு பின்பற்றினால் நல்லது” என்று தெரிவித்தார்.

மகாராஷ்டிரா அரசும் அனைத்து ஒலி பெருக்கிகளுக்கும் அனுமதி பெற்றுக்கொள்ளும்படியும், வரும் 3-ம் தேதிக்கு பிறகு அனுமதி இல்லாத ஒலி பெருக்கிகள் அப்புறப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. அதோடு ஒலி பெருக்கிகளின் சத்தத்தையும் குறைத்துக்கொள்ளும்படி அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism