Published:Updated:

எழும்பூர் ரயில் நிலையம் அருகே வெளியேற்றப்பட்ட மக்கள்; வீடுகள் தருவதாக எம்.எல்.ஏ உறுதி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நகர்ப்புற வீடற்றோருக்கான கூடத்தில் உள்ள மக்கள்
நகர்ப்புற வீடற்றோருக்கான கூடத்தில் உள்ள மக்கள்

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே பல ஆண்டுகளாகக் குடியிருந்த மக்கள், அரசு அதிகாரிகளால் அங்கிருந்து வெளியேற்றப் பட்டதாகச் செய்திகள் வெளியாகின. உண்மையில் அங்கு நடந்தது என்ன?

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் அருகில், சாலையோரத்தில் 59 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அங்கு வசித்தவர்களைக் கடந்த சனிக்கிழமை (அக்.16) அன்று, மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறையினரின் உதவியோடு அந்த இடத்திலிருந்து வெளியேற்றினர்.

நகர்ப்புற வீடற்றோருக்கான கூடத்தில் உள்ள மக்களை சந்தித்த எம்.எல்.ஏ
நகர்ப்புற வீடற்றோருக்கான கூடத்தில் உள்ள மக்களை சந்தித்த எம்.எல்.ஏ

அங்கிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் கண்ணப்பர் திடல் அருகே உள்ள நகர்ப்புற வீடற்றோருக்கான கூடத்தில் தற்காலிகமாகத் தங்கவைக்கப்பட்டடிருக்கின்றனர்.

இந்த சம்பவத்தை அடுத்து, சென்னையில் உள்ள பூர்வகுடி மக்களை ஆளும் திமுக அரசு வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதாவதாகப் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். பல வருடங்களாக அந்தப் பகுதியில் வாழ்ந்துவரும் தங்களை வலுக்கட்டாயமா வெளியேற்றியதாகவும். அடுத்த சில நாள்கள் மட்டுமே அந்த வீடற்றோருக்கான கூடத்தில் தங்கவைக்கப் போவதாகவும், தங்களுக்கு மாற்று இடம் வழங்கக் கோரியும், அந்தப் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு நிரந்தர குடியிருப்புகளை ஒதுக்கித் தரவேண்டும் என்று, திமுக கூட்டணியிலிருக்கும் மார்க்சிஸ்ட் கட்சியினரும் போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அரசு தரப்பில் அவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்படும் என்று வாய்மொழியாகக் கூறப்பட்டது.

நகர்ப்புற வீடற்றோருக்கான கூடத்தில் உள்ள மக்களை சந்தித்த எம்.எல்.ஏ
நகர்ப்புற வீடற்றோருக்கான கூடத்தில் உள்ள மக்களை சந்தித்த எம்.எல்.ஏ

இந்த நிலையில், நகர்ப்புற வீடற்றோருக்கான கூடத்திலிருந்த மக்களை எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் சந்தித்தார். அப்போது பேசிய பரந்தாமன் ``நடைபாதையில் வசித்த மக்கள், மழைக்காலங்களில் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகத் தற்காலிகமாக இந்த முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர். இந்த மக்கள் தாற்காலிகமாகவே இங்குத் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இன்னும் 20 நாள்களில் உறுதியாக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடுகள் ஒதுக்கித் தரப்படும். தற்போது இந்த தங்கியுள்ளவர்களுக்கு போதிய கழிவறை வசதிகள் இல்லை என்று மக்கள் புகார் தெரிவித்திருக்கின்றனர். அதற்காக இங்கு நடமாடும் கழிவறை கொண்டுவர ஏற்படும் செய்யப்பட்டிருக்கிறது" என்று கூறினார்.

சென்னை: `அரும்பாக்கத்தில் குடிசைப் பகுதிகளில் உள்ள  வீடுகளை அரசு அதிகாரிகள் அகற்றினர்'
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு