Published:Updated:

சசிகலா தொடர்புடைய 2,000 கோடி ரூபாய் சொத்துகள் முடக்கம்! அடுத்தது என்ன?

சசிகலா
சசிகலா

'எந்தெந்தச் சொத்துகள் பினாமி பெயரில் உள்ளன?' என்பதை முழுவதுமாக விசாரித்து முடித்து அவர்களின் சொத்துகளை முடக்கிவருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சசிகலா தொடர்புடைய சுமார் 2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை இதுவரை வருமான வரித்துறையினர் முடக்கியுள்ளனர். சசிகலாவின் பையனூர் பங்களாவையும், 28.17 ஏக்கர் நிலத்தையும் பினாமி தடுப்புச் சட்டத்தின் கீழ் செப்டம்பர் 8-ம் தேதியன்று முடக்கியுள்ளனர். இது ஒரு தொடர்ச்சியான நடவடிக்கை. கடந்த ஆண்டு முதல் இதுவரை பல கட்டங்களாக சசிகலாவின் சொத்துகளையும், அவரது பினாமி பெயரிலுள்ள சொத்துகளையும் வருமான வரித்துறையினர் முடக்கிவருகின்றனர். இதுவரை சுமார் 2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. கடந்த 2017-ம் வருடம் சசிகலா, அவரது குடும்பத்தினர், நண்பர்கள் என 187 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது கிடைத்த ஆவணங்களைப் பரிசீலித்தபோது, பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அவர்கள் வாங்கியிருப்பதைக் கண்டுபிடித்தனர். 'எந்தெந்தச் சொத்துகள் பினாமி பெயரில் உள்ளன?' என்பதை முழுவதுமாக விசாரித்து முடித்து அவர்களின் சொத்துகளை முடக்கிவருகின்றனர். இந்தச் சொத்துகள் பரிவர்த்தனை 2003 முதல் 2005-ம் வருடத்துக்கு உட்பட்ட காலகட்டத்தில் நடந்திருக்கிறது.

2016-ம் ஆண்டு பண மதிப்பிழப்பு காலகட்டத்தில் ஒன்பது இடங்களை சுமார் 1,600 கோடி ரூபாய் அளவுக்கு வாங்கியிருக்கிறார்கள். அவை பற்றிய ஆவணங்கள் முழுவதையும் கைப்பற்றியதும், கடந்த ஆண்டு சென்னை, கோவை, புதுச்சேரி ஆகிய இடங்களில் 1,600 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒன்பது சொத்துகளை முடக்கினர். அதைத் தொடர்ந்து, போயஸ் தோட்டம், தாம்பரம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்த 300 கோடி ரூபாய் சொத்துகளை முடக்கினர். கொடநாடு பங்களா, சிறுதாவூர் பங்களா ஆகியவையும் வருமான வரித்துறையினரின் நடவடிக்கையிலிருந்து தப்பவில்லை. இப்படியாக இதுவரை சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

சசிகலா - பையனூர் பங்களா
சசிகலா - பையனூர் பங்களா

இவை தவிர, மேலும், சின்ன அளவிலான 87 சொத்துகளை அடையாளம் கண்டுபிடித்துவைத்திருக்கிறார்கள் வருமான வரித்துறையினர். அவை தொடர்பான பூர்வாங்க விசாரணைகளை முடித்து முடக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

இது பற்றி வருமான வரித்துறை அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, ``எங்களிடம் ரெய்டில் சிக்கிய பெரிய சொத்துகளை இதுவரை முறைப்படி விசாரித்து சசிகலாவுக்கும், அவரது பினாமி பிரமுர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பினோம். அதன் பிறகுதான், சொத்துகளை முடக்கும் நடவடிக்கையில் இறங்கினோம். அந்தச் சொத்துகள் இருக்கும் ஏரியாவிலுள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கும் அதே நோட்டீஸ் கொடுத்திருக்கிறோம். அந்தச் சொத்துகளை யாரும் விற்கவோ, அடமானம்வைக்கவோ கூடாது என்று எச்சரித்திருக்கிறோம். சென்னை, சென்னை புறநகரில் சொத்துகளை 'ஸ்ரீ ' என்று தொடங்கும் பினாமி கம்பெனியைச் சேர்ந்த இரண்டு பிரமுகர்கள் பெயரில் வாங்கியிருக்கிறார்கள்.

சசிகலா தொடர்புடைய பையனூர் பங்களா; முடக்கியதன் பின்னணி இதுதான்!

அவர்கள் இருவரும் சசிகலாவின் உறவினர்கள். குறிப்பிட்ட அந்த கம்பெனிக்கு பெரிய பிஸினஸும் கிடையாது. அந்த நிறுவனத்தின் பேனரில் வாங்கப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள இடங்கள் முடக்கப்பட்டுள்ளன. உரிய ஆதாரங்களை நாங்கள் வைத்திருக்கிறோம். நிச்சயமாக சசிகலா தரப்பினர் நீதிமன்றத்துக்குப் போவார்கள். அப்படிப் போகும்போது, மேலும் பல தகவல்கள் வெளிவரும்'' என்றார். சசிகலா தரப்பில் அவரின் ஆதரவு பிரமுகர்களிடம் பேசியபோது, ``கம்பெனிகளின் பார்ட்னராக இருக்கும் சசிகலாவை `பினாமி’ என்று வர்ணித்து சில சொத்துகளை முடக்கியுள்ளனர். வேண்டுமென்றே வழக்கைப் போட்டு அலையவிடுவதுதான் அவர்களின் நோக்கம். அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படுகிறார்கள். சசிகலா நிரபராதி என்பதைச் சட்டத்தின் முன் நிரூபிப்பார்'' என்பதோடு முடித்துக்கொண்டார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு