Published:Updated:

ஏரியா சபை இருக்கிறது... ஆனால் மக்களுக்கான அதிகாரம்?! - கேள்வியெழுப்பும் மக்கள் நல அமைப்புகள்

தமிழ்நாடு அரசு

அரசாணை 92-ன்படி, மக்கள் பங்களிப்பு இல்லாமல் டம்மியான ஏரியா சபை, வார்டு கமிட்டி அமைப்பது போன்ற ஒரு நிலையை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

ஏரியா சபை இருக்கிறது... ஆனால் மக்களுக்கான அதிகாரம்?! - கேள்வியெழுப்பும் மக்கள் நல அமைப்புகள்

அரசாணை 92-ன்படி, மக்கள் பங்களிப்பு இல்லாமல் டம்மியான ஏரியா சபை, வார்டு கமிட்டி அமைப்பது போன்ற ஒரு நிலையை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

Published:Updated:
தமிழ்நாடு அரசு

கிராமப்புறங்களில் ஆண்டுக்கு நான்கு முறை கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இந்தக் கூட்டத்தின் வாயிலாக மக்களின் பிரச்னைகள், தேவைகளை அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் நேரடியாகக் கேட்டு அறிய முடியும். இந்தக் கூட்டங்களிலேயே கிராமப் பஞ்சாயத்தின் வரவு, செலவு விவரம், செயல்படுத்தப்படவிருக்கும் திட்டங்கள் உள்ளிட்டவற்றை மக்கள் நேரடியாகத் தெரிந்துகொள்ள முடியும்.

கிராமசபை
கிராமசபை
எஸ். தேவராஜன்.

கிராமசபைக் கூட்டங்கள் நடத்துவதுபோல், மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் மக்களின் பங்கேற்புடன் ஏரியா சபை மற்றும் வார்டு கமிட்டி ஆகியவற்றை நடத்த வேண்டும் எனக் கடந்த 12 ஆண்டுகளாகப் பல்வேறு மக்கள் நல அமைப்புகள் கோரிக்கை விடுத்துவந்தன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தச் சூழலில், கடந்த 6-ம் தேதி தமிழ்நாடு அரசு ஏரியா சபை மற்றும் வார்டு கமிட்டி அமைத்து அதற்கான விதிகளுடன் அரசாணையை வெளியிட்டது. அந்த விதிகளில், ``நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் இருக்கும் ஒவ்வொரு வார்டுக்கும் வார்டு கமிட்டிகள் அமைக்கப்படும். ஒரு வார்டில் உள்ள ஏரியாக்களின் அடிப்படையில் வார்டு கமிட்டி உறுப்பினர்களை நியமித்துக்கொள்ளலாம். இதன் தலைவராக அந்த வார்டின் கவுன்சிலர் இருப்பார். நகராட்சிகளில் ஒரு வார்டில் நான்கு சபைகளும், பேரூராட்சியில் ஒரு வார்டில் மூன்று சபைகளும் இருக்கலாம். இந்தக் கூட்டம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நடைபெற வேண்டும்" எனத் தெரிவித்தது.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

ஆனால், ஏரியா சபைகள் வெறும் கோரிக்கை மனுக்கள் வழங்கும் இடமாக மட்டுமல்லாமல் ஜனநாயக முறைப்படி மக்களுக்கான அதிகாரம் வழங்கும் இடமாக அமைக்கப்பட வேண்டும் என மக்கள் நல அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இது குறித்து, தன்னாட்சி அமைப்பின் இணைச் செயலரும், வழக்கறிஞருமான சிவகுமரன், ``2010-ல் நகராட்சி சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதில், ஏரியா சபை, வார்டு கமிட்டி கொண்டுவரப்பட்டன. இதைக் கொண்டுவந்த பிறகும் நடைமுறைப்படுத்தவில்லை. தற்போது திமுக அரசு வந்த பின்னர் அரசாணை பிறப்பித்து ஏரியா சபை கொண்டுவரப்பட்டுள்ளது. அரசாணை 92-ன்படி, மக்கள் பங்களிப்பு இல்லாமல் டம்மியான ஏரியா சபை, வார்டு கமிட்டி அமைப்பது போன்ற ஒரு நிலையை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

சிவகுமரன்
சிவகுமரன்

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இந்தக் கூட்டத்தைக் கூட்டாமல் தேவைப்படும்போதெல்லாம் இந்தக் கூட்டத்தைக் கூட்டும் வகையில் திருத்தம் கொண்டுவர வேண்டும். அனைத்துத் தரப்பு மக்களின் கருத்துகளையும் கேட்கும் வகையில் ஏரியா சபைக் கூட்டம் இருக்க வேண்டும். மக்கள் மனு கொடுக்கும் ஏரியா சபையாக இல்லாமல், மக்களே அதிகாரம் படைத்தவர்களாகவும், தேவையான திட்டத்தைத் தாங்களே தேர்வு செய்யும் வகையிலும் விதிகளில் அரசு திருத்தம் கொண்டுவர வேண்டும்" என்றார்.