Published:Updated:

பாஜக, காங்கிரஸ் சமபலத்துடன் மோதிக்கொள்ளும் `மணிப்பூர் தேர்தல் களம்' எப்படியிருக்கிறது?!

பிரேன் சிங், ஓக்ராம் இபோபி சிங்

பா.ஜ.க Vs காங்கிரஸ் - மணிப்பூர் தேர்தல் களத்தில் முந்தி நிற்பது யார்?!

பாஜக, காங்கிரஸ் சமபலத்துடன் மோதிக்கொள்ளும் `மணிப்பூர் தேர்தல் களம்' எப்படியிருக்கிறது?!

பா.ஜ.க Vs காங்கிரஸ் - மணிப்பூர் தேர்தல் களத்தில் முந்தி நிற்பது யார்?!

Published:Updated:
பிரேன் சிங், ஓக்ராம் இபோபி சிங்

ஐந்து மாநிலத் தேர்தல்களில் அதிகம் கவனிக்கப்படாத மாநிலமாக இருக்கிறது மணிப்பூர்! இருந்தும், அங்கு தேசிய கட்சிகளான காங்கிரஸும் பா.ஜ.க-வும் கிட்டத்தட்ட சமபலத்துடன் நேருக்கு நேர் மோதிக்கொள்வதால் மணிப்பூர் தேர்தல் களமும் பரபரப்பாகவே இருக்கிறது. மணிப்பூர் தேர்தல் களத்தில் முந்துவது யார்?

மணிப்பூரில் 2002 முதல் 2017 வரை தொடர்ந்து மூன்று முறை ஆட்சிசெய்தது காங்கிரஸ் கட்சி. அந்த மாநிலத்தின் முக்கியத் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஓக்ராம் இபோபி சிங் மணிப்பூரில் காங்கிரஸை வலுவான கட்சியாக மாற்றினார். மாநில மக்களின் மனநிலை அறிந்து முடிவுகளை எடுத்ததன் மூலம் மணிப்பூரில், தன்னை தவிர்க்க முடியாத தலைவராகவும் நிலை நிறுத்திக்கொண்டார் ஓக்ராம். 2017 தேர்தலில்கூட அதிக இடங்களை வென்ற கட்சியாகக் காங்கிரஸ் கட்சியே இருந்தது. இருந்தும், மாநிலக் கட்சிகளைக் கூட்டு சேர்த்து ஆட்சியமைத்தது பா.ஜ.க.

ஓக்ராம் இபோபி
ஓக்ராம் இபோபி
Twitter

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

2017 தேர்தலில் நடந்தது என்ன?

மணிப்பூர் சட்டமன்றத்தில் மொத்தம் 60 இடங்கள் இருக்கின்றன. 31 இடங்கள் என்பது பெரும்பான்மையாக இருந்தது. கடந்த 2017 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 28 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக இருந்தது. 21 இடங்களில் வெற்றிகண்ட பா.ஜ.க., மாநிலக் கட்சிகள், சுயேச்சைகளின் ஆதரவைப் பெற்று ஆட்சியமைத்தது. மாநிலக் கட்சிகளான நாகா மக்கள் முன்னணி, தேசிய மக்கள் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளும் தலா நான்கு இடங்களில் வெற்றிபெற்றிருந்தன. இந்த இரண்டு கட்சிகளும் பா.ஜ.க-வுடன் சேர்ந்ததால் மணிப்பூரில், காங்கிரஸை வெளியேற்றி ஆட்சியைப் பிடித்தது பா.ஜ.க. பிரேன் சிங் மணிப்பூரின் முதல்வரானார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கட்சி தாவிய எம்.எல்.ஏ-க்கள்!

கடந்த ஐந்து ஆண்டுகளில் மணிப்பூரில் கட்சியை பலப்படுத்தும் பணிகளைத் தீவிரப்படுத்தியிருந்தது பா.ஜ.க. அதன் விளைவாக எட்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பா.ஜ.க-வில் இணைந்தனர். திரிணாமுல் காங்கிரஸ், லோக் ஜனசக்தி கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் இருவரும் பா.ஜ.க-வில் இணைந்துவிட்டனர். காங்கிரஸின் முக்கிய நிர்வாகிகள் சிலரையும் தங்கள் பக்கம் இழுத்துக்கொண்டது பா.ஜ.க. பல்வேறு கட்சிகளிலிருந்தும் நிர்வாகிகள் பா.ஜ.க-வில் இணைந்திருப்பதன் காரணமாக, இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடலாம் என்ற முடிவில் கட்சி மேலிடம் இருப்பதாகத் தெரிகிறது.

மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்
மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்

பா.ஜ.க Vs காங்கிரஸ்!

ஒருபுறம் கட்சி தாவிய எம்.எல்.ஏ-க்கள் பா.ஜ.க-வுக்கு பலமாக இருந்தாலும், கட்சிக்குள்ளேயே முதல்வர் பிரேன் சிங்குக்கு எதிரான மனநிலையில் உள்ள தலைவர்கள் இருப்பது பா.ஜ.க-வுக்கு மைனஸாக இருக்கிறது. மணிப்பூர் பா.ஜ.க., இரண்டாகச் செயல்பட்டுவருகிறது. 2020-ம் ஆண்டில், மணிப்பூர் துணை முதல்வராக இருந்த தேசிய மக்கள் கட்சியின் ஜாய்குமார் சிங், பா.ஜ.க-வுக்கான தனது ஆதரவைத் திரும்பப்பெற்றார். அவரோடு இணைந்து மூன்று பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களும், ஒரு சுயேச்சை எம்.எல்.ஏ-வும் பிரேன் சிங் அரசுக்கான ஆதரவை விலகிக்கொண்டனர். இருந்தும் சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மை பெற்று, தப்பித்தது பா.ஜ.க அரசு. பிரேன் சிங் மீதிருக்கும் அதிருப்தியால் பா.ஜ.க உட்கட்சிப்பூசல்களைச் சந்தித்துவருகிறது.

பா.ஜ.க-வின் கூட்டணியிலிருக்கும் நாகா மக்கள் முன்னணியும், தேசிய மக்கள் கட்சியும் எதிர்வரும் தேர்தலில் தனித்துப் போட்டியிடப்போவதாக அறிவித்துவிட்டன. இதனால், பா.ஜ.க தனித்துப் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. பா.ஜ.க மேலிடமும், `மணிப்பூரில் தனித்துப் போட்டியிட்டு, கட்சியின் பலத்தைச் சோதித்துப் பார்த்துவிடலாம்' என்ற முடிவிலேயே இருக்கிறது. தேர்தலுக்குப் பின்னர், தேவைப்பட்டால் கூட்டணி அமைத்துக்கொள்ளலாம் என்ற திட்டத்தில் கட்சித் தலைமை இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஓக்ராம் இபோபி தலைமையிலான மணிப்பூர் காங்கிரஸ் கட்சி சில முக்கிய நிர்வாகிகளை இழந்திருந்தாலும், ஆட்சியைப் பிடிப்பதற்காக பல்வேறு வியூகங்களை வகுத்துவருகிறது. பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பின்னர் மணிப்பூரில் ஏற்பட்டிருக்கும் சில புதிய பிரச்னைகளைக் கையிலெடுத்து பிரசாரம் செய்துவருகிறார்கள் காங்கிரஸ் தலைவர்கள். ஓக்ராம் இபோபி, மணிப்பூர் மக்களிடம் தனக்கு இருக்கும் செல்வாக்கைக்கொண்டு பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருக்கிறார். பா.ஜ.க ஆட்சிமீது மக்களுக்கு இருக்கும் அதிருப்திகளை ஹைலைட் செய்து பிரசாரம் செய்துவரும் காங்கிரஸ் கட்சியினர், செல்வாக்குமிக்க வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதிலும் அதிக கவனம் செலுத்திவருகின்றனர்.

பா.ஜ.க Vs காங்கிரஸ்!
பா.ஜ.க Vs காங்கிரஸ்!

களத்தில் முந்துவது யார்?

சமீபத்தில், ரூ.4,800 கோடி மதிப்பிலான மெகா திட்டங்களை மணிப்பூரில் தொடங்கிவைத்திருக்கிறார் பிரதமர் மோடி. நலத் திட்டங்கள் மூலமாகவும், கட்சி தாவியிருக்கும் தலைவர்களின் செல்வாக்கு மூலமாகவும் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள முடியும் என பா.ஜ.க தலைமை நம்புகிறது. காங்கிரஸ் கட்சியோ, பா.ஜ.க-வில் நடக்கும் உட்கட்சிப்பூசல்களைச் சாதகமாக்கி, தேர்தலில் வெற்றிபெறலாம் என்ற திட்டத்திலிருக்கிறது. இரு கட்சிகளும் கிட்டத்தட்ட சமபலத்தில் இருப்பதால், மணிப்பூரில் தொங்கு சட்டமன்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. கடந்த தேர்தலைப்போலவே அங்கு கூட்டணி ஆட்சி அமைவதற்கான வாய்ப்புகளே அதிகம் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். பெரும்பாலான கருத்துக்கணிப்புகளும் இதையே சொல்கின்றன.

எனவே, மணிப்பூரில் கூட்டணி ஆட்சி அமையுமா இல்லையா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism