Published:Updated:

டைம்லைன்: ஜம்மு-காஷ்மீர் இணைப்பு நாள்... 1947 அக்-26 முதல் இன்றுவரை!

ஜம்மு-காஷ்மீர்

இதுவரை பாகிஸ்தானோடு ஏற்பட்ட நான்கு போர்களில் மூன்று போர்கள் காஷ்மீருக்காகத்தான். 1947-ல் பல போராட்டங்களைக் கடந்து பிரிட்டிஷ், இந்தியாவிற்கு விடுதலை அளித்தப் பிறகு, இந்துக்கள் அதிகம் வாழும் பகுதிகள் இந்தியாவுடனும், இஸ்லாமியர் அதிகம் வாழ்ந்த பகுதிகள் பாகிஸ்தானுடனும் பிரிந்தன.

டைம்லைன்: ஜம்மு-காஷ்மீர் இணைப்பு நாள்... 1947 அக்-26 முதல் இன்றுவரை!

இதுவரை பாகிஸ்தானோடு ஏற்பட்ட நான்கு போர்களில் மூன்று போர்கள் காஷ்மீருக்காகத்தான். 1947-ல் பல போராட்டங்களைக் கடந்து பிரிட்டிஷ், இந்தியாவிற்கு விடுதலை அளித்தப் பிறகு, இந்துக்கள் அதிகம் வாழும் பகுதிகள் இந்தியாவுடனும், இஸ்லாமியர் அதிகம் வாழ்ந்த பகுதிகள் பாகிஸ்தானுடனும் பிரிந்தன.

Published:Updated:
ஜம்மு-காஷ்மீர்

இமயம் என்ற இயற்கை அரணும், எழில் கொஞ்சும் பனிப்பிரதேசமும் கொண்ட அழகிய இயற்கை பூமி காஷ்மீர்.  இயற்கை எழிலுக்குப் பேர் போன காஷ்மீர், அரசியல்ரீதியாக அடிக்கடி சர்ச்சைக்குள்ளாகும் பகுதி என்பதை யாராலும் மறுக்க முடியாது. போர், களவரம், ஆக்கிரமிப்புச் சண்டை, சீண்டல், தீவிரவாதம், மதவாதத் தாக்குதல் என ரத்தம், ரணம், ரௌத்திரம் என்று சிகப்பு மையில் தன் வரலாற்றை வரைந்து வருகிறது காஷ்மீர். இத்தகைய காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க ஒப்பந்தம் கையெழுத்தான நாள்தான் இன்று (அக்டோபர் 26).  இதுவரை பாகிஸ்தானோடு ஏற்பட்ட நான்கு போர்களில் மூன்று போர்கள் காஷ்மீருக்காகத்தான். 1947-ல் பல போராட்டங்களைக் கடந்து பிரிட்டிஷ், இந்தியாவிற்கு விடுதலை அளித்தப் பிறகு, இந்துக்கள் அதிகம் வாழும் பகுதிகள் இந்தியாவுடனும், இஸ்லாமியர் அதிகம் வாழ்ந்த பகுதிகள் பாகிஸ்தானுடனும் பிரிந்தன. 

காஷ்மீர்
காஷ்மீர்

ஆனால் ஆங்கிலேயர்கள், இந்தியாவை ஆட்சி செய்தாலும்கூட 60 சதவிகித நிலத்தை மாகாணமாக நேரடியாகவும், 40 சதவிகித நிலத்தை தன் கட்டுப்பாட்டில் இருந்த சமஸ்தான அரசு மூலம் மறைமுகமாகவும் ஆட்சி செய்தனர். அதன்படி சுமார் 540 சமஸ்தான அரசுகள் இருந்தன. இவை தங்கள் விருப்பத்தின் பெயரில் இந்தியா அல்லது பாகிஸ்தானுடன் இணைந்து கொள்ளலாம் அல்லது சுயாட்சி செய்து கொள்ள இந்திய யூனியனின் பிரிப்பு திட்டமான `மவுண்ட் பேட்டன்' திட்டத்தின்படி பிரிட்டிஷ் சர்க்கார் அனுமதியளித்தது. இதன் பெயரில், சுதேச மன்னர்கள் தாங்களே முடிவெடுக்க வேண்டியிருந்தது. ஆனால், இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின்  தீவிர முயற்சியின் காரணமாகப் பல சமஸ்தானங்கள் இந்தியாவுடன் இணைந்து கொண்டன. இதுவே, பரப்பளவில் பாகிஸ்தானைவிட இந்தியா பெரிதாகக் காரணமாக அமைந்தது. ஆனால், ஹைதராபாத் நிஜாம், ஜுனாகத் அரசு, காஷ்மீர் மன்னர்  ஆகியோர் தனி மன்னராட்சியை தொடர விரும்பினர். இதில், ஜுனாகத்தும், ஹைதராபாத் நிஜாமும் இணைந்தது வேறு கதை. ஆனால், காஷ்மீர் அப்படி அல்ல. இந்தியா மற்றும் பாகிஸ்தான் மதத்தின் பெயரிலேயே பிரிந்தது என்பதால் அதுவே காஷ்மீர்  விவகாரத்தில் பிரச்னையாக மாறியது. 

சர்தார் வல்லபாய் படேல்
சர்தார் வல்லபாய் படேல்

காஷ்மீர் மன்னர் ஹரிசிங் ஓர் இந்து. ஆனால், அங்கு வசித்த மக்களில் பெரும்பான்மையினர் இஸ்லாமியர்களாக இருந்தனர். அதுமட்டுமின்றி, இஸ்லாமியர்களுக்குத் தனி நாடு என்ற கோரிக்கை எழுந்தபோது, பாகிஸ்தான் என்ற வார்த்தையை  ரஹமத் அலி என்பவர் உருவாக்கினார். இதில் PAKISTAN என்ற வார்த்தை "P-Punjab, A-Afghania, K-Kashmir, S-Sindh & TAN-Baluchistan" என பொருள்படும்படி உருவாக்கப்பட்டது.  K-காஷ்மீரைக் குறிப்பதால் இதுவே பாகிஸ்தானுக்குக் காஷ்மீர் மீதான ஆர்வத்தை அதிகரித்தது. மேலும், அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இந்து மதத்தைப் பின்பற்றவே, எப்போது வேண்டுமென்றாலும் இந்தியாவுடன் காஷ்மீர் இணையலாம் என பாகிஸ்தானியர்கள் கருதினர். எனவே, தங்களுடன் காஷ்மீரை இணைக்கப் பாகிஸ்தான் அரசு, மறைமுகமாகக்  காஷ்மீர் அரசருக்குச் சிக்கலை அதிகரித்தது.

இந்தியா - பாகிஸ்தான்
இந்தியா - பாகிஸ்தான்

வேறு வழியின்றி இந்தியாவுடன் காஷ்மீரை இணைக்க சில நிபந்தனைகளோடு, 26 அக்டோபர் 1947-ல் ஒப்புக்கொண்டார் மன்னர் ஹரி சிங். இந்த ஒப்பந்தத்தின்படி காஷ்மீருக்கான சட்டப்பிரிவு 370 மற்றும் 35(A) உருவாக்கப்பட்டது. இதன்படி, காஷ்மீரின் பாதுகாப்பு, தகவல் தொடர்பு, நாணயம் மற்றும் அயல்நாடு உறவு போன்ற முக்கியத் துறைகள் முழுமையாக இந்திய அரசு கட்டுப்பாட்டிலும், ஏனைய துறைகளில் முடிவு எடுக்க காஷ்மீரின் உள் மாநிலரசு அவையின் அனுமதியோடு செயல்படலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. சட்டப்பிரிவு 370 காஷ்மீருக்கு  சிறப்பு அந்தஸ்தையும், சட்டப்பிரிவு 35A காஷ்மீர் மக்களுக்கும் சில சலுகைகளையும் வழங்கியது. இந்தியாவில் அதிகபட்ச மாநில சுயாட்சி அதிகாரம் பெற்றது காஷ்மீர்தான். இந்தச்சூழலில், 1948-ல் முதன்முதலாக இந்தியா-பாகிஸ்தான் போர் மூண்டது.

ஐ.நா சபை
ஐ.நா சபை

பிறகு, ஐ.நா சபையின் தலையீட்டால் இருநாட்டுப் படைகளும் தாங்கள் இருக்கும் இடம் வரை தன்வசப்படுத்திக் கொண்டன.  இப்பிரச்னைக்கு பொது வாக்கெடுப்பு மூலம் தீர்வு காண, இந்தியாவும் ஐ.நா சபையில் ஒப்புக்கொண்டது. ஆனால், இன்று வரை பொது வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை. பாகிஸ்தானைப் போல் இந்தியாவும் காஷ்மீர்மீது ஆர்வம் காட்டக் காரணம், இந்திய-காஷ்மீர் மன்னர் ஒப்பந்தம் மட்டுமின்றி இமயமலை என்ற இயற்கை அரண் பெற்றிருப்பதும், நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை, மதிப்பு மற்றும் கௌரவம் என பல காரணங்கள் வரிசைப்படுத்தப்படுகின்றன. ஆனால் இப்பிரச்னையில் லாபம் பெற்றது என்னவோ சீனாதான். இந்தியா - பாகிஸ்தான் காஷ்மீரை உரிமைகோர,  மூன்றாவதாகச் சீனா லடாக் பிராந்தியத்தின் அக்சய் சின் பகுதியை இந்தியாவிடமிருந்து ஆக்கிரமிப்பு செய்துள்ளது. நாம் வரைபடத்தில் காண்பது போல் காஷ்மீர் இல்லை.

இந்தியா, சீனா, பாகிஸ்தான்
இந்தியா, சீனா, பாகிஸ்தான்

இந்தியாவின் கட்டுப்பாட்டிலுள்ள ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக், இரண்டாவதாகப் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர், மூன்றாவதாக சீனக் கட்டுப்பாட்டில் உள்ள அக்சய் சின் லடாக் பகுதி என 3 பிரிவுகளாக இருப்பதே இன்றைய உண்மை நிலை. இதனை தாண்டி 1965-ல் இந்தியா-பாகிஸ்தான் போருக்குப் பிறகு சிம்லா ஒப்பந்தம். 1989-90-ல் பண்டிட் தாக்குதல்... அவ்வப்போது ராணுவ சண்டை, தீவிரவாத தாக்குதல், 1999-ல் கார்கில் போருக்குப் பிந்தைய லாகூர் ஒப்பந்தம். பற்றாக்குறைக்குச் சீன சீண்டல் வேறு. இவ்வாறாக இன்று வரையிலும் தீர்க்கப்படாத பிரச்னையாகவே இருக்கிறது. மேலும், சட்டப்பிரிவு 370 மற்றும் 35(A) நீக்கி, காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் என்று இரு யூனியன் பிரதேசங்களாக மாற்றும் சட்டத்திருத்தம் 5 ஆகஸ்ட் 2019-ல் தாக்கல் செய்யப்பட்டு மத்திய அரசால்  நிறைவேற்றப்பட்டது. இதன் பிறகும் அங்கு பல்வேறு பிரச்னைகள் வெடித்தவாரே இருக்கின்றன.