Published:Updated:

சஸ்பென்ஸ் வைக்கும் செந்தில் பாலாஜி - கோவை மேயர் தேர்வில் புதிய ட்விஸ்ட்!

கோவை மேயர் ரேஸ்...

தேர்தல் முடிவுகளில் யாருமே எதிர்பார்க்காத பிரமாண்ட வெற்றியை பெற்றிருக்கிறது தி.மு.க. அடுத்ததாக கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளர் யார் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சஸ்பென்ஸ் வைக்கும் செந்தில் பாலாஜி - கோவை மேயர் தேர்வில் புதிய ட்விஸ்ட்!

தேர்தல் முடிவுகளில் யாருமே எதிர்பார்க்காத பிரமாண்ட வெற்றியை பெற்றிருக்கிறது தி.மு.க. அடுத்ததாக கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளர் யார் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Published:Updated:
கோவை மேயர் ரேஸ்...

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அனைவரும் உற்றுநோக்கும் `மோஸ்ட் வான்டட்' மாவட்டமாக கோவை மாறிவிட்டது. தேர்தல் களம் உச்சகட்ட பரபரப்பில் இருந்த நிலையில், தேர்தல் முடிவுகளில் யாருமே எதிர்பார்க்காத பிரமாண்ட வெற்றியை பெற்றிருக்கிறது தி.மு.க. அடுத்ததாக கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளர் யார் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தி.மு.க வெற்றி
தி.மு.க வெற்றி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து வேட்பாளர்களும் சென்னை சென்று முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வந்துள்ளனர். மேயர் ரேஸில் இருப்பவர்கள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் முதல்வர் நெட்வொர்க்கில் தீவிரமாக முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேயர் வேட்பாளர் ரேஸில் முன்னாள் கவுன்சிலர் மீனாலோகு, மாவட்ட பொறுப்பாளர்கள் நா.கார்த்திக் மனைவி லக்குமி இளஞ்செல்வி, மருதமலை சேனாதிபதி மகள் நிவேதா ஆகியோரது பெயர்கள் அடிபடுகின்றன. மீனாலோகுவைப் பொறுத்தவரை ஏற்கெனவே கவுன்சிலராக நீண்ட காலம் மாநகராட்சி மாமன்றத்தில் சிறப்பாக செயல்பட்டு கருணாநிதி வரை கவனம் ஈர்த்தவர்.

மீனாலோகு
மீனாலோகு

தற்போதைய தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க உட்பட அனைத்து வேட்பாளர்களின் டெபாசிட் இழக்க செய்தவர் போன்றவை அவருக்கு பிளஸ்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கார்த்திக் மனைவி இலக்குமியும் முன்னாள் கவுன்சிலர். மாமன்றத்தில் நல்ல அனுபவம் உள்ளவர். கார்த்திக் துணை மேயராகவும், எம்.எல்.ஏ-வாகவும் இருந்துள்ளார். சட்டசபை தேர்தலில் தோற்கவே, மனைவியை மேயராக்கி மீண்டும் பவர் பாலிக்டிஸ்க்குள் நுழைய மூவ் செய்து வருகிறார். இருவருக்குமே கோவை மாநகராட்சியில் பணியாற்றிய அனுபவம் இருப்பது பிளஸ்.

லக்குமி இளஞ்செல்வி
லக்குமி இளஞ்செல்வி

கடந்த சட்டசபை தேர்தலில் கடைசி நேரத்தில் சீட் கிடைக்காததால் மருதமலை சேனாதிபதி அப்செட் ஆனார். அதனால் கல்லூரி மாணவியான தன் மகள் நிவேதாவை மேயராக்க நினைக்கிறார். திருவனந்தபுரத்தை போல கோவையிலும் இளம் மேயர் என்று இப்போதே ப்ரோமோஷன் செய்து வருகிறார்.

கோவை மாநகராட்சியிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பது நிவேதாவுக்கு பிளஸ். இதுதவிர தெய்வயானை, பேபி சுதா ரவி, மாலதி என்று பலரும் மேயர் பதவியை நோக்கி காய் நகர்த்தி வருகின்றனர். இதுகுறித்து தி.மு.க நிர்வாகிகள் சிலரிடம் பேசியபோது, ``மேயரை பொறுத்தவரை தலைவர் (ஸ்டாலின்) தான் முடிவு செய்வார்.

நிவேதா சேனாதிபதி
நிவேதா சேனாதிபதி

கோவை மாநகராட்சியில் 96 இடங்களில் வெற்றி பெற்றிருப்பதால் செந்தில் பாலாஜியின் குரலும் முக்கியத்துவம் பெறும். தேர்தலில் பெருமளவு செலவு செய்தது செந்தில் பாலாஜிதான். கடந்த சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட தோல்வியால் தலைமை இங்குள்ள மாவட்ட பொறுப்பாளர்கள் மீது வருத்தத்தில் உள்ளது. செந்தில் பாலாஜிக்கும் அவர்கள் மீது உடன்பாடு கிடையாது.

தி.மு.க-வை பொறுத்தவரை, கோவையில் இந்த வெற்றியை அப்படியே தக்கவைப்பது மிகவும் அவசியம். தவிர மேயர் ரேஸில் உள்ள பலரும் கடந்த காலங்களில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியுடன் தொடர்பில் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்கள். எனவே, நிர்வாகிகளின் உறவினர்களை அந்தப் பதவியில் நியமித்தால் அது பின்னால் சிக்கலை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

அதையெல்லாம் சிந்தித்துதான் மேயரை நியமிக்க வேண்டும். தவிர செந்தில் பாலாஜி என்ன யோசிக்கிறார் என்பதை யாராலும் கணிக்க முடியாது. கோவையில் தன்னை மீறி ஒரு ஆளுமை உருவாவதையும் அவர் விரும்ப மாட்டார்.

அவரது கன்ட்ரோலில் இருக்கும் ஒருவரைதான் அந்தப் பதவியில் அமர வைப்பார். தலைநகர முக்கியப்புள்ளி ஒருவரும், உளவுத்துறை ரிப்போர்ட்டும் மேயரை தேர்ந்தெடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். அதனால் யாரும் எதிர்பாராத ஒருவரே மேயராக நியமிக்கப்பட அதிகம் வாய்ப்பிருக்கிறது.

கோவை
கோவை

தற்போது மேயர் ரேஸில் உள்ளவர்களுக்கு 50-50 தான் வாய்ப்பு. ஒருவேளை அவர்கள் மேயர் பதவியில் நியமிக்கப்படாவிடின், அவர்களை சமாதானப்படுத்த துணை மேயர் அல்லது மண்டல தலைவர்கள் பதவி கொடுப்பதற்கும் வாய்ப்புள்ளது.” என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism