Published:Updated:

பாஜக-வுக்கு தாவிய திமுக கவுன்சிலர் - சென்னை மாநகராட்சியில் உறுப்பினர்கள் பலம் இரண்டாக அதிகரிப்பு!

பாஜகவுக்குக் கட்சி தாவிய திமுக கவுன்சிலர்

சென்னை மாநகராட்சியைச் சேர்ந்த திமுக கவுன்சிலர் ஒருவர், நேற்று பாஜகவில் இணைத்துள்ளார்.

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சியில் உள்ள 200 இடங்களில் திமுக 153 இடங்களிலும், அதிமுக 15 இடங்களிலும், காங்கிரஸ் 13 இடங்களிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலா நான்கு இடங்களிலும், ஐந்து இடங்களில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருந்தனர். மேலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்ட், அமமுக, பாஜக ஆகிய காட்சிகள் தலா 1 இடத்திலும் வெற்றி பெற்றிருந்தன.

சென்னை மேயர்
சென்னை மேயர்

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மறைமுக தேர்தலில் ஆர்.பிரியா சென்னை மாநகராட்சி மேயராகவும், மு.மகேஷ்குமார் துணை மேயராகவும் தேர்வு செய்யப்பட்டார். இந்த தேர்தலில், 134-வது வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் உமா ஆனந்தன் என்பவர் மட்டும் பாஜக சார்பில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், அதிமுகவைச் சேர்ந்த லியோ சுந்தரம் அக்கட்சியிலிருந்து விலகிய நிலையில், 198-வது வார்டில் தனித்துப் போட்டியிட்டார். அந்த தேர்தலில் வெற்றியும் பெற்றிருந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுக-வில் இணைத்தார். கட்சியில் பதவி அல்லது மாநகராட்சியில் ஏதாவது மண்டல அளவிலான பொறுப்பு கிடைக்கும் என்று அவர் எதிர்பார்த்ததாகக் கூறப்படுகிறது.

பாஜகவுக்குக் கட்சி தாவிய திமுக கவுன்சிலர்
பாஜகவுக்குக் கட்சி தாவிய திமுக கவுன்சிலர்

பல மாதங்கள் ஆகியும் லியோ சுந்தரத்துக்கு எந்த பொறுப்பும் ஒதுக்கப்படாத நிலையில், அவர் நேற்று மாலை சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அண்ணாமலை முன்னிலையில் பாஜக-வில் இணைந்தார். இவர் பாஜகவில் இணைத்ததையடுத்து, சென்னை மாநகராட்சியில் பாஜக உறுப்பினர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.