Published:Updated:

சென்னை மழைக்கு முன்னால் வடிகால் பணிகள் நிறைவடையாவிட்டால்..? - ஓர் அலர்ட்!

மழைநீர் வடிகால்

சென்னையில் மேற்கொள்ளப்படும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்த நேரத்தில் முடிவடையவில்லையென்றால் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும்?

சென்னை மழைக்கு முன்னால் வடிகால் பணிகள் நிறைவடையாவிட்டால்..? - ஓர் அலர்ட்!

சென்னையில் மேற்கொள்ளப்படும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்த நேரத்தில் முடிவடையவில்லையென்றால் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும்?

Published:Updated:
மழைநீர் வடிகால்

தலைநகர் சென்னையை மழை வெள்ளம் தாக்கும் சம்பவம் சர்வ சாதாரணமாகிப்போனது. ஒவ்வொரு முறை பாதிப்பு ஏற்படும்போதும், ஆய்வு நடத்தப்படுகிறதே தவிர, அதற்கு ஒரு நிரந்தரத் தீர்வு ஏற்பட்டதாகத் தெரியவே இல்லை. சென்னையைப் பொறுத்தவரை ஒவ்வொரு பருவமழை சமயத்திலும் மழைநீர் வெள்ளம்போலச் சூழ்ந்து பொதுமக்கள் பாதிக்கப்படுவது வழக்கமாகிப்போனது. புவியியல் கட்டமைப்பில் சென்னை மாநகரம் சமதளப் பரப்பில் அமைந்துள்ள நகரம்.

சென்னை வெள்ளம்
சென்னை வெள்ளம்

சென்னையில் மழைநீர் தேங்கும் பகுதிகளைக் கண்டறிந்து, மழைநீர் வடிகால்களைச் சரிசெய்ய வேண்டும் என்று எத்தனையோ நிபுணர்கள் குழு அறிக்கை வழங்கியிருக்கிறது. இருந்தபோதிலும், பெரிதாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 2021-ம் ஆண்டு, நவம்பர் மாதம் பெருமழையால் சென்னையில் ஏற்பட்ட வெள்ளம் மக்களின் இயல்புநிலையைப் புரட்டிப்போட்டது. இந்தச் சம்பவத்துக்குப் பிறகு அரசு சில வேலைகளை ஆரம்பித்திருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மழைநீர் வடிகால்:

பெருநகர சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை மழைநீர் வடிகால்துறை சார்பில் 2,071 கி.மீ தொலைவுக்கு மழைநீர் வடிகால் கட்டமைப்புகளையும், 30 கால்வாய்களையும் பராமரித்துவருகிறது. இந்த மழைநீர் வடிகால்களின் அனைத்துக் கால்வாய்கள் வழியாக அடையாறு, கூவம், கொசஸ்தலையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக மழைநீர் கடலில் கலக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால், உண்மை நிலவரப்படி, சென்னையிலுள்ள பல நூறு கிலோமீட்டர் நீள மழைநீர் வடிகால் கட்டமைப்பு பயனற்றுக் கிடைக்கிறது.

மழைநீர் வடிகால்
மழைநீர் வடிகால்

அதேசமயத்தில், இங்குள்ள பல மழைநீர் வடிகால் கட்டமைப்புகள் எந்தக் கால்வாயுடனும் இணைப்பில் கிடையாது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளால் வெள்ள பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு, ஆய்வு நடத்தி தமிழ்நாடு அரசிடம் அறிக்கையைத் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்ட கால்வாய் அமைத்தல், மழைநீர் வடிகால் அமைத்தல் போன்ற பல்வேறு விஷயங்களைச் செய்ய அரசு முன்வந்தது.

தொடங்கிய பணிகள்:

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளிலுள்ள மழைநீர் வடிகால் கட்டமைப்பை மாற்றியமைக்க அரசு முடிவுசெய்தது. இதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்றுவருகின்றன. அதே சமயத்தில் இன்னொரு பக்கம் மழைநீர் வடிகால்களைத் தூர்வாரும் பணிகளும் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. சிங்கார சென்னை திட்டம், உலக வங்கி நிதி உதவி, ஆசிய வளர்ச்சி வங்கி, மூலதன நிதி, வெள்ளத் தடுப்பு சிறப்பு நிதி என்று மொத்தம் 4,070 கோடி ரூபாய் செலவில், சுமார் 1,000 கி.மீ நீளமுள்ள மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒவ்வோர் ஐ.ஏ.எஸ் அதிகாரி நடைபெறும் பணிகளைக் கண்காணித்துவருகிறார்.

மழைநீர் வடிகால்
மழைநீர் வடிகால்

சென்னையில் நடைபெற்றுவரும் மழைநீர் வடிகால் பணிகள் வரும் செப்டம்பர் மாதத்துக்குள் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போதைய நிலையில் 40 சதவிகித பணிகள் மட்டுமே முடிந்திருப்பதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வேகத்தில் பணிகள் நடைபெற்றுவந்தால் கண்டிப்பாக வரும் செப்டம்பர் மாதத்துக்குள் அனைத்து வேலைகளையும் முடிக்க முடியாது என்று கூறப்படுகிறது. அதேசமயத்தில் சென்னை மாநகரத்தில் பல்வேறு தெருக்களிலும், சாலைகளிலும் மழைநீர் வடிகால் பணிகளுக்காகப் பள்ளம் தோண்டியதில், சாலைகள் குண்டும் குழியுமாகக் காணப்படுகின்றன.

உயிரிழப்பு:

சென்னையை அடுத்துள்ள பல்லாவரம் பகுதியிலிருந்து துரைப்பாக்கம் செல்லலும் ரேடியல் சாலையை அகலப்படுத்தும் பணியை நெடுஞ்சாலைத்துறை செய்துவருகிறது. சாலைகளை அகலப்படுத்தும் பணியுடன், சாலையின் ஓரங்களில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. கடந்த மே மாதம், மழைநீர் வடிகாலுக்காகத் தோண்டிய குழியில் இறங்கி கம்பி கட்டும் பணியில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 50 வயது நபர் ஒருவர் ஈடுபட்டிருந்தார். மழை காரணமாக ஈரமாக இருந்த மண் திடீரென சரிந்து அவர்மேல் விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.

உயிரிழந்த வங்கி மேலாளர்
உயிரிழந்த வங்கி மேலாளர்

சென்னை கே.கே.நகர் பகுதியில் மழைநீர் வடிகால் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில் கடந்த ஜூன் 24-ம் தேதி, தனியார் வங்கி மேலாளர், வாணி கபிலன் கே.கே.நகர் லட்சுமண சாலையிலிருந்து பி.டி.ராஜன் சாலை வழியாக காரில் சென்றுகொண்டிருந்தார். கார் கர்நாடக வங்கி அருகில் வரும்போது, அங்கிருந்த பெரிய மரம் சாய்ந்து கார் மீது விழுந்தது. இதில் காரில் பயணித்த வாணி உடல் நசுங்கி பலியானார். தொடர்மழை காரணமாகவும், மண்ணின் ஈரத்தன்மை காரணமாகவும் மரம் சாய்ந்தது என மாநகராட்சி சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதேநேரத்தில், மாநகராட்சியில் ஆபத்தான நிலையிலுள்ள மரங்களை வெட்டும் பணியும் தொடங்கப்பட்டிருக்கிறது.

சென்னையில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து, சென்னை மாநகராட்சி உயரதிகாரி ஒருவரிடம் பேசினோம். ``தற்போதைய நிலவரப்படி 40 சதவிகித பணிகள் முடித்திருக்கின்றன. கண்டிப்பாக இந்தப் பருவமழைக்குள் அனைத்துப் பணிகளையும் முடிக்க முடியாது. 2023-ம் ஆண்டு வரை இந்தப் பணிகளை முடிக்க அவகாசம் இருப்பது குறிப்பிடத்தக்கது. நகரப் பகுதிக்குள் வடிகாலுக்காகப் பள்ளம் தோண்டும்போதும் பல்வேறு சிக்கல்கள் இருப்பதால் சற்று தாமதம் ஏற்படுகிறது. ஆறுகள், கால்வாய்களில் தூர்வாரும் பணி, மழைநீர் வடிகால்களில் தூர்வாரும் பணி மிகத் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி

ஒவ்வொரு மண்டலத்திலும், ஓர் ஐ.ஏ.எஸ் அதிகாரி நடைபெற்றுவரும் பணிகளைக் கண்காணித்து ஆய்வு நடத்திவருகிறார். தவறு செய்யும் ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு வாரமும் அதிகாரிகள் ஒப்பந்ததாரர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார்கள். சென்னையில் 500-க்கும் அதிகமான தாழ்வான பகுதிகள் இருக்கின்றன.

மழைநீர் வடிகால்
மழைநீர் வடிகால்

இந்தப் பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. கண்டிப்பாக இந்தப் பருவமழையை எதிர்கொள்ளத் தேவையான அனைத்துப் பணிகளையும் மாநகராட்சி சார்பில் செய்துவருகிறோம்" என்றார்.

மழைநீர் வடிகால்
மழைநீர் வடிகால்

உண்மை நிலவரத்தைப் பார்த்தால் இந்தப் பருவமழைக்கு முன்பாக, சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடைய வாய்ப்புகள் மிகவும் குறைவு. நகரம் முழுவதும் பள்ளம் தோண்டி வைக்கப்பட்டிருக்கும் நிலையில், பெருமழை சமயத்தில் மழையால் பாதிக்கப்படுபவர்களோடு, இந்தக் குழியால் யாரும் பாதிக்கப்படாத வண்ணம் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே பலரின் வேண்டுகோளாக இருக்கிறது.